Mamallapuram or Mahabalipuram - a name research

Sakthi Foundation

மஹாபலிபுரம் - பெயர்க்காரணம் சரியா?

நீர்ப்பேர், மல்லை, கடல் மல்லை, மாமல்லை, மாமல்லபுரம், மல்ல பட்டிணம், மாமல்ல நகரம், மாவேலிபுரம், ஜனநாதபுரம், என்றெல்லாம் அழைக்கப்படும் மாமல்லபுரம் மஹாபலிபுரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவே இல்லை.

ஆனால் இன்று அனேக மக்களுக்கும் ”மஹாபலிபுரம்” என்றே பெயர் அறியப்படும் தன்மை உள்ளது.

இதற்கு விளக்கம் கேட்டனர் என் மாணவர்கள்.

மஹாபலி மன்னன் சர்வ லோகத்தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் யாகம் செய்தான்.ஆனால் அவனது ஆணவத்தை அகற்றி வாமனனாக வந்த மஹாவிஷ்ணு அவனைத் திருத்தினார்.

வாமனன் செய்த திருவிக்ரம அவதாரம் வராஹ குகையில் வெகு அழகாகக் காட்டப் படுகிறது.

மஹாபலி என்பது ”மிகப் பெரிய பலி - த்யாகம்” ஆகும்.

அதை அவன் செய்தே இறையருளால் பாதாள உலகின் அரசன் ஆனான்.

அரசர்கள் பலர் சதா மண் ஆசையுடன் பொன்-பொருள்-பெண் ஆசையால் போர்கள் செய்த காலத்தில் பல்லவ அரசர்கள் ஆன்மீக நெறியில் மனதைச் செலுத்தி அவற்றில் இருந்து விடுபட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கும், உயர்வுக்கும் வழி செய்தனர்.

மனதை போகத்தில் ஈடுபடுத்தாமல் கோயில் கட்டிடக் கலை, இசை, ஓவியம், ஆன்மீகம் சார்ந்த கலைகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் அப்பர், ஞான சம்பந்தர், ஆதி சங்கரர், முதல் ஆழ்வார்கள் ஆகியோரின் வழிகாட்டலில் மல்லைக் கோயில் கலையில் தன்னை முழுவதும் ஈடுபடுத்தினான்.

அவன் மட்டும் அல்லாது பின் வந்த பல்லவரும், சிற்பிகளும் சமூஹக் கலைப்பணியாய் ஆன்மீகப் பணியாய் இவற்றைச் செய்தனர்.

இவை எல்லாம் மிக உயர்ந்த பலியே!

போகத்தை விடுத்த பலி!

எனவே இவ்வூர் ”மஹாபலிபுரம்” தான்!

Poet Dandi about Mahabalipuram
Mahendra Verma Pallava - 6th century A.D
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries