18 steps of Ayyapan - Tamil version [UNI5 explanation]

Sakthi foundation

பொன்னு பதினெட்டாம் படி....

சபரி மலையில் 18 படிகளை ஏறிச் சென்றால், அதோ பொன் அம்பலத்துக்குள் ஐயன் ஐயப்பன் நெய் விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கிறார்.

கொஞ்சம் அவரைப் பார்ப்பதற்கு முன் வெளிவாசல் மேல்கூரையைப் பாருங்கள் - ’தத்வமஸி’ என்று எழுதி இருக்கிறதா?

அது தான் சபைமலைக்குச் செல்பவருக்கு வாழ்க்கையில் கிடைக்கப் போகும் மிக உயர்ந்த செல்வம்!

அது வந்து விட்டால் சகல கஷ்டங்களும் போகும், சகல சுகங்களும் வரும், அஷ்ட லக்ஷ்மிகளும் உங்களுடையதே!

அது என்ன தத்வமஸி?

”நீ உனக்குள் உன்னை எப்படிக் காண்கிறாயோ அப்படியே  நான் உன் வாழ்க்கையை ப்ரதிபலிக்கிறேன்” என்பது ஐயப்பனின் சத்ய வாக்கு.

அதாவது  ”நீ எதுவோ அதுவே நான்” என்ற விளக்கத்தின் சுருக்கமே தத்வமஸி.

இதைத் தான் ”மனம் போல் மாங்கல்யம்”, ”எண்ணத்தைப் போலத் தான் வாழ்க்கை” என்று கூறுவார்கள் பெரியவர்கள்.

இந்த தத்வமஸி நிலையை எப்படி அடைவது?

அதற்குத் தான் சபரிமலை யாத்திரையும் மண்டல விரதமும் நமக்கு இருக்கின்றன.

நவராத்ரியில் வாழ்க்கையின் வளர்ச்சியைக் காட்டும் கொலுப்படிகள் போல சபரிமலையில் உள்ள 18 படிகளும் நம் விரதத்திற்கு வழிகாட்டியாக, குறிப்பேடாக அமைந்துள்ளன.

அவற்றை தினமும் உணர்ந்து பின்பற்றினால் தத்வமஸியை அடையலாம், வாழ்வில் சுக-துக்கம் இல்லாமல் என்றென்றும் நிம்மதியாக வேண்டியதை வேண்டியவாறு பெற்று வாழ முடியும்.

18 படிகள் எதை உணர்த்துகின்றன?

சுகமான வாழ்க்கையை வாழ விடமால் நமக்குள் பல தீய எண்ண சக்திகள் உள்ளன.அவற்றையே ’மகிஷ” என்று கற்பனையால் ஐயப்பனுடன் போராடும் ராட்சசியாகப் புராணம் காட்டுகிறது.இவை நம் ஜீவ சக்தியை அடியோடுக் குறைத்து வாழ்க்கையை சூன்யத்துக்குத் தள்ளுகின்றன.இந்த தீய எண்ணங்களை மாற்றவே குருவருள் மூலம் மண்டல விரதம், முடிக்கட்டு, மலைப் பயணம், படி ஏற்றம் எல்லாம்.....

படி 1 - கண்களால் எதைப் பார்த்தால் மனம் தடுமாறி, நிலை தடுமாறுமோ, அந்த விஷயங்களைத் தவிருங்கள்!

படி 2 - காதுகளால் எதைக் கேட்டால் மனம் அலை பாய்ந்து தேவையில்லாத எண்ணங்களில் மூழ்குமோ அதை விட்டு விலகுங்கள்!

படி 3 - உடலுக்கும் மனதுக்கும் தீமை செய்யும் அசுத்தமான, சுகமூட்டும்  போதை உணர்வு ஏற்றும் சில வஸ்துக்களை மோந்து பார்க்க வேண்டாமே!

படி 4 - உணவிலும் பேச்சிலும் கட்டுப்பாடு தேவை ஐயா!

படி 5 - உடல் சுகத்தைத் தூண்டும் எந்த வகை ஸ்பரிச உணர்ச்சியையும் சற்றுத் தள்ளி வையுங்களேன்!

படி 6 - 10 - கண்களையும், காதுகளையும், மூக்கையும், நாக்கையும், தோலையும் சுகம் காணத் தூண்டும் செயல்களைச் செய்ய நினைக்கும் மனதின் எண்ணங்கள் இவை.இவற்றுக்கு ஒரு முட்டுக்கட்டை போட முயற்சியுங்கள் பார்க்கலாம்!

படி  11 - அளவுக்கு அதிகமான ஆசை, எதன் மீதும் வெறி, தீராத பேராசை - இதையே காமம் என்கிறோம்.

படி  12 - எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, அதனால் மற்றவர்கள் மீது ஏற்படும் கோபம்.

படி 13 - ''எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், நான் பிடித்த முயலுக்கு மூனே கால்'' என்ற திமிர் கலந்த ஆணவம்.

படி 14 - மற்றவர்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாத பொறாமை.

படி 15 - எச்சில் கையால் காக்காயைக் கூட விரட்ட விரும்பாத கஞ்சப்பிசினாரித் தனம்.

படி 16 - ”நான் மட்டுமே சுகமாக வாழ வேண்டும், அதற்காக யாருக்கு என்ன கேடு வந்தாலும் கவலையில்லை” என்ற க்ரோத புத்தி.

படி 17 - வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, பொரணி, சதா குறை கூறல், எல்லாரையும் எல்லாவற்றையும் குறை கூறுதல், தன் தவற்றை ஏற்றுக் கொள்ளாத மட்டு புத்தி.

படி 18 - செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் சோம்பலாய் தள்ளிப் போடுதல், செய்ய மறுத்தல்

18 படிகளுக்கும் காவல் இருக்கும் கருப்பு சாமி நமக்குள் விரத காலத்தில் நாம் தடுமாறும் போது நமக்கு எச்சரிகையும் செய்து, சீர் செய்யும் நம் விழிப்புணர்வே ஆவார்.அடிக்கடி அவரது முறுக்கு மீசையையும் மிரட்டும் கண்களையும் நினையுங்கள்.....

வருடத்துக்கு ஒரு முறை வீட்டை சுத்தம் செய்து வண்ணம் பூசுவது போல், வருடத்துக்கு ஒரு முறை நம் அகம் [வீடு, மனம்] என்ற மன வீட்டை மண்டல விரதம் மூலம் சுத்தம் செய்வோமே!

மேற்கண்ட 18 தீய எண்ணங்களையும் படிப்படியாக விரதம் மூலம் மாற்ற முடியும்.18 ஆண்டுகள் தூய மண்டல விரதம் மேற்கொண்டு அவ்வாறு மலைக்குச் சென்றால், ஒவ்வொரு படியாக நம்மைக் கடக்க வைத்து இறுதியில் தத்வமஸி செல்வத்தை ஐயப்பன் அருள்வார்.அந்நிலையை அடைந்தவருக்கே குரு ஸ்தானம் தரப்படுகிறது.

அன்பர்களே! நாம் எல்லோரும் அந்நிலையை அடையத் தான் பொன்னம்பலத்துக்குள் உட்கார்ந்து இருக்கிறார் ஹரிஹர சுதன்.

வாருங்கள் போகலாம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!

நன்றி: Sakthi foundation

Deva Deepawali of Tamil Nadu - Aadi 18th festival ...
16 Names of Ganesha for daily archana - Tamil and ...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries