முற்காலப் பாண்டியர் மூவர்
 
குமரிக் கண்டம் நடத்திய பின் இதை நடத்த வேண்டும்.
முற்காலப் பாண்டியர்
 
இன்றுள்ள மதுரை மாநகரில் இருந்து ஆண்ட பாண்டியருக்கு முன் பல பாண்டியர் தேசத்தை ஆண்டனர்.ஆனால் ஒரு சிலரைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் கிடைக்கின்றன.அவற்றைக் கொண்டு அவர்களைப் பற்றி அறிய முடியும்.
 
அடி அலம்ப நின்ற பாண்டியன்
இவனைப் பாண்டியன் மாகீர்த்தி என்பர்.
இவனைப் பாண்டியன் நெடியோன் என்றும் கூறுவர்.
இன்றுள்ள கன்யாகுமரிக்குக் கீழ் குமரி நாடு இருந்த காலத்தே கபாடபுரத்தில் இருந்து இவன் ஆட்சி செய்தான்.அவன் மழைநீர்ச் சேகரிப்புத் திட்டத்தை ஏற்படுத்தினான்.அவன் பல் துளி - பஃறுளி - மழையின் பல துளிகள் சேகரிக்கும் ஆறு - என்ற நீர் வழிப்பாதையை வெட்டினான்.
 
தன் நாடு மேலும் கடல் கோளால் அழியக்கூடாது என்று கடல்தெய்வமான குமரிக்கு விழா எடுத்தான்.
 
இவன் காலத்தில் தான் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறியது.
 
இவன் போர் செய்யும் போது பொதுமக்கள் யாவரும் துன்பம் அடையாமல் போரின் இலக்கணத்தைப் பின்பற்றியவன்.
 
இவன் நீண்ட காலம் பாண்டிய நாட்டை ஆண்டான்.
 
கடல்கோளால் தென்மதுரை அழிய மீண்டும் தன் தேசம் நீரால் அழியக்கூடாது என்று இவன் குமரித்தெய்வத்தின் சக்திவேலைக் கடலில் வீசி எறிய, கடல் இவன் பாதங்களில் கழுவிடுமாறு வர இவன் இப்பெயர் கொண்டான்.இவன் கபாடபுரத்தை ஆண்டவன்.
 
பல்யாக சாலை முதுகுடுமிப் பாண்டியன் பெருவழுதி
இவன் தேசத்தின் நலனுக்காகப் பல யாகங்கள் செய்தான்.
அதன் மூலம் தேசத்தின் பாக்ய சக்தியை அதிகரித்தான்.
இவன் ஆயிரம் யாகங்கள் செய்தான் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறும்.
இவன் மாவீரன், கொடையாளி, கற்றவர்களை மதிப்பவன், சிவன் மீது உயர் பக்தி கொண்டவன்.
 
பாண்டியன் முடத்திருமாறன்
கடல்கோளால் பஃறுளி ஆறுடன் மலைகள் கொண்ட கபாடபுரமும் நிலமும் அழிய, தப்பித்த மன்னன் இவனே.கபாடபுரத்தில் ஐம்பத்தி ஒன்பது பாண்டியர்கள் ஆண்டனர்.அவர்களுள் இறுதியானவன்.இவனும் இவன் மக்களும் அமைச்சும் தப்பித்து மணலூரில் இருந்து அதன் பின் அவன் வழித்தோன்றலாகிய குலசேகரன் மூலம் இன்றைய மதுரை உருவானது.
 
இவன் தான் இன்றைய குமரி முனையில் குமரி அம்மையைக் கோயிலுள் அமர்த்தினான்.
 
இவன் செய்யுள் இயற்றுவதில் வல்லவன்.இவனது இரு செய்யுள்கள் நற்றிணையில் உள்ளன.
 
இன்றுள்ள சில முற்காலப் பாண்டியரின் செய்யுள்கள் சங்க இலக்கியங்களில் காணப்பட்டால், அவை எஞ்சிக் கிடைத்த சில செய்யுள்களாகக் கொள்ள வாய்ப்பு உண்டு.