Western travelers' documentation about Mahabalipuram

Sakthi oundation

மாமல்லபுரமும் மேலை நாட்டினரும்...

1582 A.D - கோச்ரோ பல்ஃபி

St.தமாஸ் மலையில் இருந்து 8லீ தூரம் பயணம் செய்து அதிகால மூன்று மணிக்கு இவ்வூரைப் படகு மூலம் அடைந்தோம். ”7 பகோடாஸ்” என்று இதை அழைக்கிறோம்.7 மிக அற்புதமான கற்கோயில்கள் உள்ளன.இவை அதிகம் உயரம் இல்லாத பாறைக்குன்றுகளைக் கொண்டே உருவானவைவற்றை மதிக்கம் வண்ணம் மூன்று முறை சல்யூட் செய்தோம்”

1700 A.D - நிகோலோ மனூசி

”சோழ மண்டலக் கடற்கரையில் சத்ரஸ்படோ என்ற சதுரங்கப்பட்டிணத்திற்கு வடக்கில் 4லீ தொலைவில் மாவேலிவரோ உள்ளது.சைனா தேசத்து சிற்பம் போல் இங்கு பல அழகிய சிற்பங்கள் உள்ளன.”

1727 A.D - ஹெமில்டன்

”கொன்னிமரே என்ற இடத்தில் அழகிய ஏழு பகோடாக்களைப் பார்த்து ரஸித்தேன்.பல விஷயங்கள் மறந்து விட்டன.தேசம் முழுவதும் இருந்து மக்கள் இவ்வூரைக்கு ஆண்டு முழுவதும் வந்து பார்க்கிறார்கள்.”

பொட்டாம்,

”நான் 1721ல் இக்கடற்பகுதியில் பயணம் செய்யும் போது என் கப்பல் உடைந்து மூழ்கியது, நான் தப்பித்தேன்.1727ல் சார்ல்டன் என்ற மீட்புக் கப்பலில் மீட்கும் எந்திரத்துடன் வந்தேன், என் கப்பலைக் கண்டேன், ஆனால் அலைகள் மிகவும் கடுமையானவை, விட்டு விட்டேன்”

1788 A.D - சேம்பர்ஸ், [முதன்முதலில் மாமல்லபுரத்தைப் பற்றி விரிவான நூல் எழுதியவர்]

”பல மீனவர்களும் வயோதிகரும் கடலுள் இன்னும் சில பகோடாக்கள் இருப்பதைக் கண்டுள்ளதாக என்னிடம் கூறினர்.”

1794 A.D - அரிவிட்னி,

”கிழக்கு இந்திய கம்பெனி வெளியிட்ட மதராஸ் வரைபடத்தில் மாமல்லபுரத்தை ஏழு பகோடாக்கள் என்று கூறுக”

1798 A.D - கோல்டிங்ஹாம்,

”கணேச ரதத்தில் சிவலிங்கம் இருக்கிறது”

1800 A.D - ப்ரா போலினாடா,

” பாரத தேசத்தின் மிகவும் ஒப்பற்ற கலை மாமல்லபுரமே! இதை எப்படிப் புகழ்வேன்? என் வாழ்க்கையில் இதைப் போன்ற அழகிய படைப்பைக் கண்டதே இல்லை! எனக்கு ஐந்து விஷயம் அறிந்த அந்தணர்கள் அனைத்தையும் விளக்கிக் கூறினர்.அவர்கள் போர்த்துகீஸ் பேசினர்.அவர்களுக்கு ரூ.5 கொடுத்தேன்.”

1810 A.D - செளதே என்ற ஆங்கிலேயர் மாமல்லபுரத்தைப் புகழ்ந்து அழகிய கவிதையே படைத்து லண்டலின் வெளியிட்டார்.

அதே வேளையில் மாமல்லபுரம் சிற்பங்கள் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று பதிவு செய்துள்ள பயணிகளும் உண்டு.

1844 A.D - வால்டர் எலியட்ஸ் பல கல்வெட்டுகளை ப்ரதி எடுத்து ஆராய்ந்தவர்.ஆதிவராஹ பெருமாள் குகையில் இருக்கும் கல்வெட்டை அறிய ரூ.30 தந்துள்ளனர்.மேல் தேசத்தினர் உலகில் உயர்ந்த பல விஷயங்களை மதிப்பதையே நம் தேசத்தார் பின்பற்ற்றுதல் உண்மையான western culture ஆகும்.

வெறுமனே cell phoneகளில் தங்களைச் சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் மட்டுமின்றி இவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும்.

Mahabalipuram - a guide
Poet Dandi about Mahabalipuram
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries