பாண்டிய தேசத்து செந்துரையாள் - article about Sendurai village's fame

Sakthi Foundation

பாண்டிய தேசத்து செந்துரையாள்

நம்முள் இருக்கும் தீய எண்ணங்களை தெய்வத்தின் அருளால் அறிவுடன் நாம் மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.

அறிவுக்கும் தீய எண்ணத்துக்கும் இடையில் ஏற்படும் போராட்டத்தையே தெய்வத்துக்கும் அசுரர்களுக்கும் இடையில் நிகழும் போர்களாக நம் புராணங்கள் சித்தரிக்கின்றன.

”நான்” என்ற ஆணவத்தின், திமிரின், அகம்பாவத்தின் அடையாளமாக எருமைத் தலையுடன் உள்ள மகிசாசுரன் குறிக்கப் படுகிறான்.

மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அன்னை பராசக்தி ஸ்ரீமஹாலக்ஷ்மி வடிவம் தாங்கி அவனை அழிக்கிறாள்.

அன்னை மகிசாசுரனை அழிக்க ஒவ்வொரு தெய்வமும் தங்கள் சக்தியை அளிக்கின்றனர்.

சமுதாயத்தில் உள்ள தீமையை அகற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி மகிசாசுரனை அழிக்கும் போது துர்கையாகிறாள்.

அந்த மஹாலக்ஷ்மியையே பாண்டிய நாட்டில் நம் செந்துரையில் முன்னோர்கள் காலம் காலமாக மக்களின் இயற்கையின் கால்நடைகளின் வளமான வளர்ச்சிக்காக வழிபட ஆலயம் அமைத்தனர்.

செந்துரை என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு ”மஹாலக்ஷ்மி” என்று அர்த்தம்.

வாழ்க்கைக்குத் தேவையான எட்டு வகைச் செல்வங்களையும் அன்னை வாரி வழங்கும் ஊர் இது.

குறிப்பாக நம் ஊர் அன்னை மஹாலக்ஷ்மி மகிசாசுரனுடன் போருக்குச் செல்லும் போது தன்னுடன் வந்த பரிவார தெய்வங்களுடன் காட்சி தருகிறாள். இது பாரத தேசத்திலேயே எங்கும் இல்லாத சிறப்பு ஆகும்.

மூலஸ்தானத்தில் அன்னை வைஷ்ணவி கோலத்தில் சங்கு சக்கரம் அபய வரதம் ஏந்தி தாமரைபூவில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.

நவராத்ரிகாலத்திலும் பிற நாட்களிலும் அன்னையை வழிபட்டு, நம்முள் உள்ள தேவையில்லாத எண்ணங்களை விட்டுவிட்டு; எட்டு வகைச் செல்வங்களான அஷ்டலக்ஷ்மிகளின் அருளைப் பெறுவோமாகுக!

Demons within us - live class session - Navarathry...
Land of costumes and makeup - Kulasekara Pattinam ...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries