Tanjore Nisumbha soodhani Devi temple - Tamil article

Nisumba Soodhani Devi – Tanjore

முப்பாட்டன் புகழ் பாடும் திருவாலங்காடு செப்பேடு...

”முத்தரையரிடம் இருந்து கைப்பற்றிய தேவரின் அளகாபுரிக்கு நிகரான , உயர்ந்த மாடமாளிகைகள் கொண்ட, அழகிய சுண்ணாம்புப் பூச்சால் மிளிரும் வீடுகள் கொண்ட தஞ்சாவூரை விஜயாலயன் தன் அழகுணர்வால் புதுப்பித்து மேன்மேலும் அழகு செய்தான்.தன் மனைவியுடன் இணைந்து இல்லறம் செய்வது போல் அவ்வூரில் கோல் ஓச்சினான்.சும்ப நிசும்பரை வதம் செய்த தேவியின் அருளால் அவன் தஞ்சாவூரைக் கைப்பற்றி, கடல்கள் சூழ்ந்த பூமியையே ஒரு அழகிய மாலையாக அணிவது போல் தஞ்சையை ஆண்டான்.” - ராஜேந்திர சோழன் 1 தன் முப்பாட்டனாம் விஜயாலனைப் பற்றித் திருவாலங்காட்டு செப்பேடு மூலம் கூறும் அழகிய செய்தி.

விஜயாலயன் எதனால் நிசும்பசூதனிக்குக் கோயில் அமைத்தான்?

சும்ப நிசும்ப அசுரரை தேவி அழிக்கத் துணிந்த போது ரக்த பீஜன் என்ற மஹாசுரனை அழிக்கும் மிகப் பெரிய சவால் உண்டானது.ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஆயிரம் ரக்தபீஜர்கள் தோன்றுவர்.நமது ஆணவம் அடி வாங்கும் போது அது மேலும் எகிரும் தன்மையுடன் செயல்படும் மனோநிலையின் குறியீடே ரக்தபீஜன்.

இவனை தேவி காளியாக மாறி சம்ஹரித்து அவனது ரத்தம் முழுவதையும் குடித்து விடுகிறாள்.அதன் பின்னே சும்ப நிசும்பரை அழிக்கிறாள்.விஜயாலய சோழன் தேவிமாஹாத்மியம் கூறும் இப்புராண தத்துவத்தைத் தன் வாழ்வியலுடன் தொடர்பு படுத்தினான். தன் தீராப் பகையான பல்லவர் - முத்தரையர் ஆகியோரை அவ்விரு அசுரர்களாக எண்ணி இவன் அவர்தமை எதிர்த்தான்.அவர்களின் கூட்டுறவால் சோழ சாம்ராஜ்யத்துக்கு எவ்வித ஆபத்தும் இருக்கக் கூடாது என்று அவர்தமக்கு உதவிய பலரையும் வென்று கொன்றான்.இதை இறையருளால் செய்த அவன் தன் நன்றியின் பொருட்டும், ஊரின் காவல் பொருட்டும் நிசும்பசூதனி அன்னையை மிக நுட்பமான முறையில் கல்லால் செதுக்கிக் கோவில் ஆக்கினான்.இரு அசுரரைத் தன் கால்களால் மிதிக்கும் அதிகோர ரூபத்தில் அன்னை காட்சி தருவது ஆய்வில் பாரத தேசத்தில் தஞ்சாவூரைத் தவிர வேறு எங்கும் இல்லை! தகுந்த தேவி உபாசகன் ஒரு குருவாக இவனுக்கு அமைந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமே இல்லை!

I saw the very first portrait of Thyagarajar and h...
Tanjore big temple's previous form - Tamil article
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries