Maharaja Swathi Thirunal and Tanjore Suganthavalli

தஞ்சாவூர் சுகந்தவல்லி - ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவின் கலைக் கனவுகளை நனவாக்கியவள்

 

பத்மநாபபுரம் அரண்மனைக் குறிப்புகள் இவளைப் பற்றி என்ன தான் சொல்கின்றன?

சுகந்தவல்லி

இவள் தஞ்சாவூரில் வாழ்ந்த புகழ் பெற்ற தாஸி ஆட்டக்காரி.

இவள் தன் குரு வடிவேலுவுடன் பத்மநாபபுரம் சேர்ந்தாள்.

1843ஆம் ஆண்டு இவளை அரசன் தன் இரண்டாம் மனைவியாக ஏற்றார்.

மக்களும் அரண்மனைக் குடும்பங்களும் இவளை ”சுந்தர லக்ஷ்மி அம்மை” [கட்டாயத்தின் பேரில்] என்றே அழைத்தனர்.

1845ல் அவருக்கு எனத் தஞ்சாவூர் அம்மா வீடு அமைத்துக் கொடுத்தார்.அதில் அவள் தன் குடும்பத்துடன் வாழ்ந்தாளாம்.

ஆனால் இக்கல்யாணத்தைப் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவளுக்கு அவமானங்களும் அவமதிப்புகளும் உண்டாயின.காரணம் அவள் தேவதாஸி ஆட்டக்காரி என்ற ஒரே காரணம் எனலாம்.

இதனால் அவள் அரசனை விலகிச் செல்ல வேண்டிய கட்டம் இருந்துள்ளது.

பல சிக்கல்களுக்கு இடையே இம்மண முறிவால் ஸ்வாதித் திருநாள் மிகவும் மனம் கலங்கி ஆயுள் குறைய, 1846ல் இறையடி சேர்ந்தார்.

சுகந்தவல்லி என்ன ஆனாள் என்று தெரியவில்லை!

இவள் அழகியில்லை, ஆனால் உண்மையான அன்பும் தூய கலை அறிவும் கொண்ட சதிர் - இசை நிபுனி.இவளது கலைசேவை மஹாராஜாவின் மனதைக் கவர்ந்தது.அவரது இல்லறத்தில் நிம்மதி இல்லை என்ற போது, புதிய காதல் தளிரை வளர்த்து விட்டது.இதன் மூலம் இசையும், நடனமும் விருந்துண்டன.

மன்னரின் கனவான மோகினி ஆட்ட பரிணாமத்தின் நுட்பங்களை சுதந்தவல்லி மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்பத் தன் கலை அறிவைப் பயன்படுத்தினாள்.

கதகளியை கோட்டயத்து அரசர்கள் கோவில்களில் புகுத்தினர்.கேரளத்தில் அரசர்கள் சபைகளில் பெண்கள் ஆடுவதை அதிகம் ஏற்கவில்லை.ஆனால் ஸ்வாதித் திருநாள் இதை உடைக்க முற்பட்டார்.தன் சபையில் தஞ்சை தாஸிகளின் சதிரை அதிகம் ஊக்குவித்தார்.

அவரது இல்லறம் ரணமான போது சுகந்தவல்லியின் அன்பும் கலைப் பணியும் அவருக்கு இன்பம் அளித்தது என்பதில் ஐயமே இல்லை!

மன்னரும் இறையிம்மென் தம்பியும் கிளிமனூர் கோவில் தம்புரானும் வடிவேலுவும் இணைந்து சுகந்தவல்லி மூலம் தமிழகத்து தாஸி ஆட்டமான சதிரை மோகினி ஆட்டமாக மாற்றினர்.

அவள் என்ன ஆனாளோ? பாவம் ஆனால் அவள் தன் அன்பையும் கலை அறிவையும் அரசனின் தேவைக்கு ஏற்ப வழங்கியதால் தான் இன்று பொன் அலங்காரச் சேலை மோகினிகள் கேரளத்திலும் வெளிதேசத்து மேடைகளிலும் ஒய்யாரமாக ஆடுகின்றனர்.

தாஸி வழியில் வந்த சுகந்தவல்லி ஒரு நிரந்தர ஆதரவை அதுவும் ஒரு அரசனிடம் இருந்து பெற்று உள்ளாள்.வெறும் காதலும் களவும் காமமும் அவர்களின் பிணைப்பு ஆகாது.அதைத் தாண்டிய ஏதோ ஒரு வித தெய்வீகக் கலையன்பு இவர்களது.......

மோகினி ஆட்டத்தை நெறிப்படுத்தி, செம்மைப்படுத்திய தஞ்சாவூர் சுகந்தவல்லி ஸ்வாதித் திருநாளின் ஹ்ருதய லக்ஷ்மி என்பதில் என்ன ஐயம்?

Tanjore Vadivelu and Maharaja Swathi Thirunal
Veenai Dhanammal [May 1868 - October 1938] - Saras...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries