Poet Dandi about Mahabalipuram

பல்லவர் காலத்தில் காஞ்சியில் வாழ்ந்த சிறந்த வடமொழிக் கவிகளில் ஒருவர் தண்டி.

இவர் அவந்தி சுந்தரி கதா என்ற வடமொழி காவியத்தை எழுதினார்.

அதில் மாமல்லபுரத்தைப் பற்றிய ஒரு முக்கிய குறிப்பு வருகிறது.

***

கடற்கரைக் கோயிலில் உள்ள பெருமாளே ஆழ்வார்களால் பாடப்பட்டவர் என்பதே பல ஆய்வுகள் சொல்லும் உண்மை ஆகும்.

அப்பெருமாளில் கைகளில் ஒன்று மணிக்கட்டுப் பகுதியில் உடைந்து போனது.

பல்லவ மன்னன் மிகவும் கவலைக்குள் ஆயினான்.

சேதமான விக்ரஹத்தைப் பூஜிப்பது என்பது சாஸ்த்ர மரபில் இல்லை.காரணம் சேதமான பொருளில் ஆவாஹனம் செய்த இறைசக்தி கலைகிறது.

ஆனால் பல்லவனுக்கு இச்சிலையைத் திருத்திச் செப்பனிட மனம் துடித்தது.

லலிதாயன் என்ற இளைய சிற்பி இக்காரியத்தை மேற்கொண்டான்.

அவன் தன் சிற்ப சாஸ்த்ர ஞானத்தால் உடைந்த கல் சிற்பத்தை இணைக்கும் முறையைக் கண்டுபிடித்தான் எனலாம்.

பெருமாளின் திருக்கரத்தைச் செப்பனிட்ட பின் அவன் பல்லவனையும் தண்டியையும் மாமல்லபுரத்திற்கு வந்து அதைக் காணச் சொன்னான்.

தண்டி அத்தருணத்தில் மல்லைக்குச் சென்று பல்லவனின் தங்கும் மாளிகையில் தங்கி, பெருமாளின் அழகையும் தரிசித்துள்ளார்.

அப்போது லலிதாயனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று கூறி தாமரை மலர் ஒன்றை அவன் கைகளில் அளித்தார்.

***

இன்றும் கடற்கரைக் கோயில் பெருமாள் இடது பக்கத் தூக்கிய கரம் சிதைந்துள்ளது.இதுவே அவந்திசுந்தரியில் குறிப்பிடப்பட்ட செப்பனிடப்பட்ட கரம் எனலாம்.

கேவாத பெருந்தச்சன், சாதமுக்கியன், குணமல்லன், திருவொற்றியூர் ஆபாஜன் ஆகியோர் தலையாய சிற்பிகளாக இருந்துள்ளனர்.

ராஜராஜன் பல்லவரின் கோயில்கட்டிடக் கலையை நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து இருக்கிறான்.அவன் சிற்பக்கலைஞர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினான்.அதன் பிறகே தஞ்சையில் பெரிய கோயிலை எழுப்பினான்.தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடி மாமல்லபுரம் எனலாம், தவறில்லை!

Western travelers' documentation about Mahabalipur...
Mamallapuram or Mahabalipuram - a name research
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries