Tanjore big temple's previous form - Tamil article

தஞ்சைத் தளிக்குளம் எது?

இன்றைய தஞ்சாவூரைக் கி.பி 7ஆம் நூற்றாண்டில் அப்பர் தன் தேவாரத்தில் ”தஞ்சைத் தளிக்குளத்தார்” என்ற சொற்களால் பதிவு செய்துள்ளார்.

”தளி” என்பதற்கு ”கருங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட மூலஸ்தானம்” [கற்றளி = கல் + தளி] என்று பொருள். குறிப்பாக சிவனின் கர்ப்பக்ருஹங்கள் பல பல்லவர் காலத்தில் தளிகள் ஆயின.

மஹேந்திர பல்லவன் காலத்தில் கருங்கற்கள் கொண்டு அமைக்கப்படும் கோயில் கட்டிடக் கலை அதிகம் வளர்ந்தது.

அப்பர் அவன் காலத்தில் வாழ்ந்தவர்.அவனது ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

தளிக்குளம் என்பது இன்று தஞ்சைப் பெரிய கோயிலே என்று முடிவு கட்ட ஒரு வாய்ப்பு உள்ளது.

பெரியகோயிலைச் சுற்றியுள்ள அகழியும் அதன் மத்திய பகுதியும் பல்லவன் காலத்தே பெரிய குளமாகவும் அதன் நடுவில் தொன்மை மிக்க சிவாலயம் ஒன்றும் இருந்துள்ளது.

அப்பரின் ஆலோசனையால் பல்லவன் மஹேந்திரன் அதைக் கற்றளிக் கோயிலாக மாற்றியிருக்க வேண்டும்.

அதையே அப்பர் பெருமான் ”தஞ்சைத் தளிக்குளம்” என்கிறார்.

தளியின் கரையில் உள்ள குளம் அல்லது குளத்தின் மத்தியில் உள்ள தளிக்கோயில் என்றும் பொருள் கொள்ளலாம்.

முன்னூறு ஆண்டுகளில் அக்கோயில் சிதிலமாகி விட்டிருக்க வேண்டும்.

ராஜராஜ சோழன் தேவாரத் திருப்பதிகங்களைத் தேடித் தொகுப்பித்தவன். அவனைத் ”திருமுறை கண்ட சோழன்” என்று சிறப்பிக்கின்றன வரலாற்றுப் பதிவுகள்.

இக்காலத்து மக்கள் கூட தன் ஊரை ஆழ்வாரோ நாயன்மாரோ அருணகிரியோ பாடியுள்ளாரா என்று ஏங்குவது போல், தன் தலை நகர்த் தஞ்சையை எங்கேனும் தேவார மூவரோ மாணிக்கவாசகரோ பதிவு செய்துள்ளனரா என்று ராஜராஜனும் ஏங்கினான் எனலாம்.

அவனது ஏக்கம் போக்கும் வழியில் அப்பரின் இப்பதிவு உள்ளது.

அத்தளியையே தன் ஆன்மீக குருவான கருவூர்த் தேவரின் அறிவுரைப்படி ராஜராஜன் பெரியகோயிலாக மாற்றினான்.

மூலஸ்தானத்து சிவலிங்கம் மாற்றப்பட்டு இருக்க வேண்டும், காரணம் சிதிலமாகி இருக்கலாமே?

எனவே ”தஞ்சைத் தளிக்குளத்தார்” வேறு யாரும் அல்ல, பெரிய கோயில் ப்ரஹதீஸ்வரரே!

Tanjore Nisumbha soodhani Devi temple - Tamil arti...
Koovagam Aravan temple and trasgenders
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries