Why we call ''sangeetha mummoorthigal''? - Tamil article

சங்கீத மும்மூர்த்திகள் என்று ஏன் அழைக்கிறோம்?

சங்ககாலத்தில் மக்கள் இசையை மிகவும் விரும்பிப் பயன்படுத்தினர்.ஒரு நாளின் ஒவ்வொரு பொழுதுக்கும் குறிப்பிட்ட இசையைப் பாடினர், வாத்தியங்களில் இசைத்தனர்.

இயற்கையுடன் கூடிய தெய்வ வழிபாட்டிற்கும், சங்கத்தில் எழுதப்பட்டு மக்கள் முன் பாடப்படும் கவிதைகளுக்கும் முறையான பண் [ராகம்] தரப்பட்டது.

பல இசை நூல்கள் கிடைக்காமல் அழிந்து போய் உள்ளன.பரிபாடல் சங்க இலக்கியத்தின் ஒவ்வொரு பாடலும் முறையே இசையுடன் பாட வழிசெய்யப்பட்டது.

ஒவ்வொரு செய்யுள் வகையும் இசையுடன் கூடிய இலக்கணத்தைக் கொண்டு அமைந்தன.இசை நிறை அளபெடை என்ற இலக்கணக் குறிப்புத் தமிழ் மொழிக்கே உரியது ஆகும்.

மன்னர்களின் அவை, இயற்கைச் சுழல், வீடுகள், தொழில் செய்யும் இடங்களில் இசை இசைக்கப்பட்டது.

சிலப்பதிகாரம் 2000 வருடங்களுக்கு முற்பட்ட தொன்மையான இசை இலக்கணங்களைப் பதிவு செய்கிறது.

அதனால் தான் பக்தியை வளர்க்க வந்த ஆழ்வார்களும் தேவர ஆசிரியர்களும் இசையையே mediaவாகக் கைக்கொண்டு மக்களை ஈர்த்தனர்.

காரைக்கால் அம்மை ”தமிழ் இசையின் தாய்” எனப்படுகின்றார்.

அதன் பின் பெரிய புராணத்தில், கம்பராமாயணத்தில் இசையைப் பற்றிய பல செய்திகள் உள்ளன.

அதன் பின் இசை என்பதைச் சோழர்கள் கோயில்களில் தேவாரத்தைப் பாடுவதற்கே அதிகம் கைக்கொண்டனர்.

சோழக்ர்கள் காலத்தில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் குறிப்பாக சைவ சமயத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தரப்பட்டது.

மூவேந்தர்களும் பல்லவர்களும் இசையையும் கூத்தையும் வளர்க்கப் பல வழிமுறைகளைக் கலைஞர்கள் மூலம் மேற்கொண்டனர்.காரணம் இவை அல்லவோ அக்காலத்தின் மிக முக்கிய பொழுது போக்குகள், ஊடகங்கள்?

அதனால் தான் தமிழை ”இயல்-இசை-நாடகம் [கூத்து]” என்று வகுத்தனர்.

 

ஆனால் இவ்விசை ஒரு கட்டத்தில் வெறும் கேளிக்கைப் பொருளாக மாறியது.

ஒரு காலத்தில் சினிமா என்பது மக்களுக்கு ஒரு வாழ்க்கைக் கருத்தை உணர்த்தும் ஊடகம் ஆக இருந்து இன்று தொன்னூறு சதவீதம் வெறும் கேலிக்கும் களிப்புக்கும் ஆக மாறியுள்ளதைப் போல், இசையும் கூத்தும் வெறும் மகிழ்வூட்டும் கலைகள் ஆயின.

அருணகிரி நாதரின் திருப்புகழ் மிகுந்த இசையறிவுடன் பாடக்கூடிய பக்தி நூல் ஆகும்.இசைக் குறிப்புகளை அவரே ஒவ்வொரு பாடலின் ஆரம்பித்திலும் கொடுத்துள்ளார். [கி.பி 15]

மன்னர்களையும், பணக்காரர்களையும், ஜமீன்களையும் வெறும் புகழ்வதும், அசிங்கமாகப் பாடியும் ஆடியும் மகிழ்வித்தும் வரும் கலைகள் ஆயின.

இருந்தும் கோயில்களில் பூஜைக் காலங்களில் விழாக்களில் இசையும் கூத்தும் இடம்பெற்றன.

இக்கட்டத்தில் மேலை தேசத்து ஆட்சிக்கு பாரதம் மெதுவாக ஆழ்ந்தது.அதற்கு முன் முகலாயரின் இசையும் கூத்தும் கலந்த நிலையையும் காண முடிந்தது.

இக்கட்டத்தில் சுமார் 16ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்த சங்கீத மூவர் [த்யாகராஜர்-ஸ்யாம சாஸ்த்ரிகள் - முத்துசாமி தீக்ஷிதர்] மீண்டும் இசையை ஆன்மீக முன்னேற்றத்துக்கும் மனிதனின் மனதை தெய்வத்திடம் ஈடுபடுத்தவும் கையாண்டனர்.

பொருளுக்கும் பொன்னுக்கும் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் ஆசைப் பட்டு அலைந்த அக்காலத்தில் இம்மூவரும் சுயநலமின்றி தூய தெய்வீக இசையை மக்களுக்கும் கோயில்களுக்கும் அளித்தனர்.

அதன் உண்மையை மன்னர்களும் மக்களும் மெதுவாகவே உணர்ந்தனர்.

தஞ்சாவூர் நாயக்க மன்னர்களும், மராட்டிய அரசர்களும் இசையை, கூத்து ஊக்குவித்தனர்.

வெறும் கேளிக்கைப் பொருளான இசையும் கூத்தும் மீண்டும் பழைய உயர்நிலையை எட்டத் தொடங்கியது சங்கீத மூவரால் தன் என்பதில் ஐயமே இல்லை. இசையும் கூத்தும் பலகாலம் ஒன்றாகவே நிகழ்த்துக்கலையாக இருந்து பின் பிரிந்தன.இன்று இசையும் கூத்தும் இரு வேறு கலைகள் ஆயின.

எந்த ஒரு கலையும் மனிதனை நல்ல முறையில் மகிழ்விக்க வேண்டும், அவனது சிந்தனையைத் தூண்டி விட வேண்டும்.வெறும் கேளிக்கைக்காக கலைகள் சில காலமே மனதில் இடம் பெரும்.

அதனால் தான் இவர்கள் ”மும்மூர்த்திகள்” என்று சமூஹம் அழைக்கின்றது.

Thyagarajar's Mohana raga krithi on his daughter's...
I saw the very first portrait of Thyagarajar and h...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries