Valaiyaapathy - a great Tamil epic - edited version for students

Sakthi Foundation

வளையாபதி [ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று]

மாணவர்களுக்கு ஏற்ற வடிவில் எழுதப்பட்டது.

தமிழ் மொழியில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று புகழ் பெற்றவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி மற்றும் குண்டல கேசி ஆகும்.

இவற்றுள் முதன் மூன்று காப்பியங்களும் முழுமையாகக் கிடைத்துள்ளன.மற்ற இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை.கிடைத்த சில பாடல்களின் விளக்கத்தையே கற்று வருகிறோம்.

வளையாபதி என்ற காப்பியம் மனித வாழ்க்கைக்கு என்ன உணர்த்துகிறது என்பதை மாணவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப இக்கட்டுரை எடுத்துக் கூறும்.

வளையாபதி காப்பியத்தை எழுதிய புலவரின் பெயரும் நமக்குத் தெரியவில்லை.

அளவுக்கு அதிகமான ஆசையினால் ஒன்றை அடைய எத்தகைய தீய வழியையும் கைக்கொள்ள மனிதன் எண்ணுவான்.இது மஹா ஆபத்து!

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, மனதில் பயங்கரமான கோபம் உண்டாகும்! இந்தக் கோபம் ஏற்படாதவாறு மனதைப் பக்குவம் செய்ய வேண்டும்.

பிறரது புகழ், பதவி, பொருள், வாழ்க்கை அமைப்பின் மீது பொறாமை கொள்ள வேண்டாம்.

உண்மையான அன்பும் பண்பும் பக்தியும் கொண்ட பெரியவர்களை வணங்கி அவரது அறிவுரைக் கேட்டுப் பின்பற்றினால் வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

சேர்த்து வைத்துள்ள பணம், சொத்து, இளமை, அழகு, பதவி ஆகியன நிலை இல்லாதவை.எனவே அவற்றைப் பாதுக்காப்பதில் அதிகம் சக்தியையும் நேரத்தையும் செலவிட வேண்டாம்.சமூஹ முன்னேற்றத்துக்குப் பாடுபடுக, நல்லதே எண்ணுக - நல்லதே செய்க.

அழகான வேலைப்பாடு கொண்ட க்ரீடத்தை அணிந்த மன்னன் எத்தனை புகழ் மிக்கவனாக இருந்தாலும் அவனும் ஒருநாள் இறப்பான்.அதனால் இவ்வாழ்க்கை நிலைத்தது இல்லை என்று உணர்ந்து கொள்க.

ஆசையின் காரணமாக அதை அனுபவிக்கத் துடிக்கும் போது பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது.அதைக் கருத்தில் கொள்க.பிறவியினால் சதா வாழ்க்கையில் துன்பமே!

மனிதப்பிறவி என்பது கிடைப்பதற்கு மிக மிக அரிது.அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

மனிதனாய்ப் பிறந்தாலும் நல்ல ஒழுக்கம் கொண்டவனாக இருக்க வேண்டும்.உடலில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பிறப்பதே மிகவும் கொடுத்து வைத்த அருள் ஆகும்.அழகும், அறிவும், அன்பும், ஒழுக்கமும் கொண்டவர்கள் அதை உயர்ந்த எண்ணங்களும் சேவைகளும் செய்யவே பயன்படுத்த வேண்டும்.

ஐம்புலன்களில் மிகவும் சக்தி உடையது நாக்கே ஆகும்.அதை அடக்கி ஆள வேண்டும்.உண்பதிலும் பேசுவதில் மனிதன் அடக்கத்தைக் கையாள வேண்டும்.அவ்வாறு நா அடக்கம் இருந்தால் புகழ் பெறலாம், இல்லை என்றால் சிறை செல்லுதல், தண்டனை பெறல் போன்ற் துன்பங்களும் வரும்.

பொய் பேசாதீர், பிறரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்ல வேண்டாம், எப்போதும் எல்லாரிடத்தும் எல்லா விஷயங்களிலும் குறை காண வேண்டாம், மற்றவர்களை ஒருபோதும் தரக்கீழாக எண்ணவே கூடாது, உயிர்க்கொலை - அசைவம் கூடாது, பிறர் மனம் நோகும் படி நடக்கவோ பேசவோ கூடாது [இவற்றைச் செய்தால் அவற்றின் பலன் உன்னையே ஒரு நாள் வந்தடையும்]

மற்றவர்தம் பொருள் மீது ஆசைப் படவே கூடாது, எந்தப் பொருளையும் திருடக் கூடாது, தவறான முறையில் பொருள் சம்பாதிக்கக் கூடாது, பிறர் தவறான வழியில் சம்பாதித்தப் பொருளை நீங்கள் அனுபவிக்க வேண்டாம், தெய்வத்தின் பெயரில் அப்பாவி உயிர்களைப் பலியிடுதல் மஹா மஹா பாவம், மனிதனைக் கொலை செய்வதோ அதை விட மிகப் பாவம், வறுமையால் கஷ்டப்படுபவர்களைப் பார்த்து கேலி செய்யக் கூடாது.

வறுமையில் கஷ்டப்படுபவர்கள், துறவிகள், நல்லவர்கள், ஆதரவற்றவர்கள், அனாதைகள் ஆகியோருக்கு அவர்தம் பசியை அறிந்து தயவு செய்து அன்னதானம் செய்க.

ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்க, நல்லது செய்ய மற்றவர்களையும் தூண்டுக, சுயநலத்தை விட முயற்சி செய்க, எல்லா உயிர்களையும் அன்புடன் மதித்திடுக, யாரையும் நமக்குக் கீழாக எண்ணவே கூடாது, பாவமான காரியங்களையும் கொடுமைகளையும் பயத்துடன் கைவிடுக.

அனைதிற்கும் மூலகாரணமான சத்தியத்தை உணர்க.

அசைவ உணவை உண்பது கொலை செய்வதற்குச் சமமே!

பேராசை, களவு, போதைப் பழக்கம், கொலை, சூதாடுதல் [ஏமாற்றுதல்] ஆகிய ஐந்து மஹா பெரிய பாவங்கள்.இவற்றைச் செய்வதால் மனித வாழ்க்கை மிக மிகக் கொடிய துன்பங்களை அனுபவிக்கும்.

மனிதன் இவ்வுலகில் வாழ மிகவும் பாடுபட்டு உண்மையாக நேர்மையாக சம்பாதிக்க வேண்டும், அதை நல்ல காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்த வேண்டும்.

Yuan Chwang about Kanchipuram - diary records
Under the seas of Kanyakumari - Then Madurai and K...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries