மதுரைக் கீரந்தையார் - lyrics
மதுரை நன் நாகனார் - Music
யாழ் - பண்ணு யாழ்
மதுரையில் உறையும் திருமாலே...
ஊழிக் காலம் போயின பின், மீண்டும் அண்ட சராசரத்தில் ஐம்பூதங்கள் தோன்றின.அவற்றுள் பூமியை நீ வராஹ அவதாரம் கொண்டு காத்து, அதன் மீது எண்ணற்ற உயிர்களைப் படைத்தாயே!அதனால் இந்த யுகம் வராஹ கல்பம் என்றல்லவா போற்றப்படுகிறது?
இவ்வாறு எத்தனையோ கப கோடிக் காலங்கள் உள்ளன.அவை யாவும் உன் லீலை அன்றோ?
ஞானியர் உன்னை அனைத்துள்ளும் பொதிந்து நிறைந்த அந்தர்யாமி என்றே கூறுவர்.
பனைக் கொடி கொண்ட பலதேவனும் நீயே.
உன் அழகிய பரந்த மார்பில் அசையும் பலவகை அணிகலன்கள் வானில் தோன்றும் வானவில்லைப் போல் மிளிருமே.
அவற்றுள் மின்னும் வெண்முத்துக்கள் எண்ணற்ற நிலாக்களை ஒத்தனவே.
பூமி தேவியைக் காத்த போது உன் மார்பில் வடுகள் உண்டாயின.அவற்றால் மகிழ்வாயே.அசுரர்கள் உன்னால் பாழ் படுவரே.அவரை அழிக்க வல்ல உன் வெண்மையான சங்கு இடி போல் ஒலிக்குமே.
உன் பொன் சக்கரம் தீ போல் ஜ்வலிக்கும்.அது எமனை ஒத்தது.அதன் மூலம் அசுரர் தம் தலைகள் பனங்காய்கள் போல் அல்லவா உருளும்?
யாவரையும் காக்கும் தன்மை கொண்ட உன் நீல மேனி, சிவந்த கண்கள், பொறுமையுடன் அன்பர்க்கு பூமிபோல் அருளும் தன்மை, கார் கால மேகம் போல் அருளை வழங்கும் கருணை ஆகியவற்றை வேதங்கள் போற்றுமே!
உண்மையான அந்தணர்கள் உரிய முறையில் யாகம் செய்ய நீ அதில் வெளிப்பட்டு அருள்கிறாய்.
தேவர்களுக்கு அமுதைக் கடைந்து கொடுத்து அருளினாயே.அதனால் தானே அவர்களுக்கு இறப்பு இல்லை.அது உன் தயை அல்லோ?
கருடக் கொடி கொண்ட எம்மானே!
என் அறிவு மழுங்கி உன்னை மறவாமல் மெய் ஞானம் கொள்ள அருள்க.என் குடும்பமும் சுற்றமும் சதா உன் பாதங்களில் உண்மையான பக்தியுடன் பணிகிறோம்.