Did Buddha protested really against religious rituals? - an event from Buddha's life

புத்தர் வேத நெறிகளையும் சடங்குகளையும் எதிர்த்தாரா?

மகத நாட்டில் பாண்டவ மலை என்ற அழகிய மலை ப்ரதேசம் உள்ளது.

அதில் பல சான்றோர்கள் ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக வழிகாட்டி வருவதை சித்தார்த்தன் [புத்தர்] உணர்ந்தான்.

அவ்விடம் நோக்கிச் சென்றான், மன்னன் பிம்பிசாரன் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்றார்.

ஆனால் மிக இளைய வயதில் உணர்ச்சிவசப்பட்டுத் துறவத்தை சித்தார்த்தன் ஏற்றுள்ளான் என்று தவறாக எண்ணி அவருக்குப் பல அறிவுரைகள் கூறினான்.

ஏன் தன் தேசத்தில் இளவரசனாகக் கூட வாழுமாறு வேண்டினான்.

ஆனால் சித்தார்த்தன் இவற்றை மறுத்தான்.

அக்கட்டத்தில் ஒரு நாள் தேசத்தில் நலனுக்காக மிக உயர்ந்த வேள்வி ஒன்று ஏற்பாடு ஆகி இருந்தது.அதை வழிநடத்த கூடதந்தன் என்ற வேத விற்பன்னர் இருந்தார்.

வேள்வியில் பலியிட ஆயிரக்கணக்கில் ஆடுகள் இழுத்துச் செல்லப் பட்டன.

இதைப் பார்த்த சித்தார்த்தன் ஒரு கால் ஊனமான ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வேள்விச் சாலைக்குள் இடையர்களுடன் சென்றான்.

உயிர்ப்பலி தருவதைக் குறித்த தவறான கருத்தை சாங்கிய முறையில் எடுத்து விளக்கினான்.

ஆனால் கண்மூடித் தனமான மறையோர்கள் மேலோட்டமான வேத வரிகளை மனதில் கொண்டு அதை சித்தார்த்தன் எதிர்ப்பதாகச் சாடினர்.

வேள்வியில் ஒரு தெய்வம் திருப்தி அடைந்து வரம் தர ஒரு விலங்கை பலியிட வேண்டும் என்பது, நம்முள் இருக்கும் விலங்கினத் தன்மைகளையே அன்றி உண்மையான அப்பாவி விலங்கை அல்ல என்று ஆழ்நிலைக் கருத்தை எடுத்து விளக்கியும் மறையவர்கள் கேட்காத போது,

”வேத வேள்வியில் உயர்ந்த விலங்கை பலியிட வேண்டும் எனில், உயிர்களுள் மிக உயர்ந்த பரிணாமம் கொண்ட விலங்கு மனிதனே ஆவான்.அவனையே பலியிடுக, அப்போது தெய்வம் மிக்க பலனைத் தேடி அருளும், அதிலும் மன்னனின் அப்பாவை பலியிடுக, அரச போகம் வரும், என்னையே பலியிடுக, உயர் ஞானம் வரும்” என்று கூறி பலி பீடத்தில் தன் தலையை வைத்துக் கொண்டான் சித்தார்த்தன்.

”அந்தணர்களே! ஆட்டின் பாலைக் குடிக்கிறீர்கள், கம்பளி முடியால் சால்வை நெய்கிறீர்கள், சரி அவ்வாட்டையே பலி தருகிறீர்கள்....நன்று அதுபோல் நம்மைப் பெற்ற தாய், தந்தை, ஆசிரியர் என்று உதவியவர்களையும் உயிர்ப்பலி அல்லவா செய்ய வேண்டும் நீங்கள்?” - சித்தார்த்தன்

சாங்கிய நெறியில் பலியிடுவதன் உட்பொருளை விழிப்புணர்வு நிலையில் உணர்ந்த பிம்பிசாரன் உடனே அதை ஏற்றுக் கொண்டு, அன்று முதல் தன் மகத தேசத்தில் வேள்விகளில் உயிர்ப்பலி இடுவதைத் தவிர்க்க அரச ஆணை இட்டான்.

எனவே அன்பர்களே எந்த ஒரு செயலைச் செய்யினும் சற்று ஞானத்துடன் யோசித்து விழிப்புணர்வால் செய்க! வினைக்கு ஆளாக மாட்டீர்கள்!

Amudha surabi - unconditional, everlasting compass...
Aaputhran – a man who stopped serving society wher...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries