Kodungaloor Bharani festival - a historical, psychological view

Sakthi Foundation

கொடுங்கல்லூர் பரணி - மனோதத்வ ரீதியில் ஓர் பாலியல் ஆய்வு

 

பரணி

27 நக்ஷத்ரங்களில் ஒன்று.கொற்றவையான காளியின் சக்தியை ஆகர்ஷித்துத் தரும் நக்ஷத்ரம்.

பரணி தினத்தில் அக்கால த்ராவிட மன்னர்கள் போர்க்கள வேள்வி செய்து ஆயத்தம் ஆவர்.

போரில் ஆயிரம் ஆண் யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்வதையே பரணி இலக்கியமாக இடைக்காலத் தமிழ் மொழி பரிணமிப்பதைக் காண்கிறோம்.அதில் குறிப்பாக காளி பேய்களுடன் கூடி போர்க்களத்தில் வீர விருந்துண்டு களிப்பதை வர்ணிக்கும் கொடூரமான காட்சி வர்ணனைகள் இடம் பெறும்.

இன்று தமிழகத்தில் பல அம்மன் கோயில்களில் உள்ள விழாக்கள் வெவ்வேறு விதவிதமாக, விதவிதமான கால தினங்களில் நடைபெறும்.ஆனால் அன்றைய சேர தேசமான இன்றைய கேரளத்தில் உள்ள காளி - கொற்றவைக் கோயில்களில் பெரும்பாலும் பரணி நாளிலேயே உற்சவம் நடைபெறுவதைக் காண்க.

குறிப்பாகக் கேரளத்தின் தலைசார்ந்த காளி கோயிலான கொடுங்கல்லூர் [அன்றைய சேரர்தம் தலைநகர் வஞ்சி] ஸ்தலத்தில் பங்குனி மாதம் அஸ்வதி மற்றும் பரணி தினங்கள் வெகு வெகு விமர்சிகை ஆனவை.

கொடுங்கல்லூர் பரணியை நம்மூர் ஸ்ரீரங்க ஏகாதசி அல்லது மதுரைச் சித்திரைத் திருவிழாவுக்கு ஒப்பிடுக.[Regarding the rush]

அஸ்வதி நாளில் அக்காலம் முதல் மிகத் தாழ்ந்த சாதியினரும் கோயிலை வலம் வந்து கொற்றவையை வணங்கும் வழக்கம் சேர தேசத்தில் உள்ளது.அஸ்வதி நாள் அன்று அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் செவ்வாடை அணிந்து, வாளும் சிலம்பும் ஏந்தி [கண்ணகியின் பாவனை] கோயில் முன் வந்து தெய்வம் ஏறப்பெற்று ஓயாமல் ஆடுவர்.You tube available.

அதில் மிக நுட்பம் வாய்ந்தது தறிப்பாட்டு ஆட்டம்.

அது என்ன?

மிகக் கேவலமான, மிக வக்ரமான பாலியல் வர்ணனைகள் கொண்ட மலையாள, பழந்தமிழ் பாடல்களை மக்கள் பாடி ஆடுவர்.கைகளில் மூங்கில் கட்டைகளைக் கொண்டு தாளமிட்டு, ஒரு குறிப்பிட்ட ராகத்தில் அனைவரும் அவரவர் கூட்டம், குடும்பத்துடன் பாடி ஆடுவர்.

அஸ்வதி தினத்தில் மாலை வரை அன்னையின் சன்னிதி திறப்பதில்லை.கோயிலின் ப்ரதான நடை முன் நின்று உரக்கக் கத்தித் தறிப்பாட்டுக்களைப் பாடி ஏசுவர், வணங்குவர், துள்ளி குதித்தாடுவர்.

அடுத்து கண்ணகியாரின் சமாதிக் கோயிலான secret chamber இருக்கும் புறத்தே சென்று அதே போல் ஏசுவர்.தன் மனதில் உள்ள அனைத்து எண்ணங்களையும் பேசியும் தீர்ப்பர்.ஆனால் யாரும் யாரையும் குறை கூறார், கேலி பேசார், சிரிக்கார்.

தமிழ் இலக்கியத்தில் சொல்வது போல் கள்ளுண்டு களிக்கும் கூட்டம் காணலாம்.கேட்பதற்குக் காதுகள் கூசும் பாலியல் வர்ணனைகளை தேவியை நோக்கிக் கத்துவர்.மக்கள் தம் மனதில் ஏற்படும் அனைத்து வக்ரங்களை அந்த குறிப்பிட்ட ராகத்தில் பாடி வெளிப்படுத்துவர் - தேவி முன்.

கேரளத்தின் மிக மோசமான கலாச்சாரம், the brutal, vulgar animal like culture of dravidians – 1954 comment in THE HINDU,என்றெல்லாம் அரசியல் கட்சிகளும் நாஸ்திக வாதங்களும் விமர்சிக்கும் இந்த விழா பல ஆயிரம் ஆண்டுகளாய் நிகழ்வதே சிறப்பு.

கோயில்களில் பாலியல் கல்வி புகட்டும் சிற்பங்கள் இருப்பது சாதாரணம்.ஆனால் பாரத தேசத்தில் வேறு எங்கும் இல்லாத பண்பாடாய் மிக வக்ரமான பாலியல் வர்ணனைகள் கொண்டு ஆண்களும் பெண்களும் பாடுவது இங்கே தான்.அது ஏன்?

ஆனால் அடியேன் மூன்றாண்டுகள் ஆய்வின் அடிப்படையில் கொடுங்கல்லூர் பரணியை அருகிருந்து கள ஆய்வு செய்த போது ஒரு உண்மையைக் கண்டேன்.அது என்ன?

திரைப்படத்திலோ, வேறு கலை வடிவத்திலோ இதே போல பாலியல் பாடல்கள் உள, ஆனால் அதற்கேற்ற body gestures காட்டப்பெறும்.ஆனால் கொடுங்கல்லூர் பரணியின் தறிப்பாட்டில் அவ்வித உடல் பாஷைகள் இல்லை.கள்ளுண்டு, களித்து கையில் மூங்கில் கோல் கொண்டு ஆண்களும் பெண்களும் [அனைத்து உறவுகளும் வட்டமாக நின்றே] பாடிப்பாடி தேவியை நோக்கிச் செல்வதைக் காணலாம்.

தறிப்பாட்டுகள் பாடி ஆடும் பக்தர்கள் ”கோமரங்கள்” எனப்படுவர்.கோவின் மறவர்கள் கோமறவர்கள் என்று ஆய்வில் தொல் கொடுந்தமிழ்ச் சொல் கிடைக்கிறது.சேரர் கோ[மன்னன்] தம் மறவர்கள் வீரர்கள் என்று அர்த்தம் கொள்க.இம்மறக்குடியினரே வ்ரதம் இருந்து ரக்த வர்ண ஆடை தரித்து, காலில் சிலம்பு பூட்டி, கையில் நெடிய வாள் தாங்கி தேவியை தெய்வமேறப்பட்டு வாழ்த்தி வணங்குகிறார்கள்.

கொடுங்கல்லூரில் மேவும் கூடலர் குல நாசினி! [கூடலர் - மதுரைப் பதி மக்கள், பாண்டிய குலம் அதை நாசம் செய்தவள்] என்று மிகத் தொன்மையான கொடுந்தமிழ் வரியைப் பதிவு செய்தோம்.

இது மிக ஆழ்ந்த மனவியல் உண்மையைச் சார்ந்ததே.கி.பி 18ல் மிகப் பெரிய மஹான்கள் உத்தண்ட சாஸ்த்ரிகள், சட்டம்பி ஸ்வாமிகள் ஆகியோர் இவ்விழாவைத் தடை செய்ய ஆங்கிலேயரின் உத்தரவுடன் முயன்றனர்.ஆனால் அன்னை இவர்தம் கனவில் சென்று அதைத் தடுத்தாள் என்று வரலாறு கூறுகிறது.

மனவியல் உணர்வுகளை ஒன்று கூடி வெளியிடும் மிகத் தொன்மை மிக்க மனோதத்வ கலாச்சாரம் இது.

கண்ணகியின் வாழ்வியல் ஆற்றாமையைத் தாகம் தீர்க்கும் மிகத் தொன்மையான தொல் த்ராவிட வழிபாடு இது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

ஆனால் மன அழுத்தங்களை, பாலியல் சம்பந்தமான விராக உணர்வுகளைத் தீர்க்கும் விழா இது.வாய் விட்டுச் சொல்லுதல் என்ற மனோ தத்வத்தின் அடிப்படையில் அமைந்தது இது எனலாம். மனதுள் வைத்துப் புழுங்கும் ஏக்க தாகங்களை வாய்விட்டுப் பாடி அரற்ற தேசத்தின் ஓர் ஊரில் வாய்ப்பு தரப்படுவதாகக் காண்கிறேன்.

அஸ்வதி தினத்தின் அன்று மாலை பொற்கொல்லன் வந்து கோயிலை மூன்று முறை வலம் வந்து மணியை அடிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை ஓடி வலம் வந்து கணக்கற்ற மஞ்சள், மிளகு, பணம், தங்கம் ஆகியவற்றைக் கோயிலின் மீது வீசி எறிவர்.தேவியை மூன்று நாட்கள் காண முடியாது.இதையே ”காவு தீண்டல்” என்பர்.அன்று இரவு தேவியின் இடது ஸ்தனத்தின் மீது மஞ்சள் மருந்து பூசப்பட்டு அதிகாலையில் மஹா ப்ரசாதமாக வழங்கப்படும்.

கோயிலைத் தூய்மை செய்யவே ஒரு வாரம் ஆகும்.

கொடுங்கல்லூர் பரணியில் பக்தர்கள் மிகத்தொன்மைக்கால ஆடை ஆபரணங்கள் அணிவதையும் காண்க. அக்காலத்தில் போர்க்களம் செல்லும் வீர தீர பாவனைகளையும் காணலாம்.ஐநூறு ஆண்டுகட்கு முன் கொடுங்கல்லூரில் போர் வீரர்கள் அமர தண்டம் [தன் தலையைத் தானே அரிந்து கொள்வது] சமர்ப்பித்தும் உள்ள வரலாறு காணப்படுகிறது.

அமர தண்டம் சமர்ப்பிக்கும் முன் மூடப் பழக்கமாய், பொற்கொல்லனையும் கடத்தி வந்து கோயில் முன் வெட்டிப் பலி கொடுத்த செய்திகள் கி.பி 12, 13ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கின்றன. இன்று கோயிலின் முன் மிகப்பெரிய மண் களம் மீது ரக்த வர்ண செவ்வாடையை விரித்து, அதையே ஆணவத்தின் குறியீடாக பலி இடும் வழக்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மிக ஆழமான மனோவியல் நுட்பத்தைப் புரிந்து கொண்டால் இத்தேசத்தின் சில அபூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

With regards.,

Dr.M.Madeswaran, 26.6.2016, Madras

ஒரு பாணர் பாடிய தோற்றம் பாட்டு...

......அம்மை மதுரையை எரித்து,

பாண்டி நாடெங்ஙினும் போய்

ஆழிகர கன்யாகுமரி எத்தி

அவிடே தேவி கன்யாகுமரியாயி

கையில் சிலம்பும் கொண்டு

அனந்தபுரியில் ஆற்றுக்காலில் ஏகி

சேரமானும் சேரத்தி ராணியும் கைதொழ

அம்மை கொடுங்ஙல்லூர் வந்நு...

புறத்தே சோற்றாணிக்கர எத்தி..

அம்மையும் கொடகு மஹாராஜன் பின்போயி

குடஜாத்ரியிலே மூகாம்பிகையாகுன்ன சரிதம் ஞான் சொல்லியல்லோ

பாணன் என்டே பாட்டில் தேவி அருளியல்லோ

தேவியும் கையில் பொன் சிலம்பும் கொடுவாளும் தாங்ஙி

சேரமானும் சேரத்தி ராணியும் தொழ ஒற்றை முலச்சியாயி

கொடுங்ஙல்லூரில் அம்பலத்திலே சாந்த்வனமாயி....

ராஜராஜ சோழன் மூன்று முறை சேரன் எழுப்பிய பத்தினிக் கோட்டத்துக்கு வருகை தந்துள்ளான்.”ஸ்ரீபூரணிக்கு அருண்மொழித் தேவன் கொடுப்பித்த பொன் அணி” - என்ற கல்வெட்டு மூலம் அவன் கோட்டத்தை மீட்டுருவாக்கம் செய்தமையும், தேவிக்குத் தங்க நகை ஒன்றை அளித்ததையும் அறிகிறோம்.அவன் முக்கிய கல் அலங்கார வளைவுகள், யாழிகள், ஆகியவற்றைச் சேர்த்துள்ளான்.தன் தேசத்துப் பெண்ணைச் சிறப்பித்தான் ராஜராஜன்.

Kodungaloor Thaalapoli festival - a historical stu...
2. Good or bad, not caused by others - கணியன் பூங்...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries