2. Good or bad, not caused by others - கணியன் பூங்குன்றனார்

புறநானூறு [192]

புலவர்: கணியன் பூங்குன்றனார்

உலக மக்களை முன்னிட்டுப் பாடுகிறார்

உலகில் உள்ள அனைத்து ஊர்களும் எனது ஊரே!

உலக மக்கள் அனைவரும் என் சொந்தமே!

மதம்-சாதி-இனம்-தேசம்-குலம்-மொழி-செப்வம்-பதவி-கல்வி-பால்... இவற்றால் நான் வேற்றுமை பாராமல் அனைவருக்கும் அன்பும் மரியாதையும் அளிக்க வேண்டும்.

எனக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கு நான் யாரையும் காரணம் கூற முடியாது.அவை என்னால் எனக்கு உண்டானதே என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்கிறேன்!

உடலுக்கு நோய் ஏற்படுவதும் , அது மருந்தால் குணமாவது இயற்கை.

அது போல் பிறப்பும் இறப்பும் எப்போதும் நிகழும்.அதைக் கண்டு ஏன் கலங்க வேண்டும்?

வாழ்க்கையின் மீது மிகவும் ஆசை கொள்வதும் தேவையில்லை, அதை வெறுக்கவும் தேவையில்லை, உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வோமே!

மழை பெய்வதால் பேரியாற்றில் [ வெள்ளம் உண்டாகும்.அதில் உள்ள படகை அவ்வெள்ளம் எங்கோ கரை சேர்க்கும்.அதைப் போல் வாழ்க்கை என்னும் வெள்ளம் பற்றற்ற தன்மை கொண்டோரை கரை சேர்த்து முக்தியை அளித்து விடும்.

எனவே செல்வத்தால் பதவியால் பட்டத்தால் ஒருவரை உயர்த்தவோ, பணம் இல்லாத ஏழையை, படிக்காதவரை இகழவோ வேண்டாமே! அனைவரையும் அன்புடன் மதிப்போம்!ஒருவரின் ஒழுக்கத்தையும் உயர்ந்த பண்பையும் கொண்டே அவரை மதிப்போம்!

புலவர்: இக்கால ராமநாதபுர மாவட்டத்தில் இருந்த பூங்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்தவர்.பூங்குன்றன் என்ற சொல் பூக்கள் மலரும் குன்றத்தில் வாழும் முருகனையும் குறிக்கலாம்.அதனால் இதை தெய்வ காரணப்பெயர் எனக்கொள்க.கணித ஆசிரியராக இவர் இருந்துள்ளார்.அல்லது கணியன் என்பது கணக்குப்பிள்ளை [aacountant] என்ற பொருளிலும் வரலாம்.

Kodungaloor Bharani festival - a historical, psych...
1. The chief who removed my selfishness - ஐயூர் மு...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries