Why offering food to any one starving is important - event from Buddha's life

சித்தார்த்தனுக்குப் பாலமுது ஊட்டிய சுஜாதா...

 

சுமார் ஆறு வார காலம் சித்தார்தன் உண்ணா நோன்பு மேற்கொண்டு மிகவும் இளைத்துப் போனார்.

மிக ஆழ்ந்த நிலையில் தன்னை த்யானத்தின் எல்லை இட்டுச் செல்வதன் மூலம் தனக்குத் தேடும் தூய ஞானம் கிடைத்து விடும் என்று அவர் நம்பினார்.இங்கே த்யானம் என்பது உள் தேடல், தன்னை ப்ரபஞ்சத்துடன் பினைத்துக் கொண்டு தேடுதல் ஆகும்.

ஒரு கட்டத்தில் அவர் தன் உடல் உயிருடன் முதலில் நிலை ஆனால் தான் தன் ஞானத் தேடலைத் தொடர முடியும் என்பதை உணர்ந்தார்.உடல் ரீதியாக சாங்கிய முறையில் அவர் உணர்ந்த உண்மைகளில் இதுவும் ஒன்றே!

அதனால் மிகவும் களைப்பும் உடல் சோர்வும் கொண்ட சித்தார்த்தன் தனக்கு ஒரு குவளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று எண்ணினார்.

காரணம் அவர் ஆழ்நிலை த்யானத்தில் இருந்து மீண்ட போது ஒரு வழிப்போக்கர் கூட்டம் அவர் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்தது.அதில் ஒரு நோடோடிப் பெண் ”வீணையின் இசை வேண்டும் எனில், அதன் நரம்பைப் பாதுகாக்க வேண்டும், அதை இறுக்கினால் அறுந்துவிடும்” என்ற உட்பொருள் கொண்ட பாடல் பாடியதை இவர் கேட்டு அதன் கருத்தை உணர்ந்தாராம்.

எனவே மிக மெதுவாக எழுந்து நைரஞ்சன் ஆற்றில் குளித்தார், அப்போது கரை ஏற அருக்கு உடலில் வலு இல்லை.ஆற்றின் அலைகள் அவரை மூழ்க்கடிக்கும் அபாயம் ஏற்படுத்த ஒரு மரத்தின் வேரைக் கைக்கொண்டு கரை மீண்டுள்ளார் சித்தார்த்தன்.

அதன் பின் ப்ரபஞ்ச சக்தியிடம் தனக்கு உணவு வேண்டும் என்று விண்ணப்பம் செய்து மரத்தடியில் உட்கார்ந்தார்.

அப்போது அருகில் இருந்த சேனா கிராமத்தில் ஒரு போர் வீரரின் மகள் வாழ்ந்தாள்.அவள் தான் சுஜாதா.

அவள் தனக்குக் குழந்தை வரம் வேண்டி வனதேவதையிடம் நோன்பு மேற்கொண்டு மகப்பேற்றை அடைந்தாள். நன்றிக் கடனாக அவள் அன்று பால் பாயாஸம் நிவேதம் செய்யத் தன் தோழி புன்னாவை அழைத்துக் கொண்டு சித்தார்த்தன் இருக்கும் பகுதிக்கு வந்தாள், நிவேதம் சமைத்து அஜபால வ்ருக்ஷம் எனப்படும் ஆலமரத்து வனதேவதைக்குப் படைக்கும் முன் எலும்பும் தோலுமாக சித்தார்த்தன் இருப்பதைக் கண்டு பேயோ பூதமோ என்று பயந்து அலற, அவரும் வாய் திறந்து தன்னைப் பற்றிக் கூறி அவள் பயத்தைப் போக்க, அவளோ அவரது தூய ஞான மார்க்கத்தை உணர்ந்து பால் பாயஸம் கொண்ட கலத்தை அவருக்கே தேவதா அர்ப்பணம் செய்து தன் கருணையை நிலை நாட்டினாள்.

இவளது இந்த கருணை மிக்க உணவு அளித்த நிகழ்ச்சி புத்தரின் வாழ்வில் மிக மிக இன்றியமையாததாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகிறது.சுஜாதை தாயன்பு பொங்கத் தன் கையாலேயே பாயஸத்தை அவருக்கு ஊட்டினாள் என்று அவரது தொன்மை மிக்க நூல்கள் கூறும்.

இதைக் குறிக்கவே பல புத்தர் சிலைகள் கையில் பாத்திரத்தை வைத்துள்ளதாகக் காட்டப் படுகின்றன என்று கருதலாம்.

”சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை” - மனிதப் பிறவியில் இருந்து முக்தியை எய்த இவ்வுடல் மூலமே ஞானத்தைக் கொள்ள வேண்டி இருக்கிறது. உடலை அவசியம் தரமான உணவு, வேலைகள், பயிற்சிகள், மருந்து மூலம் பாதுகாக்க வேண்டும்.

சுஜாதா புத்தருக்கு உணவு அளித்த வரலாற்றைக் கவிமணி மிக அத்புதமாக ஆசிய ஜோதியில் பாடியுள்ளார்.

சுஜாதா சித்தார்த்தருக்குப் பாலமுது ஊட்டிய நாள் வைகாசிப் பெளர்ணமி!

அதனால் தான் ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்று மணிமேகலை கூறுகிறது, மணிமேகலையும் அதையே அமுதசுரபி மூலம் செய்தாள்.

There are plenty of people without a meal till today upon this Earth, please serve.

Dr.M.Madeswaran

Buddha Poornima day, 21.5.2016, Madras

Two women who transformed through Buddism's truth ...
Siddarth transforming into Buddha - Buddha Poornim...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries