Sabarimala of women hood - Aattukaal Pongaala

Sakthi Foundation

The world's largest women gathering - Attrukaal Pongaala [Sabarimalai of women] *

4.3 million women gathered in Thiruvananthapuram for Aatrukkaal pongala.

பாரத தேசத்தில் எத்தனை எத்தனையோ ஸ்தலங்கள், பெருமைகள், தோற்ற வரலாறுகள், ஆன்மீக வழிகாட்டும் விழாக்கள்... தென் தேசத்தில் சக்தி வழிபாட்டில் பல ஸ்தலங்கள் முதன்மையாகின்றன. சேர தேசமாம் கேரளத்தில் தேவி வழிபாட்டில் பத்தினி வணக்கமும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இணைந்தது. கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். அவ்வூரில் உள்ள தலையாய தேவி ஸ்தலம் ஆற்றுக்கால்.

 கிள்ளி ஆற்றின் கரையில் உள்ள ஸ்தலம் இது. ஆற்றுப்படுத்தப்பட்ட கால் ஆற்றுக்கால். ஆற்றுப்படுத்துதல் தான் பெற்ற உதவியை எடுத்துக் கூறி, உதவியின்றித் தவிக்கும் ஒருவரைத் தான் சென்ற இடத்துக்குச் செல்லும் படி வழிப்படுத்துவதே ஆற்றுப்படுத்தும் நெறி.இது ஒரு இலக்கியவகையாக அக்காலத் தமிழில் உருவானது. அன்னை சக்தியை நோக்கி மனம் ஆற்றுப்படுத்தப் படுகிறது. உலக வாழ்வில் சதா கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்து வினையின் கொடூரத்தினால் தளர்வுறும் மனித மனத்தை சாந்தியை நோக்கி ஆன்மீக ஆற்றுப்படுத்துகிறது. செய்த வினைப்பயனின் காரணமாகவே வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அமைகின்றன.இதையே விஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக் கொண்டு விட்டது மனித சமூஹம். வினை தீர ஆன்மீகம் தேவை. ஆன்மீகம் என்பது உண்மையான நன்றி!

தெய்வத்திடம் நன்றியுடன் வாழ வேண்டும். மேலும் வினை தீர தெய்வத்தின் பெயரில் சமூஹ நலங்களைச் செய்ய வேண்டும். சுயநலம் இல்லாத மனதில் சுயநலம் அல்லாத வினைகள் எழாது. அதனால் பிறவியில் துக்கங்கள் இல்லை! ஆணும் பெண்ணும் இணைந்து சமூஹப் பொறுப்புணர்வை ஏற்றுக் கொள்ளவே திருமணம் இல்லறம் ஆகியன வலியுறுத்தப்பட்டன.

சிலப்பதிகாரத்தில் ஓர் காட்சி மதுரை கோவலன் இறுதியாகக் கண்ணகியுடன் பேசும் இடம் ”இத்தனை கஷ்டங்களை என்னால் அனுபவித்த நீ எதற்காக நான் அழைத்தவுடன் என்னுடன் வந்தாய்?” கண்ணகி பாரத தேசத்தின் ப்ரதிநிதியாய்ப் பேசுகிறாள், ”அறச்செயல்களைச் செய்யவும், உண்மையைப் பின்பற்றவும், ஆதரவு அற்றவர்களுக்கு உதவுவமும் வாழ்வில் ஒரு வாய்ப்பு வருமோ என்று காத்திருந்தேன்!” இந்த கோட்பாட்டை எடுத்துக் கொண்டு, பாரத தேசத்து இல்லறங்கள் கடமை ஆற்ற வேண்டும் என்ற உயர் நோக்கில் கண்ணகியாரை தெய்வமாக்கி வணங்கியது அக்காலச் சமூஹம்.

 

சேர தேசம் முழுவதும் கண்ணனியாரைக் கொற்றவையுடன் [காளி] சேர்த்து வணங்கும் பண்பாடு மேலோங்கியது.ஊர் தோறும் கொற்றவைக் கோயில்கள் எழுந்தன. அவ்வாறு உருவான ஒரு ஸ்தலம் தான் அனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி ஸ்தலம். முல்லை வீடு என்ற குடும்பத்தினர் பூம்புகாரில் இருந்து புலம் பெயர்ந்து சேர தேசம் வந்தனர்.அப்போது தேவியை வீட்டின் அருகிலேயே ப்ரதிஷ்டை செய்தனர்.வழிபாடு வளர்ந்தது..... காலப்போக்கில் அனந்தபுரத்து மக்கள் மிகவும் கொண்டாடும் ஸ்தலம் ஆனது. பசிப்பிணி போக்குவதே பாரத தேசத்தின் மிக முக்கிய அறம். அதையே மாதவியும் மணிமேகலையும் செய்தனர். கண்ணகியாரும் அதைச் செய்யவே இல்லறம் செய்யக் காத்து இருந்தார் என்று வெளியிடுகிறார். முல்லை வீட்டில் ஆண்டு முழுவதும் விவசாயம் மூலம் வரும் வருவாயில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தனர்.ஊர் மக்களும் சேர்ந்தனர்.காலம் ஓடியது பங்குனி மாதத்தில் கார்த்திகை நாளில் ஊர் கூடி அன்னையை வழிபடும் விழா ஆண்டு தோறும் நிகழ்ந்தது.அன்னத்தை அண்டியோருக்கும் அனாதைகளுக்கும் விருந்தினருக்கும் ஆதரவு அற்றவர்க்கும் எவருக்கும் எதுவுக்கும் அளிக்க மக்கள் பொங்காலா விழா மேற்கொண்டு நடத்தினர். பெண்கள் வீட்டின் தேசத்தின் கண்கள். பெண்கள் மூலம் தேசத்தின் அறம் செயல் படுகிறது. பெண்களின் துணை கொண்டே ஆணின் தர்மம் தலைப்படுகிறது. பெண்களின் தர்ம சிந்தனையின் அடிப்படையில் தான் தேசத்தின் சமூஹக் கட்டமைப்பு அமைகிறது. இதை வலியுறுத்தவும், குறிப்பாக அன்னம் பாலிப்பதை நிலை நிறுத்தவும் பெண்களுக்கு எனவே பொங்காலா விழா பரிணமித்தது. வ்ரதம் இருந்து இருமுடி சுமந்து அடர்ந்த வனப்பகுதி சென்று குடும்பமும் தானும் சமூஹமும் நலமுற ஐயப்பனை வழிபட ஆண்களுக்கு அமைந்தது சபரிகிரி. அதே வேளை வ்ரதம் பூண்டு, உயர் தர்ம எண்ணத்துடன் மாத்ரு பாவனையில் பசிப்பிணி போக்கும் உயர் எண்ணத்துடன் அன்னையின் முன் பொங்கலிடும் வழக்கம் பெண்களுக்காக பெண்களால் ப்ரத்யேகமாய் வடிவமைக்கப்பட்ட விழாவே ஆற்றுக்கால் பொங்காலா. இது இன்று பெண்களின் சபரிமலை ஆயிற்று. இது ஆண்களை எதிர்த்து செய்யப்பட்டது அல்ல. ஆணும் பெண்ணும் சமம், எதிரிகள் அல்ல. இருவரும் இருவரையும் மதிக்க வேண்டும். சபரிமலையும் ஆற்றுக்காலும் இருபாலருக்கும் ஒரே தர்மத்தை எடுத்து இயம்பும். அங்கே ஐயப்பன் அன்னதான ப்ரபு, இங்கே பகவதி அன்னபூர்ணேஸ்வரி ஒன்று தெரியுமோ? சேர தேசத்தின் அன்னபூர்ணா ஸ்தலம் ஆற்றுக்கால் அன்னம் மூலம் தான் எண்ணம் அமைகிறது அதனால் தன பாரத்தத்தில் எந்த காரியச்செயலும் சோறு இல்லாமல் முடிவதில்லை சோர்வை நீக்குவதால் சோறு ஆனது. மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகியவற்றை நம் சோறு நீக்கும். பொங்காலா விழாவில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இடம் இல்லை.அனந்தபுர ஊருக்குள் வர வழியில்லை.ஊரின் எல்லையில் இருந்தே அவர்கள் காத்திருக்க வேண்டும். பதினான்கு வயதுக்கு மேலான பெண்களுக்கு 18 படிகள் ஏற அனுமதியில்லை.அதுபோல் பதினான்கு வயதுக்கு மேலான ஆண்கள் பொங்காலா அன்று ஊருக்குள் வரவியலாது. பெண்கள் தம் மன உணர்வுகளைத் தம் சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளும் தனித்துவ மனோதத்வ நிலைக்கும் பாரதப் பண்பாடு அன்றே இடம் தந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பெண்களின் கூட்டம் அதிகரிக்கும் ஆற்றுக்கால் பொங்காலாவில் சமூஹத்தின் உயர் பதவிகளில் உள்ள பெண்கள் பங்கேற்பது மிக இன்றியமையாததாகும். கேரளம் மற்றும் தென் தமிழகத்தின் பெண்கள் ஒன்று கூடி கற்புக்கரசியாரைப் பரவும் விழா இது. உலகில் மிகப்பெரிய மதச் சரபு கொண்ட மனிதக் கூட்டம் அல்ஹாபத்தின் கும்பமேளா என்று கின்னஸ் பதிவு செய்கிறது. அதே கின்னஸ் 2016ன் மிகப் பெரிய பெண்களின் கூட்டம் [gathering of women] என்று ஆற்றுக்கால் பொங்காலாவைப் பதிவு செய்தது.காரணம் இவ்வாண்டு 4.3 மில்லியன் பெண்கள் கூடிப் பொங்காலா இட்டு அன்னைக்கு மரியாதை செய்தனர். வெறும் ப்ரமாண்டம் மட்டும் கவனத்தில் கொள்ளாமல், உண்மையில் காலம் காலமாக இல்லறத்தார் பேணும் பல அறங்களைத் தம்பதிகள் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் பொங்காலாவைப் பெண்கள் மேற்கொள்ளுதல் வேண்டும். ”நம் தேசத்தை மேவிய பெண்மணியை நாம் மதிக்க வேண்டும்” என்று சேரனின் ராணி சமூஹப்பொறுப்புணர்வில் பேசுகிறாள்.காரணம் சமூஹத்தில் உயர் குலம், படிப்பு, பதவி ஆகியவற்றில் உள்ளோரின் வாழ்க்கையைப் பார்த்தே எளியோரும் சமூஹமும் பின்பற்றுகிறது. அந்த நடிகை பொங்கால் வைத்தாள் இந்தப் பாடகி பொங்கால் வைத்தாள் இந்த IPS பதவிப் பெண் பொங்கால் வைத்தாள் வருடம் தோறும் ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் தான் நிவேத்யத் தீர்த்தம் ஊர் முழுக்கப் பொங்கல் பானைகள் மீது தெளிக்கப்படுகிறது, என்றெல்லாம் மீடியாக்கள் பெருமை அடிப்பதை விட தர்ம சிந்தனையைத் தூண்டி விடுவதே உயர்ந்தது. தன் கணவனுடன் இணைந்து அறச்செயல்கள் செய்ய அன்றைய கண்ணகியாருக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்று சமூஹத்தில் பல பெண்களுக்குத் தரமான வாழ்க்கை ஏற்பட்டுள்ளது.அதை அவர்கள் தம் குடும்பத்தின் மேன்மைக்கும் உற்றார் உறவினர் சமூஹத்தின் மேன்மைக்கும் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். தெரிந்தவருக்கு உணவிடுவது விருந்து. தெரியாதவருக்கு உணவிடுவது சோறு. ஆதரவு அற்றவர்களுக்கும் அனாதைகளுக்கும் சேறிடுவதோ அன்னதானம். ஆனால் 2016 வாய்க்கு ருசியான உணவு இல்லாவிட்டால் கொடுத்த பொட்டலத்தைத் தூக்கி எறியும் கூட்டத்து உணவிட வேண்டாம். சோம்பேறிகளுக்கும் வீணே உண்டு களிப்போருக்கும் உணவிட வேண்டாம். பாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் மிக மிக அவசியம்! ஆற்றுக்கால் பொங்காலா அந்த உயர் அறத்தைப் பேண வழி செய்யட்டும். அனைவரும் ஒன்று கூடி அறம் செய்தால் மனித சமூஹம் சீரழியாதன்றோ? ஓம் சக்தி!

With regards, Dr.M.Madeswaran, 30.6.2016, Madras * Pongaalaa you tube shows available.

Poraiyar UNI5 center - Monthly report - June 2016
Diary writing in SENDURAI UNI5 CENTER - June, 2016
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries