History of Pallava dynasty - for students and common people
பல்லவர்களின் வரலாறு
[மாணவர்களுக்கு உரிய வகையில் சுருக்கி அமைக்கப்பட்டது]
சுமார் கி.பி 3 - கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் தென் பாரதத்தை ஆட்சி செய்த காலம் ஆகும்.
அகநானூறு இலக்கியத்தில் இரண்டு இளந்திரையர்கள் என்ற அரசர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
மூத்த திரையன் இன்றைய ஆந்திராவின் கூடூர் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.அடுத்தவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.
சோழ மன்னர் குடும்பத்துக்கும் வடதேசத்தில் நாக இன அரச குடும்பத்துக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பால் பிறந்தவர்களுள் ஒருவன் மூலம் பல்லவ அரச பரம்பரை ஆரம்பம் ஆனது.
பல்லவர்கள் ஆண்ட பகுதி தொண்டை நாடு எனப்பட்டது.தொண்டைக் கொடி என்பது இப்பகுதியில் உள்ள தாவரம் ஆகும்.அதைத் தன் அரச குலத்தின் தாவரச் சின்னமாகக் கொண்டனர் தொண்டை அரசர்கள்.
இவர்கள் ஆரம்பகாலத்தில் புத்தம் சமணம் மதங்களைப் பின்பற்றினர்.பின்னர் சைவ வைஷ்ணவ மதங்களில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பல்லவர்கள் வசம் வந்த வரலாறு
ஆரம்பகாலத்தில் காஞ்சிபுரம் சோழர்களின் வசம் இருந்தது. அதைப் போரிட்டுக் கைப்பற்றிய பல்லவன் பெயர் குமார விஷ்ணு.
பின்னர் சுமார் நான்காம் நூற்றாண்டில் விஷ்ணு கோபன் என்ற அரசன் ஆண்ட போது காஞ்சியை மீண்டும் சோழர்கள் கைப்பற்றினர்.
மீண்டும் ஆறாம் நூற்றாண்டில் சிம்மவிஷ்ணு என்ற மன்னன் காஞ்சியைக் கைப்பற்றித் தலைநகரம் ஆக்கிக் கொண்டான். ”பூமியின் மீது உலாவும் வீரச் சிங்கம்” என்று கசகுடிச் செப்பேடுகள் புகழ்கின்றன.
தமிழ், ப்ராக்ருதம் மற்றும் சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகள் பல்லவர்களால் பயன்படுத்தப்பட்டன. அவர்களின் எழுத்து வரிவடிவம் பல்லவ க்ரந்தம் அல்லது ‘’பஹல்வி’’ எனப்படும். அவர்கள் எழுப்பிய குடைவரைக் கோயில்களில், செப்பேடுகளில் அதன் மூலமே மெய்கீர்த்திகள் பொறிக்கப்பட்டன.
புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் வடமொழியில் எழுதினர்.அதை அரபு, க்ரேக்கம், ஹீப்ரு, லத்தீன் போன்ற மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்த்தனர்.
ஸ்கந்த வர்ம பல்லவன் - மூத்த பல்லவன்.க்ருஷ்ணா முதன் பெண்ணாறு வரை ஆண்டான்.அஸ்வமேத யாகம் செய்தான். ”தர்மத்தைப் பாதுகாக்கும் மிக உயர்ந்த அரசன்” என்று அவனை செப்பேடுகள் புகழும்.
சிம்ம வர்மன் 1 - 275–300 CE
ஸ்கந்த வர்மன் 1 - 300 - 350 CE
விஷ்ணு கோபன் 350 – 355 CE
குமார விஷ்ணு I - 350–370 CE
ஸ்கந்த வர்மன் 2 370–385 CE
வீரவர்மன் 385–400 CE
ஸ்கந்த வர்மன் III 400–436 CE
சிம்ம வர்மன் II 436–460 CE
ஸ்கந்த வர்மன் IV 460–480 CE
நந்தி வர்மன் I 480–510 CE
முராம விஷ்ணு II 510–530 CE
புத்த வர்மன் 530–540 CE
குமார விஷ்ணு III 540–550 CE
சிம்ம வர்மன் III 550–560 CE
இதன் பின் கர்நாடக தேசத்தில் இருந்து களப்பிறர்கள் என்னும் மன்னர்கள் தமிழகத்தைக் கைப்பற்றினர்.
அவர்களை விரட்டிவிட்டு மீண்டும் தமிழகத்தை சிம்ம விஷ்ணு என்ற பல்லவன் பிடித்து ஆண்டான்.ஆனால் மகேந்திர வர்மன் 1 அரசன் தான் மிகவும் பலத்துடன் ஆட்சியை செய்தான்.அவன் தான் மாமல்லபுர சிற்பங்களுக்கு அடிகோலினான்.
இவனது மகன் நரசிம்ம வர்மன் தான் மிகவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களை எழுப்பினான்.
List of later Pallavas:[citation needed]
சிம்ம விஷ்ணு 555–590 CE
மகேந்திர வர்மன் I 600–630 CE
நரசிம்ம வர்மன் 1 [மாமல்லன்] 630–668 CE
மகேந்திர வர்மன் II 668–672 CE
பரமேஸ்வர வர்மன் I 672–700 CE
நரசிம்ம வர்மன் II 700–728 CE - காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயிலையும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்களைக் கட்டினான்.
பரமேஸ்வர வர்மன் II 705–710 CE
நந்தி வர்மன் II 732–796 CE
தண்டி வர்மன் 775–825 CE
நந்தி வர்மன் III 825–869 CE
அபராஜித வர்மன் 882–897 CE
தொழில்கள்
ஆறுகள், கிணறுகள், குள‘க்கள், கால்வாய்கள் மூலம் மழை நீரை சேகரித்து விவசயாத்துக்கு முக்யத்துவம் தந்தனர். விவசாயம், களிமண் வேலை, தச்சர்கள், பொற்கொல்லர்கள், தானியங்கள் விற்றல் போன்ற தொழில்களுக்கு மிக்க முக்யத்துவம் தரப்பட்டன.அரசின் அனுமதி பெற்று அவற்றைச் செய்ய வேண்டும்.வரியும் செலுத்த வேண்டும்.
கோயில் கட்டிடக் கலைக்குப் பல சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.அவர்களுக்கு நீண்ட கால வேலை வாய்ப்புகள் தரப்பட்டன.
கலைகள்
சிற்பம், ஓவியம், நடனம், இசை, நாடகம், இலக்கியம் ஆகியன மிகவும் ஊக்குவிக்கப் பட்டன. குறிப்பாக இசையையும் நாட்டியத்தையும் கொண்டே ஆன்மீக பக்தியை மக்களுக்கு அளித்தனர்.குறிப்பாக நடனத்தில் பல அழகிய தோற்றப்பொலிவுகளை - postures சிற்பங்களில் காட்டினர்.
அதனால் தான் பல்லவர்களின் குடைவரைக் கோயில்களில் பெரிய பரந்த மேடை போன்ற அமைப்பை உருவாக்கினர்.மஹாபாரத காலத்தின் த்ரோணரின் வழித்தோன்றல்கள் எனத் தங்களைக் கூறிய பல்லவர்கள், மஹாபாரதத்திற்கு முக்கிய இடம் தந்தனர்.
”ப்ருதாஸ்” என்ற இசை வகை மூலம் அரசனின் புகழைப் பாடும் கலையை உருவாக்கினர்.
பல்லவர்களின் ஆன்மீகம்
”சான்” என்ற புத்தமத ஆன்மீக மார்கத்தை உருவாக்கியவன் போதிதர்மன் என்ற பல்லவ இளவரசன் ஆவான்.
வேத வழிச் சமயங்களுக்கு மிகவும் ஊக்கம் தந்தனர் பல்லவர்கள்.
மகே‘ன்திர வர்மன் 1 ஆரம்ப காலத்தில் சமண மதத்தை ஏற்றான்.அப்பரின் வழிகாட்டலின் பேரில் சைவத்தை ஆதரித்தான்.
வேத வழிச் சடங்குகள் செய்யும் அந்தணர்களுக்குப் பல ஊர்களை தானம் செய்தனர்.
அஸ்வமேதம், ராஜ்யசூயம் போன்ற பெரிய யாகங்கள் செய்தனர்.
புத்தம் , சமணம் - சா‘க்கியம் ஆகிய மதங்களையும் ஏற்று மரியாதை செய்தனர்.
80 கோயில்களும், 100 புத்த மடங்களும் காஞ்சியில் இருப்பதாக ஹ்வாங் ஸ்வாங் கூறுகிறார்.
பல்லவர்களின் கட்டிடக் கலை
கற்பாறைகளைக் குடைந்து செய்த மண்டபங்கள், கோயில்கள், விமானங்கள், குகைக் கோயில்கள் இவர்களால் அறிமுகம் செய்யப் பட்டன.
முழுக்க முழுக்கக் கருங்கற்களால் ஆன கோயில் அமைப்புகளுக்கு அடிகோலிட்டவர்கள் பல்லவர்கள்.
ஒரே பெரிய பாறையை முழுக் கோயிலாக மற்றும் திட்டத்தையும் அறிமுகம் செய்தனர்.
புராணச் செய்திகளை விளக்கும் சிற்பங்களை அறிமுகம் செய்தனர்.
அதன் மூலம் ஆன்மீகக் கல்வியை மக்களுக்கு அளித்தனர்.
தமிழ் மொழிக்கு மரியாதை
பல்லவர்கள் காலத்தில் சைவ வைஷ்ணவ பக்தி இயக்கம் மூலம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஊர் ஊராகச் சென்று, தமிழில் இறைவனைப் போற்றிப்பாடி மக்களுக்கு ஆன்மீக அறிவை அளித்தனர்.இதைப் பல்லவர்கள் ஆதரித்தனர்.
By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/