[தஞ்சாவூர் நால்வர் கட்டுரை படித்திருந்தால் இது மேலும் தெளிவாகும்]
தஞ்சாவூர் நால்வரில் வடிவேலுவின் இசை மற்றும் சதிர் நடனத் திறத்தினை வியந்து போற்றினார் திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீஸ்வாதித் திருநாள்.
அக்காலத்தில் அவருக்கு ரூபாய் நூறு மாதச் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.
இப்பணம் அரசவை அதிகாரிகளின் சம்பளத்தைவிட அதிகம் என்பதால் உள்ளூர பல மனக்கசப்புகள் எழுந்துள்ளன.
தன் அரசவைக்கு வரும் பல இசைக்கலைஞர்களின் திறமையையும் சோதிக்கும் பணியை இவருக்கு அரசன் பணித்தார்.
தனது பதங்களுக்கும் வர்ணங்களுக்கும் இசையமைக்கும் பணியையும், பல இசை-நாட்டிய நாடகங்களைச் சீரமைத்துக் கொடுக்கும் பணியையும் அரசன் வடிவேலுவுக்கு அளித்தார்.
வடிவேலு தஞ்சை அரசவையில் தன் 22ஆம் வயது முதல் சுமார் எட்டு ஆண்டுகள் வித்வானாக விளங்கினார்.
”மா குருகுஹ ஸ்வாமிக்கி நே தாஸுடை” என்ற முத்திரை பதியும் வண்ணம் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீது தன் மரியாதை பதிந்த கீர்த்தனையைப் பாடியவர் வடிவேலு.
தீக்ஷிதரின் தம்பி மூலம் வயலின் கலையையும் கற்றுக் கொண்ட வடிவேலுவின் திறமையை ஸ்வாதித் திருநாள் மிகவும் வியந்தார், தென்னிந்திய இசையில் அதைப் பக்க வாத்யமாக நுழைக்க முயற்சிகள் மேற்கொள்ள வைத்தார்.இதன் மூலம் வீணை தனி வாத்யமாக உயர்ந்தது என்பதில் ஐயமில்லை.
1834ல் வடிவேலைவை கெளரவிக்கும் வண்ணம் மஹாராஜா தந்தத்தால் ஆன வயலின் ஒன்றைப் பரிசாக்கினாராம்.
பந்தநல்லூர் சதிர் ஆட்ட முறையைக் கட்டுக்கோப்பாக்கி முறை செய்த வடிவேலுவுக்கு ஆர்யசாலாவில் அரசர் மிகப் பெரிய வீடு ஒன்றையும் கட்டி அளித்தார்.கேரளத்தில் பெண்களும் நடனத்தில் ஈடுபட வேண்டும் என்ற உயர் பார்வையில் மோகினி ஆட்டத்தை வடிவமைக்க வடிவேலுவைப் பயன்படுத்தினார்.
சதிராட்டத்தில் தாளத்துக்கு ம்ருதங்கத்தைப் புகுத்திய புதுமையும் வடிவேலுவையே சாரும்.
தீக்ஷிதரின் தம்பி பாலுஸ்வாமியும் வயலின் கலையை அறிமுகம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார். அவர் தான் சென்னையில் ஜார்ஜ் கோட்டையில் வயலின் கற்றுக் கொண்ட முதல் தமிழர் எனலாம்.
வடிவேலு மிக உயர்ந்த விலை மிக்க பரிசுகளையும் ரூபாய் 700ம் பெற்றுள்ளார்.
ஆனால் சில கட்டத்தில் பலரது பொறாமையாலும் தவறான தகவல்களாலும் அரசருக்கும் வடிவேலுக்கும் இடையில் உள்ள நெருக்கம் குறைந்தும் உள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹரிபாடுக்குத் தன் வீட்டை மாற்றினார்.சும்மாவா சொன்னார்கள் பொருள் மீது கொண்ட அன்பு முறியும் என்று? சும்மாவா மும்மூர்த்திகளும் அரசவைகளை அண்டாமல் இருந்தனர்?!
தன் மீது வடிவேலு உருவாக்கிய பதத்தைக் கொண்ட பரதத்தைக் கூட அரசன் விமர்சித்தாராம்.இவையெல்லாம் வடிவேலுக்கு ஒரு பாடம் எனலாம்.
”இறைவனைப் பாடு, என்னை விட்டுவிடு” - என்று எல்லோர் முன்னிலும் ஸ்வாதி கூறினாராம்.இது அவருக்கு த்யாகையர் மூலம் கிடைத்த ஆன்மீக விழிப்புணர்வே என்று எண்ணத் தோன்றுகிறது.
தானும் மற்ற மஹாராஜாக்கள் போல் ஏதோ வாழ்ந்தோம், புகழ் பாட வைத்தோம், பரிசளித்தோம் என்று எண்ணாமல் த்யாகையரின் வாழ்கையும் பிற அடியார்தம் வாழ்க்கையும் ஸ்வாதித் திருநாளை மாற்றியுள்ளது.தன் இசைக் கலையைத் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீபத்மநாபனுக்கே அவர் அர்ப்பணிக்க ஆரம்பித்தார்.
”பாவயாமி ரகுராமம்” என்ற ராகமாலிகைப் பாடல் அவர் இறுதியாக எழுதியது எனலாம்.
பொருள் மீதும் பதவி மீதும் பற்றை அறுத்த அரசன் சமாதானமாகத் தன் சாம்ராஜ்யத்தை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான் கோயிலைத் தவிர.ஆன்மீகச் செல்வமே தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன் மக்களுக்கும் நிலைத்தது என்பதையும் அவன் மனதார உணர்ந்தான்.
கன்னய்யா பாகவதர் என்ற இசை மேதையை வடிவேலு ஸ்வாதித் திருநாளுக்கு அறிமுகம் செய்ய, அவர்மூலம் மஹாராஜா பல த்யாகையர் கீர்த்தனைகளைக் கேட்டு அவரை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தாராம்.1830ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆவணத்தின் படி திருவையாறு ஸ்ரீத்யாகராஜருக்கு மரியாதை செலுத்திய நிதி பற்றிய குறிப்புகள் உள்ளன.ஆனால் அவற்றை அவர் ஏற்கவில்லை.மன்னர்களைப் பார்த்து மாறினர் பலர் என்றால் இவரோ பல மஹான்களைப் பார்த்து மாறினார் என்பதில் ஐயம் இல்லை.சுமார் ஒரு வருடகாலம் திருவையாற்றில் த்யாகையரின் வீட்டுக்கு அருகில் இருந்து அவரது நன்மதிப்பைப் பெற்று அழைத்துள்ளார். ”நிதி சால சுகமா?” கீர்த்தனை மூலம் ஸ்வாதித் திருநாளுக்கு பதில் கூறினார் த்யாகையர்.தன் குருவின் மீது இத்தனை மதிப்பைக் கொண்டு இருந்த வடிவேலுவை மிகவும் மதித்தார் த்யாகையரின் சீடர் திருவொற்றியூர் வீணைக் குப்பையர்.
தஞ்சாவூர்ப் பயணம் முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் பயணிக்கும் வழியில் கொள்ளையர்கள் வடிவேலுவின் பொருட்களைக் கொள்ளை கொண்ட போது வயலினை மட்டும் மன்றாடிக் கேட்டு மீட்டாராம்.அவருக்கும் அதன் மூலம் பொருள்வழி மீதான பற்று மாற வழி உண்டானது எனலாம்.
With regards,
Dr.M.Madeswaran
7.5.2015, Madras