உடல் ஆரோக்யம் மன ஆரோக்யம், எட்டு வகை அடிப்படைச் செல்வங்கள், வாழும் வழி சொல்லும் புத்தி ஆகியன வேண்டி ஆதிசக்தியை துர்கை லக்ஷ்மி சரஸ்வதி என்று மூன்று நிலைகளில் பிரித்துக் கொண்டு பூஜிப்பதே நவராத்ரி.
 
வீட்டில் உள்ளோரின் கைவினைப்பொருள்கள், கலை வடிவங்களை கொலுவில் கொண்டு வருக.
 
கலைப் பயிற்சி செய்யும் குழந்தைகளை தினமும் அதை வெளிப்படுத்த வைக்கவும்.
 
பெரியவர்கள் தம் கலை ஞானத்தை, சமையல் கலை அறிவை வெளிப்படுத்துக.
 
தசமி அன்று குருமார்கள், ஆசான்கள், பயிற்சியாளர்களை வணங்கச் செய்க.
 
ஸ்ரீராமன் வஸந்த நவராத்ரி வ்ரதம் இருந்தே இலங்கை சென்றான்.
 
வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த சீதையோ மீண்டும் ஒரு முறை தன் கணவனைக் கண்டு தன் மகன்களை ஒப்படைக்க நவ்ராத்ரிதியில் ஸ்ரீலலிதா த்ரிசதி பாராயணம் செய்தாள்.மண முறிவு செய்து கொண்ட தம்பதிகளை இணைக்கும் வலிமை கொண்டது ஸ்ரீலலிதா த்ரிசதி.
 
ராதை நவராத்ரி பூஜை செய்தே க்ருஷ்ணனைத் தன்னுள் தன் ஆன்மாவின் உண்மையான உணர்ந்தாள்.
 
ருக்மிணி நவராத்ரி பூஜை செய்தே க்ருஷ்ணனைக் கணவனாக அடைகிறாள்.
 
த்ரெளபதியும் பாண்டவரும் நவராத்ரி வ்ரதம் இருந்தே பாரதப் போரை எதிர் கொண்டனர்.
 
நவராத்ரி வ்ரதம் பூஜை மேற்கொண்டவர்கள் எத்தகைய சவால்களையும் ஏற்று எதிர்கொள்வதைக் காண்கிறோம்.
 
விளக்கில் தினமும் தேவியை த்யானித்துப் பூஜை செய்யலாம்.
 
ஒரே ஒரு அம்மன் உருவம் மட்டும் வைத்தும் பூஜிக்கலாம்.
 
புதியதொரு தேவியின் படத்தையும் வைத்து பூஜிக்கலாம்.
 
கூடிய மட்டும் உங்கள் பூஜை இரவில் செய்க.