Buddha's practical approach to life to transform ourself

புத்தரின் புதிய மத்திய மார்க்கம்

 

வெறும் சுவையான உணவை உண்டு களித்து உடலை வளர்ப்பதால் பயன் இல்லை.

அதே வேளை கோரப் பட்டினி, உடலை வருத்திக் கொள்ளும் த்யானம், யோகம், கடினமான உடல் உபாதைப் பயிற்சிகளின் மூலமும் மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வர இயலாது.

மனதை அதன் ஓட்டத்தில் விட்டு அதை மெதுவாக வழி நடத்துக.

தரமான நல்ல தேவையான புலன் சுகத்தில் தவறே இல்லை!

ஆனால் முறைகேடான புலனிச்சை சுகானுபவங்கள் மனிதனை வேருடன் வீழ்த்தும் என்பதில் ஐயமே வேண்டாம்!

வெறும் புலன்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்யவல்ல ப்ரார்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுக.

மனதுள் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்க.

உங்களை அனைத்துப் பொருட்களுடனும் தொடர்பு படுத்தி உள்நோக்கிப் பார்த்து த்யானம் செய்க.

மதச் சின்னங்களை அணிதல், வெற்று பூஜைகள், விழிப்புணர்வு இல்லாத பாராயணம், வெறுமனே சைவ உணவை உண்ணுதல், நிர்வாணமாகத் திரிதல், சுடுகாட்டில் வாழ்தல், கோரமான பூஜைகள், குருட்டுத் தனமான நம்பிக்கைகள் கொண்ட வெற்றுச் சடங்குகள் மூலம் முக்தி ஏற்பட வாய்ப்பே இல்லை!

கோபம்

போதைப் பழக்கம்

பிடிவாதம்

ஏமாற்றுதல்

பொறாமை

தற்புகழ்ச்சி

புறங்கூறுதல்

பிறரை அலட்சியமாகக் கருதி மதியாமை

தீய எண்ணங்கள்  ஆகிய எட்டும் உன்னை மிக மிக அசுத்தம் ஆக்கும் மாசுகள். இடைவிடாது வீட்டை சுத்தம் செய்வது போல் இவ்வெண்ணங்களை மனதை விட்டு அகற்றிக் கொண்டே இருங்கள்!

விளக்கை நீரால் ஏற்ற இயலாது.ஈரமான விறகில் தீ எரியாது. அதுபோல மேற்கூறிய தேவையற்ற விஷயங்களைக் களையாமல் முக்தியைப் பற்றி மனிதன் எண்ணத் தேவையில்லை!

இவையே புதிய மத்திய மார்க்கம்!

Siddarth [Buddha] taking sanyasam
Amudha surabi - unconditional, everlasting compass...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries