தனுஷ்கோடி
பாரத தேசத்தின் தென் திசையில் தமிழகம் அமைகிறது
அது கிழக்குக் கடற்கரையுடன் அமைகிற மாநிலம்.
ராமநாதபுர மாவட்டத்தில் வங்கக்கடலில் அமைகிற சிறிய தீவு தான் ராமேஸ்வரம்.
அதன் பெயர் பாம்பன் தீவு.
பாம்பு அணிந்தவன் பாம்பன்
பாம்பைப் பாயாகக் கொண்டவன் பாம்பன்
சிவனின் திருமாலின் பெயர் கொண்ட தீவு
ராமேஸ்வரம் என்பது கோயிலின் பெயர்.
ராஜேராஜேஸ்வரம் - சோழன் ராஜராஜன் எழுப்பிய கோயிலின் பெயர்.
அது போல் ஸ்ரீராமன் எழுப்பிய கோயில் ராமேஸ்வரம்
ராமனின் ஈஸ்வரன் உறையும் கோயில் என்றும் பொருள் கொள்க.
ராமேஸ்வரம் தீவின் ஒரு பகுதி தான் தனுஷ்கோடி.
தனுஷ்கோடிக்கும் இலங்கை தேசத்தின் தலைமன்னார்க்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 18 KM தான்.
மன்னார் வளைகுடாவை நோக்கி அமைகிறது தனுஷ்கோடி.
கி.பி 1946,47ல் ஏற்பட்ட சில கடல் மாற்றங்களால் தனுஷ்கோடியின் ஐந்து அடி அளவு நீருள் மூழ்கியது.ஏழு கிலோ மீட்டர் தூரமும் அரைக் கிலோ மீட்டர் அகலமும் கொண்டதே தனுஷ்கோடி கடலுள் மூழ்கியது.
ஸ்ரீராமன் ஏற்படுத்திய சேது - பாலம் தனுஷ்கோடி வழியே இலங்கை நோக்கிச் செல்வதை அமெரிக்க நாசா செயற்கைக்கோள் மூலம் காட்டுகிறது.
ஸ்ரீராமன் எழுப்பிய சேதுவை அவன் பல காரணங்களுக்காகத் தன் வில்லால் எல்லைக் கோடு இட்டு வரையறை செய்தான்.மேலும் வானில் இருந்து பார்க்கும் போது வில்லின் முனை போள் இருக்கும் தீவுக்கு தனுஷ்கோடி - வில்லின் முனை என்றும் பெயர் கூறலாம்.
ஸ்ரீராமன், லக்ஷ்மணன், சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான் உடன் கூடிய வானர சேனை இலங்கைக்கு தனுஷ்கோடி மூலம் செல்வதைக் கண்களில் கொண்டு வருக.
நலன் என்ற பொறியாளன் மூலம் கடலில் உள்ள மணல் திட்டுக்கள் குறுகிய பால அமைப்புகள் கொண்டு இணைக்கப்பட்டன என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. கி.மு 7000.இக்கட்டத்தில் தான் கடல்கோளால் தென்மதுரை அழிந்து இலங்கை பிரிகிறது என்பதைக் குமரிக்கண்டம் கட்டுரை மூலம் அறிக.
கி.பி 1964முன் இத்தீவினில் இன்றுள்ள உலக ப்ரசித்தி பெற்ற ராமநாத ஸ்வாமி சிவன் கோயில் மட்டுமே முக்கியமான இடம், சுமார் பல ஆயிரம் மக்கள் சுற்றுலாவும் மீன்பிடித்தொழிலும் கப்பல் மூலம் வணிகமும் செய்து வாழ்ந்த ஊர் தனுஷ்கோடி.
இதை ”மின் இந்திய சிங்கப்பூர்” என்பர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக முக்கிய போக்குவரத்து நிகழ்ந்த இடம் தனுஷ்கோடி.
சமய ரீதியில் காலம் காலமாக வடதேசத்தினரும் தென் தேசத்தினரும் காசிக்கும் குமரிக்கும் ராமேஸ்வரத்துக்கும் செல்வது, தீர்த்தம் ஆடிக் கோயில் வழிபாடு, முன்னோர் வழிபாடு செய்வது உயர் ஒற்றுமையையும் பண்பாட்டையும் காட்டும்.
கோடி தீர்த்தம் என்ற தனுஷ்கோடியின் கடல்கள் தீர்த்தம் மிகப் புண்யமாக மக்களால் மதிக்கப்படக் காரணம் ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசம் பட்டதே ஆகும்.
வினாயகர் கோயில், ஸ்ரீராமன் கோயில் [தனுஷ்கோடி ராமன் - இன்று சென்னை பம்மல் ஊரில் இருக்கிறார்] கிறிஸ்துவ தேவாலயம் ஆகியன இருந்துள்ளன.அவற்றின் எச்சங்கள் இன்றும் அழிந்த தனுஷ்கோடியில் காண உண்டு.
சரி இந்த தனுஷ்கோடியில் இன்று யார் வாழ்கிறார்கள்?
சில மீனவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
ஏன்?
புயலால் அழிந்த ஊரை அரசாங்கம் ”பிசாசு நகரம்” என்றே கூறி, ”மக்கள் வாழ்வதற்கு ஏற்ற ஊர் இல்லை” என்று ப்ரகடணம் செய்து விட்டது.
எவ்வித மிக மிக அடிப்படை வாழ்க்கை வசதிகளும் இன்று அங்கு இல்லை.
சுற்றுலாப் பயணிகள் வண்டிகள் மூலம் சென்று பார்த்து வரும் இடமாக உள்ளது.
தற்போது தரமான சாலை போடப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி உள்ளது.
சரி அப்படி என்ன தான் புயல் செய்தது?
இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைச் சீற்றங்களில் ஒன்று 1964, dec 22 தனுஷ்கோடி புயல்.
இது ஒரு கடல்கோளே.ஆழிப்பேரலைகளுடன் சேர்ந்த புயல்.இதன் மூலம் தீவின் பல பாகங்கள் நீருள் மூழ்கின.சுமார் இரண்டாயிரம் மக்கள் கடலுள் தொலைந்து இறந்தனர்.
கோரமான ஆழிப்பேரலைகளுடன் கூடிய அப்புயலைப் பற்றி மிக விவரமாக நாட்டுப்புறப் பாடல்கள் ஒப்பாரியாகவே வர்ணிப்பதைக் காண்கிறோம்.[பரவை முனியம்மா பாடியுள்ள பாடல் யூ ட்யூபில் உள்ளது]
17 December 1964, அன்று தெற்கு அந்தமான் கடலில் ஒரு காற்ரழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது.19 December அன்று அது புயலாக மாறியது.21 December 1964 அன்று அது மேற்கு நோக்கி நகர்ந்தது.400 -550 km \hour வேகத்தில் புயல் காற்று பயணித்தது.On 22 December அன்று இலங்கையில் வவுணியாவைப் புயல் கடந்து அன்று இரவில் ராமேஸ்வரத் தீவில் தனுஷ்கோடி நோக்கி அப்புயல் வருகிறது. இருபத்தி மூன்று அடி உயரத்தில் ஆழிப்பேரலைகள் எழுந்தன.
தனுஷ்கோடியை இரவில் தாக்கிய புயலும் அலைகளும் துறைமுகத்தை அழித்தன, ஊரை விழுங்கின, இரண்டாயிரம் மக்களை விழுங்கின, பாம்பன் - தனுஷ்கோடி பயணிகல் ரயில்வண்டியை விழுங்கின, பள்ளி மாணக்கருடன் கூடிய 115 பேரையும் கடல் விழுங்கியது.
December 2004, சுனாமி தாக்கும் முன் ஐந்நூறு மீட்டர் கடல் உள்வாங்கும் போது விழுங்கப்பட்ட ஊரின் சில எச்சங்கள் காணப்பட்டன.
அன்று வானொலியும் பத்திரிக்கையும் மட்டும் தான் ஊடக சக்திகள்.
இன்று இணையதளம் மூலம் பல காணொளிக் காட்சிகள் மூலம் மீண்டும் தனுஷ்கோடி மீட்டுருவாக்கம் செய்யப்படுவதைக் காண்கிறோம்.பல்வேறு எஞ்சிய வயோதிகர்தம் நேர்காணல்கள் மூலம் பல அரிய தகவல்கள் வெளியாயின.
தனுஷ்கோடி மீண்டும் உயர் வணிகம், சுற்றுலா நகர் ஆகவே மக்கள் அவா கொள்கிறார்கள்.
முகுந்தராயர் சத்திரம் என்ற இடம் முதல் அரிச்சல் முனை [9.5 KM] என்ற தனுஷ்கோடியின் கடைசி முனைவரை தேசிய நெடுஞ்சாலை 2016 ல் போடப்பட்டது.அதன் எல்லையில் அசோகச் சக்கரம் கொண்ட தூண் உள்ளது.இன்று அது வரை நம் வாகனத்திலேயே செல்லமுடியும்.ஆனால் அதுவரை ஜீப் வண்டிகள் மூலம் அழகிய சதுப்பு நில வழிப்பயணம் மேற்கொண்டே நாம் சென்றோம்.
சென்னை எக்மோர் முதல் தனுஷ்கோடி வரையிலான தொடர்வண்டி ஓடியது.அதே போல் இந்தியப் பெருநிலத்தில் உள்ள மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை ஒரு ரயில் ஓடியது.அதன் ரயில் நிலையங்களின் எச்சம் இன்றும் உள்ளது.சென்னை ரயில் போட் மெயில் எக்ஸ்ப்ரஸ் ஆகும்.அது கடலில் கப்பல் அருகில் சென்று நிற்பது போல் தண்டவாள அமைப்பு இருந்தது.அதில் இருந்து இறங்கி இலங்கி செல்வோர் கப்பலில் ஏறுவார்களாம். அடித்த புயலில் பயணிகளுடன் மண்டபம் - பாம்ப வழி - தனுஷ்கோடி ரயில் தான் கடலுள் மூழ்கியது.
சரி, பல்வேறு வயோதிகர்கள் [தப்பித்தவர்கள் ] என்ன கூறுகிறார்கள்?
ராமேஸ்வரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி பகுதி பாம்பன் தீவில் அமைகிறது.
வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் முனையே அரிச்சல் முனை. [அரி - அதாவது ஹரியான ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும் சேதுவின் முனை]
ஐம்பது ஆண்டுகட்கு முன்பு பல வணிக நிறுவனங்கள் இங்கே இருந்து கப்பல் மூலம் வியாபரம் செய்து பொருள் ஈட்டிய ஊர் தனுஷ்கோடி.
பல நூறு ஆண்டுகளாய் வணிகர் ஐந்நூற்றி இருவர், முன்னூற்றி இருவர், நூற்றி இருவர் போன்ற வணிகக் குழுக்கம் பங்குதாரராக இருந்து வியாபாரம் செய்தனர்.இதைப் பற்றிய கல்வெட்டும் தற்போது கிடைத்துள்ளது.
பர்மாவில் வெட்டப்பட்டு விற்கப்படும் தேக்கு, சந்தனம் ஆகிய மரங்களைக் கடலில் வீச அவை காற்றில் திசையில் தனுஷ்கோடியைச் சேரும் என்பது இருந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் தனுஷ்கோடியில் இருந்து இலக்கைக்கு வணிகம், மக்கள் பயணம் ஆகியவற்றிற்காகத் துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர் தம் தென் இந்திய ரயில்வே அதிகாரி ஹென்றி மட்ராஸ் - தனுஷ்கோடி போட் மெயில் ரயில் வண்டியை அறிமுகம் செய்தார்.தனுஷ்கோடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
மூன்று நீராவிக் கப்பல்கள் கட்டப்பட்டன.
இத்திட்டத்தின் அடிப்படையில் பாம்பன் ரயில் பாலம் 1914 பிப்ரவரி இருபத்தி நாலாம் தேதியில் உருவானது.
தீவினுள் ஒரு பயணிகள் ரயிலும் இயங்கியது.
படகுத்துறை, ரயில் நிலையம், சுங்க வரி வசூலிக்கும் அலுவலகம், பள்ளி, தேவாலயம், கோயில்கள், தபால் தந்தி நிலையம் ஆகியன இருந்தன.
இண்டோ சிலோன் எக்ஸ்ப்ரஸ் என்றே மக்கள் அதிகம் கூறுவர்.பலர் கொழும்புவுக்கே பயணச்சீட்டும் எடுப்பர்.ரயில் தண்டவாளத்தின் மற்றொரு புறம் ஆழமான படகுத்துறையில் கப்பல் இருக்க, இலங்கை செல்வோர் அதில் ஏறித் தலைமன்னார் போவர், அங்கிருந்து மீண்டும் ரயில் மூலம் கொழும்பு செல்வர்.இதைப் போல் உலகில் எங்கும் இருந்ததே இல்லை.ஆங்கிலேயனின் கீழ் இலங்கை இந்தியாவுடன் இணைத்தே பார்க்கப் பட்டது.
ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.காரணம் இரவுகளில் காற்றில் மணல்கள் பாதையை மூடும் , அதைச் செப்பனிட்டுக் கொண்டே செல்லும் நிலை இருந்தது.
கால்நடைகள் தமிழகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் ஏற்றுமதி ஆயின.
எஸ் ஐ ஆர் - சவுத் இண்டியன் ரயில்வே என்று முத்திரை இடப்பட்ட மூன்று கப்பல்கள் இயங்கின.
கிரிக்கெட் குழுக்கள் கப்பல் மூலம் சென்று இலங்கையில் விளையாடின.
காலை ஏழு மணிக்குக் கிளம்பி இரண்டு மணி நேரப்பயணத்தில் தலைமன்னாரை அடையலாம்.கப்பலில் சிற்றுண்டி தருவர்.
டிசம்பரில் புயல் இரவில் தனுஷ்கோடியைத் தாக்கியதை யாரும் அனுமானிக்கவே இல்லை.
ஆறு அடி உயரத்துக்குக் கடல் நீர் தீவெங்கும் பரவிட, காற்றும் மழையும் பேரலைகளும் வீச, உள்ளூர்ப் பயணிகள் ரயில் கடலுள் போனது.ஒரே ஒரு பெட்டி மட்டும் கரையில் சரிந்து இருக்க, மீதி ரயில் கடலுள் மூழ்கியது.
வானொலியும் பத்திரிக்கையும் மட்டுமே இருந்த அக்காலத்தில் இரு நாட்கள் கழித்தே புயலில் கோரமானச் சீரழிவு தேசத்துக்குத் தெரிய வந்ததாம்.
பாம்பன் பாலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாம்.
புயலில் தப்பித்து எஞ்சியோர் மீண்டு மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அன்று முதல் ”வாழத் தகுதி அற்ற ஊர்” என அரசு அறிவித்தது.
புயலுக்குப் பின் போக்குவரத்து அற்றுப் போன கதியில், சிலர் புனித நீராடக் குதிரைகள் கழுதைகள் பயன்படுத்த அதன் பின் ஜீப்புகள் வந்தன.
ஊற்றுத் தண்ணீரே குடிநீர் எனக் கொண்டு இன்றும் சில நூறு மீனவர்கள் மட்டும் அவ்வூரின் மீதுள்ள பற்றினாலும் மீன் பிடித் தொழிலினாலும் வாழ்கிறார்கள். புயலில் எஞ்சியோரும் வாழ்கிறார்கள்.
அப்துல் கலாம் அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் தற்போது சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் வெளிச்ச வசதி வந்துள்ளது.
மீன் பிடித்தல், சங்கு சிப்பி மணி மாலைகள் விற்றல், மீன் உணவு விற்றல், சிறு தீனிக்கடை ஆகியன மூலம் வாழ்கிறார்கள் சுமார் முன்னூறு குடும்பத்தினர்.
அவர்கள் இயற்கையுடன் வாழ்வதையே அதிகம் விரும்புகிறார்கள்.நவீன வாழ்க்கை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
புதிய தேசிய நெடுஞ்சாலை மூலம் எளிதான போக்குவரத்து வசதி வந்து பல சுற்றுலாப் பயணியர் தனுஷ்கோடி வருகிறார்கள், மேலும் மீன்களை ராமேஸ்வரம் கொண்டு செல்வதும் எளிமையாயிற்று என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
இந்த மீட்டுருவாக்கம் நல்ல தரமான அமைதியான வாழ்வை நெய்தல் நில மக்களுக்கு அளிக்கட்டும்.