Mamallan Narishima Pallava King - a legendary celebrity of 7th century A.D

Sakthi Foundation

Uni5 education

மாமல்லன் நரசிம்ம வர்ம பல்லவன்

பல்லவ மன்னர்களில் மிகவும் ப்ரஸித்தி பெற்ற  ஒருவன் முதலாம் நரசிம்ம வர்மன்.

இவனது ஆட்சிக் காலம் கி.பி. 630 - கி.பி. 668 வரை ஆகும்.

இவன் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு பல்லவ தேசத்தை ஆண்டான்.

இவனது தந்தை மகேந்திர வர்மன்.இவன் மிகவும் கலா ரசிகன். இசையும், நாடகமும், ஓவியமும், சிற்பமும் இவனுக்கு மிக மிகப் பிடிக்கும்.அதைப் போலவே அவன் மகன் நரசிம்ம வர்மனும் வளர்ந்தான்.

தன் தந்தை மிக்க ஆர்வத்துடன் ஆரம்பித்த மாமல்லபுர சிற்ப வேலைப்பாடுகளை இவனும் தொடர்ந்தான்.ஆனால் போரின் காரணமாக இவனாலும் முற்றிலும் அவற்றை முடிக்க முடியவில்லை.

சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி கி.பி. 642ஆம் ஆண்டில் நடந்த போரில் மகேந்திர வர்மனைத் தோற்கடித்தான்.அதனால் மன்னன் மிக மிக மனம் கலங்கிய நிலையில் நரசிம்ம வர்மன் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

நரசிம்மன் இளம் வயதிலேயே வீர விளையாட்டுகளில் ஒன்றான மல் யுத்தத்தில் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினான்.பல போட்டிகளிலும் வென்று மக்களால் ”மாமல்லன்” என்று சிறப்புடன் அழைக்கப்பட்டான்.

இவனது ஆட்சிக் காலத்தில் தான் சைனா யாத்ரீகர் ஹ்வாங் ஸ்வாங் காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்து புத்த மதக் கருத்துக்களைக் கற்றுச் சென்றார்.அவரது பயணக்குறிப்புகளில் பல்லவ தேசம், மக்கள் வாழ்க்கை, மன்னனின் பெருமை, காஞ்சியின் அழகு போன்றவை பதிவாகி உள்ளன.

சிவ பெருமானின் பக்தனான இவன் காலத்தில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோர் வாழ்ந்தனர்.அவர்களின் வழிகாட்டலில் பேரில் அவன் பல சிவன் கோயில்களையும் எழுப்பினான்.

பாரத தேசத்தின் மிக முக்கியமான வீரம் மிக்க அரசர்களில் ஒருவனாக இவன் கருதப்படுகிறான்.போரில் ஒரு போதும் இவன் தோல்வியே கண்டதில்லையாம்.

தமிழ் மொழியையும் சமஸ்க்ருதத்தையும் மிகவும் ஆதரித்தவன் இவன்.புத்தம், சமணம், சாக்கியம், சைவம், வைஷ்ணவம் ஆகிய மதங்களையும் ஒன்று போல் மதித்தான்.இவன் காலத்தில் காஞ்சியில் அம்மதத்தைக் கற்றுத் தரும் மடங்களும் இருந்தன.

சம்ஸ்க்ருத மொழிக்கு உயர்ந்த இலக்கணத்தை எழுதிய தண்டி இவன் காலத்தில் காஞ்சியில் தான் வாழ்ந்தார். சிற்பக்கலை மூலம் மக்களுக்கு இவன் செய்த கலை சேவைப் பாராட்டி தண்டி இவனை ”விசித்திர சித்தன்” என்று அழைத்தார்.

பாரத தேசத்தின் மிக உயர்ந்த குருமார்களில் ஒன்றான ஸ்ரீமத் ஆதிசங்கரர் இவன் காலத்தில் தான் காஞ்சி காமகோடி பீடத்தை உருவாக்கினார்.

தன் தந்தையை வெற்றி கண்டு காஞ்சிபுரத்தை சீரழித்த இரண்டாம் புலிகேசியை இவன் மணிமங்கலம் என்ற ஊரில் துரத்தித் துரத்தி வெற்றி கண்டான். சென்னை - தாம்பரத்தின் மேற்கில் பத்து கி.மீ தொலைவில் உள்ளது.

ஆனால் அதன் பின்னும் புலிகேசி தொல்லை தந்ததால் குஜராத்தில் அவனது தலைநகருக்குச் சென்று ஒரு ஆண்டுக் காலம் போராடி வெற்றி கொண்டான் [கி.பி.642].அதனால் மக்கள் அவனை ”வாதாபி கொண்டான்” என்று புகழ்ந்தனர்.

அவ்வூரில் மல்லிகார்ஜுன சிவன் கோயிலை எழுப்பினான்.மேலும் அவ்வூரில் உள்ள தெங்கின இரப்ப கோயிலின் சுவற்றில் தன் வெற்றியைக் கல்வெட்டாகப் பதிவு செய்தான்.

அப்போது அவனுக்கு உற்ற ராணுவ வீரனாக விளங்கியவன் அவனது அருமை நண்பன் பரஞ்சோதி.அவன் இம்மன்னனை மத யானையிடம் இருந்து காப்பாற்றியவன் ஆவான்.இவர்களது வரலாற்றை அழகான நாவல் வடிவில் எழுதியவர் ஸ்ரீ.கல்கி.அதன் பெயர் சிவகாமியின் சபதம். தமிழில் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று இதுவாகும்.

நரசிம்ம வர்மனின் மற்றொரு நண்பன் இலங்கை வீரன் மானவர்மன்.இவனும் வாதாபிப் போரில் உதவினான்.அதற்கு நன்றியாகப் பல்லவ படையுடன் அவன் இலங்கைத் தீவை வேறு அரசனிடம் இருந்து மீட்டு ஆண்டான்.

நரசிம்மன் வீரம் பற்றிய செய்திகள்...

”வாதாபி என்ற அரக்கனை அகஸ்தியர் வினாயகரின் அருளுடன் வென்றது போல் நரசிம்ம வர்ம பல்லவன் வாதாபியை வென்றான்” - கல்வெட்டுச் செய்தி - பரமேஸ்வர வர்ம பல்லவன் எழுதியது.

”அகஸ்தியர் போல ஞானம் உள்ள நரசிம்ம வர்மன் வாதாபியை மிதித்துப் பொடியாக்கினான்”  - உதயச் சந்திர மங்கலம் செப்பேடுகள்.

”மஹாவிஷ்ணுவைப் போல் வீரம் கொண்டு, வாதாபியை வெற்றி கொண்டு அவ்வூரின் நடுவில் விளங்கிய வெற்றித் தூணை நரசிம்ம வர்மன் சாய்த்தான்” - வேலூர்ப்பாளையம் செப்பேடுகள்.

வாதாபி அரசன் சின்னமான காட்டுப்பன்றி தன் கோயில் குளத்தில் நீர் அருந்துவது போல் மாமல்லன் கடற்கரைக் கோயிலில் சிற்பமும் கோயில் குளமும் செய்துள்ளான்.

Mudhumakkal Thaazhi - what is inside the unearthed...
A king who loved his society like a mother - Nandh...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries