Kodungaloor Thaalapoli festival - a historical study

Sakthi Foundation

Kodungaloor Thaalapoli festival

 

சேர தேசமாம் கேரளத்தில் பல தேவி ஸ்தலங்களில் ”தாலப்பொலி” என்ற வருஷாந்த்ர உத்சவம் உண்டு.

”ஸ்தலப் பொலி” - ஸ்தலத்தைப் பொலிவடைச் செய்ய அவ்வூர் தேவதை எழுந்தருளிக் கோயிலில் ப்ரதிஷ்ட்டையான நாள் என்று அர்த்தம்.

கொடுங்கல்லூர் [வஞ்சி மூதூர்-சேரர் தம் தலைநகரம்]

இவ்வூரில் சேரன் செங்குட்டுவன் ஸ்தாபித்த கண்ணகி கோயிலின் தாலப்பொலி ஆண்டு தோறும் நமது தை மாதம் ஒன்றாம் நாள் மகரசங்க்ராந்தியில் வரும்.

சேர மன்னன் குமுளி மலை மீது கண்ணகியார் சமாதியான முருக ஸ்தலத்தில் [நெடுவேள் குன்றம்] கோட்டம் எழுப்பினான்.இதையே சிலப்பதிகாரம் கூறுகிறது.

அதன்பின் தன் மாநகரில் தானும் தன் ராணியும், குலமும், மக்களும் கண்ணகியாரைப் பரவித்தொழ ஆதியில் இருந்த கொற்றவை கோயிலிலேயே கண்ணகியாரின் உடல் எச்சங்களையும், அவரது சில உடைமைகளையும் சமாதிக் கோயில் வைத்தான் சேர மன்னன்.

கோவலனை சிவலிங்க வடிவில் அருகில் அமர்த்தினான்.

கோயிலின் தேவியை நோக்கித் தொழும் போது நமது இடது கையின் பக்கத்தில் கருங்கல் அறை காணப்படும்.அதன் உள்ளே கண்ணகியாரின் உடமைகளும் உடல் எச்சங்களும் உள. ஆடி அமாவாசை மலாஇ மதுரை எரிக்கப்பட்டதை சிலப்பதிகாரம் சுட்டுகிறது.அன்ரு தேவியின் சமாதி திறக்கப் பட்டு விசேஷ பூஜைகள் நிகழும், மக்கள் காண்பதற்கு இல்லை.அன்று தேவியின் சிலைக்கு ”சாந்தாட்டம்” என்ற மருந்து பூசிமெழுகப்படும்.

கொற்றவை கோயிலில் அவ்வறை எழுப்பப்படும் வரை இன்று ஊரின் தென் பகுதியில் உள்ள மரத்தடி ஒற்றை முலைச்சி அம்மன் பீடத்தில் தான் கண்ணகியாரின் உடைமைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன.

தை மகரசங்க்ரமத்தில் அவ்வுடைமைகள் கோயிலில் சமாதியாக ப்ரதிஷ்ட்டை ஆன நாளே தை மாதத் தாலப்பொலி.

மிக்க மரியாதையுடன் இன்றும் ஒற்றை முலைச்சி அம்மன் பீடத்தில் இருந்தே யானைகளின் அணிவகுப்பில் தேவி புறப்பட்டு உலா வர, அவ்வூர்ப் பெண்கள் இருபுறத்தே மிக்க மரியாதையுடன் கைகளில் பூக்களும் தீபமும் ஏந்தி வரவேற்பதைக் காணலாம்.

சேர மன்னனும் அரசியும் அன்று முன்னே நடந்து வந்து தேவியைக் கோயிலில் ஏற்றினர்.இன்றும் கொடுங்கல்லூர் அரச பரம்பரையினர் இதில் ஈடுபடுவதைக் காண்க.

பஞ்ச வாத்ய இசை முழங்க அன்னையை மரியாதை செய்யும் தாலப்பொலி உத்சவம் அவசியம் வரலாற்றுச் சிறப்புடையது! You tube links are available.

With regards.,

Dr.M.Madeswaran, 26.6.2016, Madras

Paanar artists of ancient Tamil culture in Kerala
Kodungaloor Bharani festival - a historical, psych...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries