Mudhumakkal Thaazhi - what is inside the unearthed vessel graves of dead?

Sakthi Foundation

Uni5 education - முதுமக்கள் தாழி

மிகப் பழங்காலத்தில் இறந்தவர்களை மிகப்பெரிய சுடுமண் தாழிகளில் இட்டு பூமிக்குள் புதைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.

இத்தகைய பல தாழிகளை 1899-1904 ஆண்டுகளில் ஆங்கில வரலாற்றுத் தொல்லியல் புதைபொருள் ஆய்வாளர் திரு.அலெக்ஸேண்டர் டே அவர்கள் திருநெல்வேலிக்கருகில் தாமிரபரணி ஆற்றின் ஓரத்தில் ஆதிச்சநல்லூர் என்ற ஊரின்கண் அமைந்துள்ள ஆதி கால சுடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடித்தார்.

இதன் மூலம் பழந்தமிழக மக்களின் வாழ்க்கை, பண்பாடு, வரலாறு போன்றவற்றை அறிய முடிந்தது.தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய தாழிகள் கிடைத்துள்ளன.

அதனால் ஆதிச்சநல்லூருக்குத் ”தமிழகத்தின் மொஹஞ்ஜதாரோ” என்ற பெயரை அவர் சூட்டினார்.

இறந்தவர்களுடைய சில முக்கியமான பொருட்கள் சுடுமண் தாழிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டன.

அவை:

நெல், சிறிய மண் பாண்டங்கள், போர்க்கருவிகள், நாணயங்கள், இரும்பு விளக்குகள், தங்கம்-செம்பு-வெங்கலப் பாத்திரங்கள், அணிகள், சந்தனம் அரைக்கும் கல், அம்மிக்கல், பூச்சாடிகள், கிண்ணங்கள், குடுவைகள்.

தாழிகளில் கொப்பூள்கொடியின் மாதிரி செதுக்கப்பட்டு இருக்கிறது.இது அடுத்த பிறவியில் இறந்தவருக்கு நல்ல பெற்றோர்கள் கிடைக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

தாழிகளில் இறந்தவர்களின் பெயர்கள் ப்ராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

போர்க்கருவிகள்:

வாள், அம்பு, வில், குத்தீட்டி, குறுவாள், அரிவாள், ஏர்க்கொப்பு [உழவுக் கருவி], கோடரி ஆகியன கிடைத்துள்ளன.

அழகான வேலைப்பாடுகள் கொண்ட மண் கலங்களும் பல கிடைத்துள்ளன.

இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கையைப் பற்றி என்னென்ன புரிந்து கொள்ள முடிகிறது என்பதைக் கலந்துரையாடல் செய்வது மிக அவசியம்.இதையும் ஈஜிப்ட் ப்ரமிட்களின் மமிகளையும் ஒப்பிடுக.

History of Pallava dynasty - for students and comm...
Mamallan Narishima Pallava King - a legendary cele...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries