Tharangampadi - Birth places of Indian press and Indian protestant Christianity

Sakthi Foundation

தரங்கம்பாடி – Birth place of Indian press and Protestant Christianity in India

பாரத தேசத்தில் முதன்முதலில் அச்சில் ஏறிய மொழி எது?

தமிழ் தான்!

எங்கே அந்த அச்சுக்கூடம் அமைந்தது?

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் காரைக்காலுக்கு 15 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஊர் தரங்கப்பாடி.

தரங்கம் என்றால் அலை.

அலைகள் கரையில் மோதுவது இசையாக இயற்கையில் ஒலிப்பதால் இவ்வூர் தரங்கம்பாடி ஆனது.

ட்ராங்கோபார் என்று மேலை தேசத்தவர் உச்சரித்தனர்.தரங்கை என்றும் இதை இன்று அழைப்பர்.

அவ்வூரில் தான் பாரதத்தின் முதல் அச்சுக்கூடம் அமைந்தது.

9.7.1706 ஆம் ஆண்டில் ஜென்மர் தேசத்தின் இரண்டு கிறிஸ்துவப் பாதிரியார்கள் தரங்கப்பாடிக் கடற்கரையில் வந்து மரக்கலத்தில் கால்பதித்தனர்.

அவர்கள் தான் சீகன்பால்க் [Zeigenbalg] மற்றும் புளுட்சோ.

சீகன்பால்க் தமிழ் மொழியை மிகவும் விருப்பத்துடன் கற்றார்.உள்ளுர்ப் புலவர்களும் நான்கு அந்தணர்களும் அவருக்குத் தமிழைப் பயிற்றுவித்தனர்.

அதன் பயனாக முதன்முதலில் புனித பைபிளை 1712ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். தரங்கையில் தான் முதன் முதலில் ப்ராட்டஸ்டன்ட் கிறிஸ்துவம் இந்தியாவில் விதைக்கப்பட்டது. [Birth place of Indian Protestant Christianity]

அவ்வாண்டிலேயே தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் உண்டாகி, 1715ஆம் ஆண்டில் புனித பைபிளைத் தமிழில் ”புதிய ஏற்பாடு” [New Testament] என வெளியிட்டார்.இவரையே ”இந்திய தேசத்தின் அச்சுத் தந்தை” என்று புகழ்வர்.

சீகன்பால்க் பல தமிழ்ச்சுவடிகளைச் சேகரித்து அவற்றை மொழிபெயர்க்க முற்பட்டுள்ளார்.உலக நீதி என்ற தமிழ் அற இலக்கியம் அவரால் ஜென்மனியில் மொழிபெயர்க்கப் பட்டது.

மேலும் அவர் தமிழர்கள் குறித்து AN ACCOUNT OF THE MALABARIANS  என்ற நூலை ஜென்மனியில் எழுதினார்.

கடுதாசிப்பட்டறை

அச்சுப்பட்டறைக்குத் தேவையான காகிதங்களைக் கடுதாசுப்பட்டறை என்ற இடத்தில் இருந்து தயாரித்தனர்.தஞ்சை மன்னர்களுக்கும் டென்மார்குக்கும் இடையில் இருந்த தகவல் பறிமாற்றம் காகிதக் கடிதம் மூலம் இருந்தது.இந்திய மொழிகளில் முதன்முதலில் காதிதத்தில் கடிதம் உருவானதும் தமிழில் தான் என்பதில்லை பெருமை கொள்கிறோம், டச்காரர்களுக்கு நன்றி கூறுகிறோம்!

அக்கடிதங்களுக்குத் தேவையான காகிதங்கள் தயாராகி சேமிக்கப்பட்ட இடமே கடுதாசிப்பட்டறை.

நாயக்க மன்னன் அனுமதித்த அந்நியக் கோட்டை...

இன்று இஸ்லாமியரும் கிறிஸ்துவரும் அதிகம் வாழும் இவ்வூரில் மிக அழகிய டச் கோட்டை கடற்கரையில் கம்பீரமாக நிற்கிறது.

அருகில் கி.பி 1306 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் எழுப்பப் பட்ட அழகிய மாசிலாமணி நாதர் சிவன் கோயில் கொண்டுள்ளார்.

கி.பி 1620ல் டச் காரர்கள் இவ்வூருக்கு வந்தனர்.அப்போது தஞ்சை ரகுநாத நாயக்க மன்னரின் ஆட்சியில் கீழ் இவ்வூர் விளங்கியது. அப்போது டென்மார்க்கில் நான்காம் கிறிஸ்டியன் என்ற பெயர் பெற்ற மன்னர் ஆண்டார்.அவருக்கும் நாயக்க அரசனுக்கும் இடையில் வாணிபத் தொடர்பு உண்டானது. பனை ஓலை வடிவில் உள்ள பொன் ஏட்டில் தெலுங்கிலும் டச் மொழியிலும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.அது இப்போது டென்மார்க்கில் உள்ளது.

டச் ஜெனரல் ஓவ் ஜெடி வியாபாரம் செய்யக் கடல்வழிப்போக்குவரத்துக்கு ஏற்ற இடமாக இவ்வூர் இருப்பதை உணர்ந்து நாயக்க மன்னனின் அனுமதியுடன் டேன்ஸ்போர்க் எனப்படும் இக்கோட்டையை எழுப்பினார். ஆண்டுக்கு ரூ. 3,111 கோட்டை உள்ள இடத்துக்கு வாடகையாக மன்னன் வசூலித்தார். காப்டன் ரோலன்ட் கிராஃப் கோட்டையைக் கட்டினார்.கி.பி 1772ல் டேனிஷ் ஆட்சியின் கீழ் இவ்வூர் வந்தது.

சுமார் 150 ஆண்டுகள் இக்கோட்டை புழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வூரில் கலங்கரை விளக்கம் இருந்திருக்க வேண்டும்.அது அழிந்து விட்டது.இன்று கோட்டைக்குள்  அருங்காட்சியகம் இயங்குகிறது.கி.பி 1620 ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் தரங்கம்பாடிக் கோட்டை எழுப்பப் பட்டது.டச் கட்டிடக்கலைப்பாணியில் அமைந்த இதை எழுப்பிக் கொடுக்கப் பாடுபட்ட கூலிகள் நம்மூர்க்காரர்கள் தான்.கி.பி 1845 ஆம் ஆண்டு வரை இக்கோட்டையில் இருந்து வாணிகத்தை மேற்கொண்டனர் டச் காரர்கள்.அவ்வாண்டில் ஆங்கிலேயர்களுக்குக் கோட்டையை ரூ.12,5000க்கு விற்றுவிட்டனர்.35 டேனிஷ் அதிகாரிகள் கோட்டையை ஆண்டுள்ளனர்.12 டேனிஷ் மரக்கப்பல்கள் தரங்கைக்கு 1620 - 1801 ஆம் ஆண்டுக்குள் வந்துள்ளன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல பாகங்களைக் கைக்கொண்டு ஆள முற்பட்ட போது, தஞ்சைப்பகுதியைப் பிடித்துக் கொண்டனர்.அதன் தலைநகரமாக இக்கோட்டையுள்ள தரங்கையை நியமித்துக் கொண்டனர்.1862 வரை இவ்வூரில் இருந்தே தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்தனர்.

கி.பி 1705 ஆம் ஆண்டு ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப ஜென்மனியில் இருந்து வந்த இருவர் இக்கோட்டையில் இருந்தே செயல்பட்டுள்ளனர்.

கோட்டைக்கு அருகிலேயே டேனிஷ் அதிகாரிகளின் மாளிகைகள் அமைந்தன.அவை இன்று தாஜ் ஹோட்டல் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு டென்மார்க்கு உதவியது.

கோட்டையின் முக்கிய இடங்கள்

அகழி, கோட்டையைச் சுற்றிய அழிந்து போன பெரிய மதில் சுவர்,கிணறு, இரண்டு தலக்கட்டமைப்பு, அலுவலகம், சரக்கு அறை, சமையல் அறை, வயின் தயாரிக்கும் அறை, குதிரை, யானை - லாயம், சிறை, மரண தண்டனைக் கிணறு, பீரங்கிகள் தாக்கும்படியான மதில்கள் மற்றும் சுரங்கப்பாதை.

கி.பி 1701 ஆம் ஆண்டில் பாரதத்தில் முதல் ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவ ஸியான் - ZION CHURCH தேவாலயம் இவ்வூரில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாட்டில் உள்ளது. கி.பி 1718ஆம் ஆண்டில் ந்யூ ஜெருசலெம் தேவாலயம் எழுப்பப்பட்டது.

இன்று டேனிஷ் அரசு அக்காலத்தில் இருந்த டச் கவர்னர்களின் பங்களாக்களின் வரைபடத்தைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்து சுற்றுலாவை ஊக்குவித்துள்ளது.

மிக சமீபத்தில் கடல் கோட்டையின் மீது அலைகள் மோதும் வண்ணம் ஊருக்குள் பரவியுள்ளது.

மிளகு வியாபாரம் செய்வதற்காக டேனிஷ் அரசு தன் அதிகாரிகளை அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.ஆனால் அதற்கு முன்னரே போர்த்துகீஸியர், ஆங்கிலேயர் ஆகியோர் அதே வணிக நோக்கில் பாரத தேசத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு பாதுகாப்புக் கோட்டையைக் கட்டிக்கொண்டு வேர்விட்டு வாழ ஆரம்பித்தனர்.

ஆயுதக் கிடங்குடன் கூடிய பெரிய கோட்டை இவர்களுக்கு எதற்கு என்றே இன்று கேட்கத் தோன்றுகிறது?

தங்கள் வாணிகப் பகைவர்கள், கடல் கொள்ளையர்கள் போன்றவற்றில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே கோட்டைக் கொத்தளங்கள் கட்டப்பட்டன என்றே வரலாறு கூறுகிறது.

மிக்க பரந்த மனப்பான்மையுடன் வேற்று தேசத்தவர்களை வரவேற்கும் பரந்த மனப்பான்மை நம் தேசத்துக்கு மட்டுமே இருக்கிறது! இக்கருத்தில் இக்கணம் வரை எவ்வித கருத்து மாற்றமும் இல்லை!

டேனிஷ் அதிகாரிகளின் ஆவணத்தில், ”இரு தேசத்தாருக்கும் இடையில் எவ்வித வேற்றுமையும் இருக்கக் கூடாது என்று தஞ்சை அரசரின் கருத்து..” என்ற ஆணித்தரமான வாக்கியம் இடம் பெற்றுள்ளது.வேற்றுமையை எவ்விதத்திலும் மக்களிடையே உண்டாக்கக் கூடாது என்ற எண்ணமே இது.

கடற்கரையில் பாண்டியரின் கைவண்ணம்

கி.பி 1305 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேரக பாண்டியன் ஈசனுக்குக் கடற்கரை ஓரமாகக் கோயில் அமைத்தான்.அதுவே இன்று மாசிலாமணி நாதர் ஆலயம்.இரண்டாம் குலசேகர பாண்டியன் கி.பி 1307ஆம் ஆண்டு இக்கோயிலைப் புதுப்பித்தான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.பலகாலம் ஏற்பட்ட அலைச் சீற்றங்களால் இக்கோயில் அடிக்கடித் தன் நிலையில் சீர் கெட்டது.குறிப்பாக 2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலைகள் கோயிலின் முன் பகுதிகளை மிகவும் சீரழித்தன.தற்போது தமிழக அரசு கோயிலைப் புதுப்பித்துள்ளன.முற்காலத்தில் கோயிலில் இருந்த சண்டிகேஸ்வரர், சூரியன் மற்றும் அம்பிகையின் சிலைகள் தற்போது கோட்டையின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

அருங்காட்சியகத்துள்...

பழங்கால ஆவணங்கள், வரைபடங்கள், மரக்கப்பல்களின் மாதிரிகள், மண் பாண்டங்கள், டேனிஷ் கண்ணாடிப் பாத்திரங்கள், பீங்கான் கோப்பைகள், உடைந்த பல கலங்கள், எடை கற்கள், யானைத் தந்தம், பீரங்கிகள், பழங்காலக் கப்பலின் சில பாகங்கள், நாயக்க மன்னரின் சிலை, மராட்டி அரசர்களின் ஓவியங்கள், மாசிலாமணி ஈசர் கோயிலின் கல்வெட்டுகள் மற்றும் சிலைகள், ஓலை - எழுத்தாணி, சாய்வு நாற்காலி, வயின் ஜாடி, ஊறுகாய் ஜாடி, விளக்குகள், நெல் சேமிக்கும் காடி போன்றவை.ஆனால் அவை சரியாகப் பராமறிக்கப்படவில்லை, மக்களுக்கு அக்கறை இல்லை.

ஊருக்குள் வரவேற்கும் வாயில்...

இன்று சுனாமிக்குப் பின் கடல் கோட்டைக்கு மிக அருகில் வந்துவிட்டது.அதனால் கோட்டையில் கீழ்ச்சுவர் சேதம் ஆகிறது.அதைத் தடுக்கக் கற்கள் போடப்படுகின்றன.ஊருக்கு வெளியே ப்ரம்மாண்டமான நுழைவுவாயில் உள்ளது, அதன் கதவுகள் மிக மிக பலம் வாய்ந்தவை.இது 1792ல் கட்டப்பட்டது.அதன் அருகிலேயே 2004 சுனாமி நினைவுத்தூண் அமைகிறது.அதனடியில் பலர் புதைக்கப்பட்டுள்ளனர்.

தூய ஓஸோன் காற்று வீசும் கடற்கரை

முதல் சியான் தேவாலயம்

முதல் ப்ராட்டஸ்டண்ட் தேவாலயம் [இரு தேவாலயங்களிலும் பல டச் அதிகாரிகளின் கல்லறைகள் உள்ளன]

ந்யூ சர்ச் ஆஃப் ஜெருஸலெம் தேவாலயம் சீகன்பால்கால் 1718ல் கட்டப்பட்டது.அதில் அவரது கல்லறை அமைகிறது.

முதல் அச்சுக்கூடம்

பங்களா ஆஃப் த பீச் - கோட்டை

பாண்டியர் கோயில்

300 ஆண்டு காலப் பழமையான மசூதி

சீகன்பால்க் கப்பலில் இருந்து இறங்கிய இடம், அவரது சிலை, குறிப்புகள்

போன்ற பல வரலாற்றுச் சின்னங்கள் இன்றும் பாதுகாக்கப்படுவதை நாம் வாழ்வில் ஒரு முறையாவது கண்டு நம் தேசத்தின் வரவேற்பு குணத்தை உணர வேண்டும்.

தஞ்சை ரகுநாத நாயக்க மன்னர் டச் அரசனுக்கு எழுதிய கடிதம் வேறு கட்டுரையில் இடம் பெறும்.

St.Thomas - a respected disciple of Christ by Indi...
Coimbatore parents talk about their children's dev...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries