Madurai’s Talk....A students creation about an ancient city - Tamil version

Sakthi Foundation

Madurai’s Talk....

”என் இனிய தமிழ் மக்களே!

நான் தான் மதுரை பேசுகிறேன்!

என்னுடைய மண்ணில் தான் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது.அதில் பல அழகிய முக்கியமான இலக்கண இலக்கியங்களைப் புலவர்கள் எழுதினார்கள்.

என்னைப் பற்றி நினைத்தாலே மீனாக்ஷி அம்மன் கோயில் தான் உங்களுக்கு நியாபகம் வரும்.இக்கோயில் எனது இதயப்பகுதியில் அமைந்துள்ளது.சுமார் 2500 ஆண்டுகளாக இக்கோயில் உள்ளது.பல கல்வெட்டுகளும் அதில் உள்ளன.

என்னைப் பாண்டிய மன்னர்கள் முற்காலத்தில் ஆண்டனர்.பின்னர் முகமதியரும் நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.திருமலை நாயக்க மன்னன் என் செல்லப் பிள்ளை!

அவர் தான் இன்று காணும் கோயிலை, மஹாலைக் கட்டி எனக்கு உலகப் புகழ் சேர்த்தார்.

முருகனின் முதல் மற்றும் ஆறாம் படை வீடுகள் என்னிடத்தில் தான் உள்ளன.

சித்திரை மாதத்தில் வரும் சித்திரைத் திருவிழா பெரிய விழா ஆகும்.மீனாட்சி கல்யாணமும், தேரும், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் உலகப் புகழ் பெற்றவை.

சிவனின் திருவிளையாடல்கள் என் மீது தானே நிகழ்ந்தன?

பெண்ணுக்கு முன் உரிமை தரும் மீனாட்சி வழிபாடு என் பெருமை அல்லவா?

உலகில் மிகப் பெரிய நவராத்ரி கொலு என் கோயிலில் தான் நிகழ்கிறது.

வண்டியூர்த் தெப்பக்குளம் மிகப் பெரிய குளம் ஆகும்.

என்னைத் தூங்கா நரகம் என்று அழைக்கிறீர்கள்.காரணம் விடிய விடிய மக்கள் பயணம் செய்வர், வியாபாரம் நடக்கும்.

நடு இரவில் கூட சுடச் சுட இட்லி - தோசை கிடைக்கும்.

”என் இடத்தில் இருக்கும் பழமையான காமராசர் பல்கலைக் கழகம் மிகச் சிறந்தது.அங்கு மேலை-கீழை நாட்டில் இருந்து பல மாணவர்கள் வந்து படிக்கிறார்கள்.

என் மண்ணின் மீது விளையும் மல்லிகை மலர்கள் எனக்கு மிகப் பெருமையைச் சேர்க்கின்றன.என் பெயரிலேயே மல்லிகை மணக்கும்.மல்லிகை தினமும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

எனது அடுத்த ப்ரபலான பொருள் சுங்குடியும், செளராஷ்ட்ரா புடவைகளும் ஆகும்.

ஒத்தக்கடை ஆனைமலையில் பல முக்கியமான பழைய கல்வெட்டுகளைக் கண்டு பிடித்துள்ளனர்.தினமும் அவற்றைக் காணப் பலர் வருவர்.ஆனைமலையில் அழகிய பழைய நரசிம்மர் குகைக் கோயிலையும் பாருங்கள்!

வருடத்தில் விஜயதசமி அன்று 108 வீணைகள் வாசித்து இசை வழிபாட்டைச் செய்வது உலகில் வேறெங்கும் இல்லை.

அழகிய வைகை ஆறு வெயில் காலத்தில் நீர் வற்றியும், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்குடனும் ஓடும்.வைகையைக் காணாமல் யாரும் செல்வதில்லை.இறைவனே என் மீது பிட்டுக்கு மண் சுமந்தார் அல்லவா?

என்னிடத்தில் இத்தனை அருமையான விஷயங்கள் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.அதை ஏற்படுத்தியவர்கள் நீங்கள் தானே!?”

வைஷ்ணவி - Grade 8th, 8.11.2014

''மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என் மீது பிறந்து வளர்ந்தவர்.அவர் கர்னாடக சங்கீதத்தில் மிகப் புலமை ஆனவர். அவர் என் மடியில் பிறக்க நான் தவம் செய்தேன். மதுரை சோமு, மணி ஐயர் மற்றும் சேஷகோபாலன் ஆகியோரும் என் மக்களே!இவர்களும் கர்னாட இசையின் ஜாம்பவான்கள் ஆவர்!

என் மகன் இளையராஜா மிகப் பெரிய இசை அமைப்பாளர் ஆவார்.அவர் உலகின் சிறந்த இசை வல்லுனர்களில் ஒருவர்.

திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் என் மகனே! இவர் என் மண்ணின் கலாச்சாராத்தை வெளியிட்டார்.

தமிழ்க் கவிஞர், பத்மபூஷண் வைரமுத்து என் மடியில் பிறந்த முத்து தான்.

ஆனால் இக்காலத்தில் குறிப்பாகத் திரைப்படங்களில் என்னைக் காட்டினாலே அடிதடி, ரெளடியிஸம், குண்டாயிஸம், வன்முறை என்றே சித்தரிக்கிறார்கள்.அது ஏன்?

எனக்கு எவ்வளவோ புகழ் இருக்கிறதே?! ஆனால் இக்காலத்தில் சிலர் அதைப் பயன்படுததமல், ரசிக்காமல் என்னைத் தவறாக ஏன் சித்தரிக்கிறார்கள்?''

Mahendra Verma Pallava - 6th century A.D
How Lord Ganesha came to Tamil Nadu? - English ver...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries