Srivilliputhur Andal
Sakthi foundation
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் – a social, feminism, historical presentation.
தோற்றப் பொலிவு - ஆண்டாள் கோபிகைகளின் ரஸிகை.அதனல தான் தான் வாழ்ந்த காலத்திலும் இடையர்கள் போல் ஆடையில் உலா வந்தால், அது அவளது சாதியியத்தைத் தாண்ட வைத்தது.
இன்றும் ஆண்டாள் மதுரைப் பகுதி இடையர் பெண்கள் பாவனையில் தான் நடை உடை பாவனையுடன் ஒரு கோபிகையாக அலங்காரம் செய்யப்படுவதைக் காண்க.
கண்டாங்கிச் சேலை, மதுரைப்புறத்துச் சாயக்கொண்டை, கோபிச் சந்தனம், உடலில் உள் ஆடைக்குள் வெண்ணெயுடன் கலந்த பச்சைகற்பூரப் பூச்சு, கையில் வெற்றிலைக் கிளி என ஆள்கிறாள்.
கம்பன் கொடுத்த சூடகம்
கம்பனுக்குப் பெரிய கோயில் பொற்காசுகள் கொடுத்துச் சிறப்பித்துள்ளது.ஆனால் அதை அவர் சூடக ஆபரணமாக [சீதையின் அடையாளச் சின்னம்] ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்குக் கொடுத்துள்ளார்.
மார்கழி உத்சவத்தில் இன்றும் ”கூடாரை வெல்லி” விழாவன்று ஆண்டாள் ராஜகோபுரம் ஏகி, ”நம் சூடகம் எங்கே?” என்பதும், ”அம்மா! அதோ தமிழ்க் கம்பன் கொண்டு வருகிறார்!”என்று கூறி, கம்பனின் சூடகத்தை அவள் சிரத்தில் உயர்ந்த ஞானத்தின் அடையாளமாகச் சார்த்துவதைக் காணலாம்.
ஓர் அங்க அடையாளம்
மிக அடர்த்தியான சுருண்ட கூந்தல் தனக்கு உண்டு என்பதை அங்க அடையாளமாக ஆண்டாள் குறித்துள்ளாள். ”சுரும்பார் குழல் கோதை”.
அவளது ஆறு பொன் வளைகளும் அழகர் தோளில் விளங்குகின்றன.அவளது வைரத் தோடு இன்றும் அவளது செவிகளில் மின்னும்.சங்கிடம் இறைவனின் வாயூறல் எப்படி இருக்கும் என்று அவள் அகத்துறையில் வினவியதைக் கொண்டு பகவத் ராமானுஜர் சங்குப்பதக்கம் சார்த்தியுள்ளார்.
பெரியாழ்வாரின் மாணவன் ஸ்ரீவல்லப பாண்டியனின் அமைச்சன்.அவன் ஆண்டாளுக்குப் பல ஆபரணங்கள் செய்து சார்த்தினன்.அவற்றுள் அவள் அடிக்கடி சார்த்திக் கொள்வது பொற்பாண்டிக் காசு மாலை.
திருமலை நாயக்கர் வைர மூக்குத்தியும் சிவப்பு நவரத்னக் கைகளும், பாதங்களும், கிளியும் செய்து கொடுத்துள்ளார்.
தங்கக் கண்ணாடி, பொன் எண்ணெய்க் கிண்ணி, பொன் சீகக்காய் அரப்புக் கிண்ணி, தங்கக் கொண்டை ஊசி, சிக்கெடுக்கும் சீப்பு ஆகியன ராணி மங்கம்மாளின் கொடை.
ஸ்ரீரங்கமன்னாரும் ஆண்டாளும் உடைகளை மாற்றி அணிவது வழக்கம்.ராதையும் கண்ணனும் அவ்வாறு அணிவர் - பாகவதம்,இன்றும் வடதேசத்தில் கண்ணனை ராதையாய், ராதையைக் கண்ணனாய் அலங்கரிப்பதைக் காணலாம்.
”ஆண்-பெண் சமூஹ உறவு, ஒற்றுமை, சமச்சீர், சக்தி-புருஷ பாவம் ஆகியனைவற்றை உட்கொண்ட அலங்காரம் இது” - இருவரும் ஒன்றே என்ற காதல் மகத்துவத்தின் குறியீடே.
மார்கழி முப்பது நாளும் ஆண்டாள் தான் நீராடிய குளத்தில் தான் இன்றும் எண்ணெய்க் காப்பு விழா காண்கிறாள்.அப்போது கோயிலுக்குப் பின் உள்ள அவளது தோழியின் வீட்டில் தான் அரிசி உப்புமா அவளுக்கு நிவேதனம் ஆகும்.ஆண்டாள் அரிசி உப்புமாவை மிகவும் உகந்து உட்கொண்டதாக வரலாறு.
ஸ்ரீமத் ராமானுஜர் குளத்தைத் தூர் வாரி ஆண்டாளின் பொருள் ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்துள்ளார்.
ஸ்ரீஆண்டாளின் வீடே பெரியாழ்வாரின் மறைவுக்குப் பின் கோயிலாக அவரது தம்பி குடும்பத்தால் மாற்றப்பட்டு, இன்றும் அவர்களே ப்ரதான பூஜைகள் செய்கிறார்கள்.
பெரியாழ்வார் மன அமைதியின்றி அழகர் மலையில் சென்று வாழ்ந்து அங்கே அழகர் அடி சேர்ந்தார்.
வெள்ளிக்கிழமை ஊஞ்சல்
ஸ்ரீவல்லப பாண்டியனும் அமைச்சனும் கோயிலை எழுப்பியும், வெள்ளிக்கிழமைப் பொன் ஊஞ்சலையும் சமர்ப்பித்தனர்.இன்றும் ஆண்டாளை நன்கு அருகில் காண வேண்டும் எனில், வெள்ளிக்கிழமை மாலை அவள் மன்னாருடன் பொன் ஊஞ்சலில் இருக்கும் போதே காணலாம்.
நானே கண்ணன்!
மார்கழி உத்சவத்தில் மாலையில் குளத்தில் இருந்து வரும் போது கண்ணனாக அலங்காரம் செய்து கொண்டே வருவள்.இதுவும் வ்ருந்தானவத்தை ஒத்த வழிபாட்டு முறை, தானும் இறைவனும் ஒன்றே என்ற ஏக சத்ய தத்வத்தை அவள் உணர்ந்த பாவத்தையே இது குறிக்கும்.
சில்ப சாஸ்த்ரமும் கிளியும்
அவள் கையில் உள்ள வெற்றிலைக் கிளி செய்ய ஐந்து மணி நேரம் ஆகும்.வெள்ளிலை, மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளை மொட்டு, காக்கைப்பொன், அரளி ஆகிய கொண்டு அவளுக்குக் கிளி சார்த்தப்படும்.
”இருப்பது ஒரே சத்தியம்” என்பதையே கிளி உணர்த்தும்.கிளிக்கு நாம் சொல்லிக் கொடுத்ததைத் தான் பேசத் தெரியும், அதற்குத் தானாக எதையுமே பேச வராது.இருப்பது ஒரே பரம்பொருள், அதுவே அனைத்துமாக ஆகி உள்ளது என்ற உண்மையையே கிளி உணர்த்தும் பாவனையில் மீனாக்ஷியும் ஆண்டாளும் கிளியைக் கொண்டு உள்ளனர்.
அழகருக்கு ஆயிரம் அண்டாக்கள் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பணம் செய்வதாக ஆண்டாள் குறிப்பிடுவதைக் கண்ட ராமானுஜர் அழகருக்கு அதைச் செய்தார்.
ஹனுமானுக்கு அனுகரம் செய்த ஆண்டாள்
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் ஆண்டாள் தன்னை ஹனுமான் வாஹத்தில் ஏற்றி உலா வர வேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் கனவில் கூறினாள்.ஹனுமான் அழைத்துத் தான் வாராமல் இருந்ததை நிவர்த்தி செய்து கொண்டாள்.உலகில் வேறு எங்கும் இறைவி அனுமான் வாஹனத்தில் ஏறுவது இல்லை!
மிக்க கட்டுப்பாடுகள் உள்ள ப்ராஹ்மணக் குலத்தில் ஆயிரம் ஆண்டுகட்கு முன் ஒரு பெண் மிக பகிரங்கமாகத் தன் காதலையும் காமசுகானுபவ ஏக்கத்தையும் public காக வெளியிட்ட தைரியம் ஆண்டாளுக்கே உண்டு! Freedom of expression எல்லாம் பாரத தேசத்தில் என்றோ வந்து விட்டது!
சரித்திரத்திலும் சில உண்மைகள் மறைக்கப்படும்.இலக்கியம் என்பது நாம் கொஞ்சுவது அல்ல என்று ஜெயகாந்தன் கூறுவதைக் கருத்தில் கொள்க.
யாரோ பெற்ற பென் குழந்தை, ஊர்த்தலைவர் விஷ்ணுச் சித்தர்தம் துளசி வனத்தில் கிடத்தப்பட்டு ஆண்டாளாக வளர்ந்தது.அதை எந்த அளவு ப்ராஹ்மண சமூஹம் அன்று ஏற்றது என்பதில் பெரிய கேள்வி behind the screen உள்ளது.
தேவர் அடியார் வாழ்க்கையில் அவள் தன்னைப் பிணைத்துக் கொள்கிறாள் என்று ஆய்வுகள் கூறுவதையும் கவனத்தில் கொள்க.
ஆண்டாள் வாழ்ந்தது வெறும் பதினெட்டு ஆண்டுகளே!
அவள் பாடியது பொது மக்களின் மேன்மைக்காக!
”religion is not for empty belly'' என்று விவேகானந்தர் கூறும் முன் ஆயிரம் ஆண்டுகட்கு முன் அதைக் கூறியவள்.
தேசம், உழவு, உழைப்பு வளர மழையே ப்ரதானம் என்று இயற்கைக்குக் குரல் கொடுத்தவள். அதனால் தான் அவளை பூமியின் அம்சம் என்று கூறுகிறோம்!
இன்று சமூஹம் கொண்டாடும் ஆண்டாள் அவள் காலத்தில் தூற்றப்பட்டாள் என்பதே உண்மை!
இதையெல்லாம் மீறுபவர்கள் தான் சமூஹ முன் மாதிரிகள் ஆவர்.
அவளது மாலை என்பது, மனதின் உயர்க் குறியீடே.மனதை முழுமையாகப் பரிமாறிக் கொள்ளும் குறியீடே கல்யாணத்தில் மாலையின் தத்துவம்.அதையே அவளது மாலை மாற்று வைபவம் காட்டுகிறது.
கல்யாணம் செய்து கொள்ளாமல் பெண்கள் தம் எண்ணப்படி நல்ல வழியில் வாழ முடியும் என்பதற்கு ஆண்டாளும் முன் உதாரணம் ஆகிறாள்.
ஆடி உத்சவத்தில் வரும் திருமடி சேவை கூட தம்பதிகளின் அன்பையும் அதில் பெண்மையின் முக்யத்துவத்தையும் உணர்த்துவதாகக் காட்டுகிறது கோயில்.
ஆண்டாளின் initial
தன்னைக் கண்டு எடுத்து வளர்த்த தன் தந்தையை மிகவும் மதித்த அவள் initial status ஆக அவரையே ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் வைத்துப் பதிவாக்கியுள்ளாள்.
வருவாய்க்கு வழி காட்டும் லக்ஷ்மி
திருப்பாவையில் ஒரு தேசத்தின் நிரந்தரமான வருவாய் என்பது அதன் உழவுத் தொழிலை வைத்தே உள்ளது என்பதைக் காட்டி இருக்கிறாள்.
அவள் பூமியின் அம்சமா?
சாதிகள் கடந்த நிலையில் எவருக்கு இறையாண்மையில் உரிமை உண்டு என்று அவள் பூமியின் பொதுவுடைமையைப் பாடியதால் தான் பூமியின் அம்சம் எனப்படுகிறாள்.
வாழும் போது ஓட ஓட விரட்டி அவமதிப்பது, செத்த பின் கோயில் கட்டி விழா எடுப்பதும் தான் நமக்குத் தெரியும்! இதற்கு ஆண்டாளும் விதிவிலக்கு அல்ல!
ஆண்டாள் என்பது ஏன்?
இறையாண்மையைத் தன் பொதுவுடைமைச் சேவையாலும் சமூஹ அக்கறையாலும் பக்தியாலும் ஆட்கொண்டதால் ”ஆண்டாள்” ஆகிறாள்.
அவளுக்கு விஷ்ணுச்சித்தர் வைத்த பெயர் கோதை - மலர்ச்செண்டு என்று அர்த்தம்.
மார்கழி நீராட்டத்தில் பாண்டிய மஹராணியர் நீராடும் பாவனையில் ஆண்டாள் மிக விசேஷமாக நீராடுவள், you tube காண்க.
வரதக்ஷிணையை ஏற்காத ஆண்டாள்
பங்குனி உத்திரத்தில் கல்யாணம் ஆன அன்று மாலை ஆண்டாளும் மன்னாருடன் தன் சித்தப்பா வீட்டுக்குள் செல்வாள், அங்கு பால்பழம், சீர் எல்லாம் தரப்பட்டு, வரதக்ஷிணை தராத பொய்ச்சண்டை நடிக்கப்படும்.அப்போது அவள் அணிந்திருந்த வைர மூக்குத்தி அன்று அவளுக்கு அணிவிக்கப் படும்.பின் வரதக்ஷிணையாக வைரமூக்குத்தி தரப்பட்டதை ஏற்காத ஆண்டாள் அதை அணிவதே இல்லை என்று சங்கல்பம் கொண்டு கழற்றி வைத்து விடுவாள். நவயுகப் பெண்களே! Feminism ஏதோ மேகத்திய தத்துவம் இல்லை!
மாப்பிள்ளையை choose செய்யும் உரிமை
ஸ்ரீரங்க மன்னார், அழகர் [காட்டு அழகர் கோயில்], அண்ணாமலை ஸ்ரீவேங்கடவர், சிவகாசி திருத்தங்கல் பெருமாள் ஆகியோர் நான்கு கருட சேவை செய்து ஆண்டாள் முன் நிற்க, ஆண்டாள் தான் ஸ்ரீரங்க மன்னாரையே மணக்க விரும்புவதாகத் தன் தந்தையிடம் கூறும் விழா பங்குனியில் உண்டு.
பெண்மைக்குச் சம உரிமை
ஆண்டாளும் ஸ்ரீரங்க மன்னாரும் எப்போதும் ஒரே வேளையில் தான் உலாக்காண்பர். இருவரும் ஒரே வேளையில் வாஹனங்களில் வருவர்.இது சம உரிமையின் சின்னம்.
உலகம் நம்மைக்காக நோன்பு
மார்கழி ஆரம்பிக்கும் முன் பெரியாழ்வார் ஸ்ரீரங்க மன்னாரின் அனுமதியுடன் உலக நலனுக்காக மார்கழி வ்ரதம் இருக்க முறைப்படி ஆண்டாளை வீட்டுக்கு அழைக்கும் வைபவம் இன்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உண்டு. ஒரு நாளும் பெரியாழ்வார் ஆண்டாளின் வீட்டில் தங்குவது இல்லை! வடபத்ர சாயி கோயிலுக்கு அருகில் உள்ள தன் கோயிலுக்கே இரவு எத்தனை காலம் ஆயினும் வந்து விடுவார்.
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் ஆரம்பம் ஆன அக்கால கட்டத்தில் அவள் தன் தந்தையுடன் சுற்றுப் பயணம் செய்தாள், மக்களைச் சந்தித்தாள், ஆன்மீகக் கல்வியை எடுத்துக் கூறினாள்.அவளது பாடல்கள் சமூஹத்தில் மக்களால் ஏற்கப்பட்டன என்பதில் ஐயம் இல்லை!
I thank DR.Prdaheep Kumar who accompanied me, took me to this place and also reviewed, late Mr.Ramasamy anna [Virudhu nagar] who took me to this place in early 1970s.
DR.M.Madeswaran.M
17.4.2016, Madras
By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/