Other names for Madurai - a student's study

Sakthi foundation

மதுரையின் வேறு பெயர்கள்

 

பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்குப் பல பெயர்கள் உள்ளன.

மருதை - மருத மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியைக் கொண்டு ஊர் அமைந்ததால் மருதை.

மதுரை - சிவனின் தலையில் உள்ள பிறைச்சந்திரனின் மூன்று துளி மது இவ்வூரின் மீது விழுந்து புனிதம் செய்ததால் மதுரை.

மருதந்துறை - வைகைக் கரை ஓரம் இருந்த கோட்டையுடன் கூடிய மருத மரச்சோலைகள் மருதந்துறை எனப்பட்டன.

கூடல் - பல தேசத்து மக்களும் இவ்வூரில் கூடி ஒற்றுமையாக வாழ்வதால் கூடல்.

நான்மாடக்கூடல் - முதன் முதலில் நான்கு திசைகளிலும் உயர்ந்த மாட கோபுரங்கள் கொண்ட கோயிலை அமைத்து, அதைச் சுற்றி ஊரை அமைத்ததால் நான் மாடக் கூடல் ஆனது.

ஆலவாய் - மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு ஆலவாய் என்று பெயர்.பழங்காலத்தில் ஊருக்கும் அதில் உள்ள கோயிலுக்கும் வேறு வேறு பெயர்கள் இருக்கும்.

தமிழ் கெழு கூடல் - தமிழ்ப்புலவர்கள் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் இருந்து தமிழ் மொழியை செம்மை செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

கன்னிகாபுரி - அன்னை மீனாக்ஷி பாண்டிய அரச வம்சத்தின் இளவரசியாக ஆண்ட ஊருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

இருந்தையூர் - மதுரையில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோயில் உள்ள பகுதிக்கு அக்காலத்தில் இருந்தையூர் என்று பெயர். [இருந்த எந்தை [அப்பா] ஊர்]

A student from Grade 7, 8.11.2014

Moon in Indian society
How can we serve the society - guidelines by ancie...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries