Puranaanooru - Sangam Tamil Literature - an introduction

Sakthi Foundation

புறநானூறு

மதுரை மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்

பல பெயர் தெரிந்த, பெயர் தெரியாத புலவர்கள் பலரைப் பற்றிப் பதிவு செய்துள்ள 2000 ஆண்டுக்கால வரலாற்றுப் பொக்கிஷம்.

புலவர்கள் - இவர்கள் கற்றவர்கள், தமிழ் இலக்கணப் புலமை கொண்டவர்கள்.

பல ஊர், பல தொழில் புரிந்தோர் தங்கள் வாழ்க்கையில் கண்ட தனிமனித சமூஹ உண்மைகளைப் பதிவாக்கினர்.

அரசர்களும் புலவர்களாகத் தம் கருத்துக்களைக் கூறுவதைக் காண்கிறோம்.

அரசர்கள் தனி மனிதனைப் பாடினர்.

அரசர்கள் புலவர்களிடம் சிலரைப் பற்றி உயர்ந்து கூறியுளர்.

புலவர்கள் வீரம், கொடை, தர்ம வாழ்க்கை, தனி மனித - சமூஹ ஒழுக்கம், தனி மனித ஈகை, சமூஹ நிலை ஆகியவற்றைப் பதிவாக்கினர்.

ஆனால் இதில் ஆய்வு செய்து பார்த்தவரை யாரும் வெறும் பொருளுக்காக வீண் பெருமை பேசிப் புகழ்வதைக் காண்பதற்கில்லை.வெட்டிப் புகழ்ச்சியை சங்கம் ஏற்பதில்லை!

வெறும் சோறு மட்டும் தான் வாழ்க்கையா?

இல்லை! சோறு என்பது மனித ஜீவிதத்திற்கு மிக ஆதாரம்!

அதைக் கூட உண்மையில் அது இல்லாதவற்கு வழங்கும் நிலை 2016லும் உலக சமூஹத்தில் நிலவுவதைக் காண்கிறோம்!

”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” - என்ற மஹாகவி பாரதியின் வாய்மை வாக்குறுதியைப் புறநானூறு மீட்டுவாக்கம் செய்யப் பயன்படுகிறது.

இல்லை புறத்தின் வாக்கை பாரதி மீட்டுருவாக்கம் செய்தார் எனலாம்.

சோறு - பரிசு என்பதெல்லாம் ஒரு குறியீடாகக் காண்க.

அக்கால மக்கள் ஏன் கடந்த 20 ஆண்டுக்காலம் முன் வரை சமூஹம் போலி நாகரிகத்தில் விழாமல் உழைப்பு, சோறு, பசியாறுதல், ஆன்மீகம், சிறு சேமிப்பு, உற்றார் உறவினர் உதவி, தர்ம காரியங்கள் என்று தானே இருந்துள்ளது?

தற்போது மிகவும் சுயநலமாகி ”நான்” என்ற எண்ணத்துடன் மட்டுமே பொருளீட்டும் தன்மைக்குள் போலி வளர்ச்சிகள் மனிதனை மயக்குகின்றன.

பரிசு பெற்ற தனி மனிதன் தன்னுடன் இருந்தவனையும் காப்பாற்றும் சமூஹப்பொறுப்பைப் புறம் சுட்டுகிறது.இன்று அது இல்லை, அதனால் தெருவோர destitudes, அனாதைகள், முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன.

போதும் என்ற உயர் மனோபாவம் அக்கால மக்கள் அதிகம் தொண்டு இருந்தனர்.

அது போகட்டும், வீண் விருதுகள், புகழ், பரிசு வேண்டி இக்காலப் புலவரோ எழுத்தாளரோ அரசியல்வாதிகளைப் புகழ்ந்து கூறும் தன்மையை சங்கப்புலவர்கள் கொண்டிலர்.காரணம் தமிழ்ச்சங்கம் என்பதே அக்கால journalisam தான்.அது ஒரு மிக உயர்ந்த strict ஆன editorial, sensorial board.பாண்டியர்கள் தமிழகத்தின் உயர் மனித பண்புகளைப் பதிவாக்கம் செய்து மனித சமூஹத்துக்கு வழிகாட்ட சங்கத்தை மீனாக்ஷியின் முன் சொக்கநாதரைத் தலைமையில் இருத்திக் கோயிலில் பொற்றாமரைக் குளக்கரையில் நிகழ்த்தினர்.

149 புலவர்கள், அதில் 49 பெண்கள் என்றால் அக்காலத் தமிழ்ப்பெண்டிரின் உயர் கல்வி என்னே?

ஒளவை என்பவள் கிழவியல்ல.முட்டாள் சினிமாக்காரர்கள் பல காலத்து ஒளவைகளை ஒன்று கூட்டி all in one செய்து விட்டனர்.

ஒளவை இளம் யுவதி,அவள் அதியனுடன் நட்புக் கொண்டு ஒழுகினள் எனில், அக்காலத்தில் ஆண்-பெண் உயர் நட்பு சமூஹத்தில் காணப்பட்ட பார்வையை உணர்தல் வேண்டும்.

பல ஊர்களுக்கும் சென்று பலரது வாழ்வியல் மேன்மைகளைப் பதிவாக்கியுளர்.

சங்க உறுப்பினர்கள் 49 பேர் இதற்காகவே ஊர் ஊராய்ச் சென்று கள ஆய்வுகளும் செய்துளர்.

தனி மனிதனைப் பாடவில்லை!

அவனுள் இருக்கும் உயர் மனிதத்தையே பாடினர்.

அதனால் தான் பலரது தன்மைகளையும் இன்றும் நம்முள் வைத்துக் காணமுடியும்!

 அன்றாடம் புறநானூற்றை எழுதும் போது ”x என்ற மனிதனைக் கடந்து அவனுள் உள்ள மனிதத்தைக் கண்டு அதற்கேற்ப சங்கநூல் பதிவைத் தேர்வு செய்கிறேன்”

வீரம் என்பது அன்று போர்க்களம், இன்று நெறியான வாழ்வியல். Every day we have to stand against various issues of society...that is 2016 Veeram.

தானம், ஈகை, கொடை என்பது வெறும் பணம் அல்ல!

நட்பு, நல்வார்த்தை, நற்கருத்துகள், விருந்தோம்பல் ஆகியன மாறவில்லை!

சங்கநூல் பதிவுகள் வெறும் கதையல்ல, அவை மனிதனின் தன்மைகளின் ப்ரதிபலிப்புகள்

அவற்றைக் கொண்டு  வாழ்த்துவதில் எமக்கு அந்தப் புலவர்களும் மீனாக்ஷிசுந்தரேஸ்வரரும் மிக்க தயை செய்துள்ளனர்.

ஒவ்வொரு முறை மதுரை செல்லும் போதும் மிக விசேஷமாக சங்கப்புலவர்கள் சன்னிதியில் மரியாதை செய்ததன் பலன் இப்போது கைகூடி நிற்கிறது.

என்னையே நான் ஒவ்வொரு புலவனாக விழிப்புணர்வில் காணும்,  மனிதத்தைப் பாடும் பேறு கிடைத்துள்ளது.வேறு என்ன வேண்டும்? இதன் மூலம் மீண்டும் தமிழ் மீட்டுருவாக்கம், மறுவாசிப்பு பெறுகிறது.இக்கால மாணவனுக்கு ஏற்ற வகையில் வெறும் உண்மையை நான் உடனுக்கு உடன் பதிவு செய்கிறேன்.

சங்கம் [சங்கம் என்றால் மிக உயர்ந்தது என்ற அர்த்தம் உண்டு] கண்ட தமிழ் இப்போது  கையில்.....

with regards,

DR.M.Madeswaran

19.6.2016, Madras

1. The chief who removed my selfishness - ஐயூர் மு...
Understanding a poem in UNI5 approach - a Sangam T...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries