ஆவணி அவிட்டம்
இன்று சமூஹத்தில் சில வகுப்பினருள் ஆண்கள் பூணூல் மாற்றிக் கொள்வதும், அதைத் தொடர்ந்து காயத்ரி ஜபம் செய்வதும் பல ஆயிரம் ஆண்டுகளாய் உள்ள வழக்கம்.
ஆணுக்கு ஆறு அல்லது ஏழு அல்லது ஒன்பது வயதாகும் போது பாட சாலையில் கல்வி கற்க அனுப்புவர்.அக்கல்வி என்பது உயர்ந்த பரம்பொருளான ப்ரம்மத்தை உணரும் வழியாக அமைந்து இருந்தது.
அதற்கு முன் குடும்பத்தார் சுற்றம் கூடி முறையான ஆசான் மூலம் ஆணுக்குப் பூணூல் கல்யாணம் செய்வர் [இன்று அதி வெறும் சடங்காகப் போய் விட்டது]
அப்போது ஒரு பாடசாலையில் மாணவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசான் பெற்றோர் முன்னிலையில் அக்குழந்தைக்கு வலியுறுத்துவார்.
பூணூல் யக்ஞோபவீதம் எனப்படும்.யக்ஞம் - சடங்குகள். அதைப் பயில அவனுக்கு அனுமதி தரும் சின்னம்.வேத காலத்தில் பெண்களுக்கும் பூணூல் உண்டு.
சத்ரிய வம்சத்தினருள் அரசிகள் பூணூல் அணிவர்.அதன் வழக்கத்தில் மதுரை மீனாக்ஷி இன்று பூணூல் மாற்றிக் கொள்வாள்.
பூணூல் அணிவதன் மூலம் மாணவன் தன்னை உயர் கல்விக்கு உட்படுத்துவான்.
தனக்கும் ப்ரம்மத்துக்கும் இடையில் உள்ள பந்தனம் தான் அப்பூணூல் என்று உணர்க.அதனால் தான் அது ஆணின் தாலி ஆயிற்று.
காயத்ரி - சூரிய சக்தி தான் காயத்ரி.
அதன் மூலம் தான் நாம் அனைவரும் ஒளி சக்தியை உட்கூறாகக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளோம்.
காயத்ரி என்றால் - விழிப்புணர்வுத் தன்மை என்றும் அர்த்தம்.
ஒவ்வொரு தேவதைக்கும் காயத்ரி உண்டு.
அதை முறையாக ஜெபிக்க விழிப்புணர்வு கைகூடும்.
சூரியன் உதயம் ஆகும் போதும், அஸ்தமிக்கும் போதும் காயத்ரி ஜெபம் செய்வது மிக்க பலன் தரும்.
உயர் தொழில் செய்யும் பல வகுப்பினர் பூணூல் அணிந்தனர்.இன்றும் பல சமூஹத்தினர் அணிகிறார்கள்.மஹாக்கவி பாரதி ஒரு தாழ் வகுப்பு மனிதனுக்குப் பூணூல் சார்த்தி அவனையும் மாற்றினார்.
ஆனால் இன்று இவை எல்லாம் வெறும் கண்மூடிச் சடங்காக, பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் ஒரு நாள் கூத்தாக மாறி விட்டது.பலர் பூணூலே அணிவதில்லை.
நம் விழிப்புணர்வே நம் பூணூல், அதன் மூலம் உயர் நற்காரியங்கள் செய்க.உயர் நற்காரியங்களையே வேதம் யக்ஞம் என்கிறது.
ஓம்!