Yuan Chwang about Kanchipuram - diary records

யுவான் ஸ்வாங் காஞ்சிபுரத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

கி.பி ஏழாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் பல்லவ தேசத்தினை ஆளும் காலத்தில் சைனா யாத்ரீகர் யுவான் ஸ்வாங் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார்.அவரது பயணக்குறிப்புகள் இதோ....

”த லொ பி து தேசத்தின் தலைநகரம் கஞ் சிஹ் பு லொ [காஞ்சிபுரம்]

இது 30 லீ சுற்றளவு கொண்டது.

ஊரைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் செழிப்பாக உள்ளது.

விவசாயத்தால் பலவகைப் பூக்களும் பழவகைகளும் உற்பத்தி ஆகின்றன.

இவ்வூர் மக்கள் நம்பிக்கையுடன் பயம் இல்லாமலும் நம்பத் தக்கவர்களுமாக உள்ளனர்.

பொதுநலத்தில் அக்கறை உள்ள மக்கள் இவர்கள்.

கல்விக்கு மிகவும் மதிப்பு தருகிறார்கள்.

இவர்கள் பேசும் மொழி மத்திய இந்திய மொழிகளில் இருந்து மாறுபட்டது.

புத்த பகவான் இவ்வூருக்கு வந்துள்ளார்.அவர் புத்தத்தை போதிக்க இடத்தில் மாமன்னர் அசோகர் தன் நினைவுத் தூண்களை வைத்தும் உள்ளார்.

இவ்வூரில் 100க்கும் மேலான புத்த விஹாரங்கள் அழகாக உள்ளன.

அவை புத்த மதப் பள்ளிகள், அவற்றில் 1000க்கும் மேலான புத்த பிட்சுகள் வாழ்கிறார்கள்.

தர்மபால பூஸர் பிறந்த ஊர் இதுவே ஆகும்.

புத்த மதம் அன்றி திகம்பர முனிவர்களின் ஜைனப் பள்ளிகள் பல இவ்வூரில் உள்ளன.

தலைநகருக்கு அருகில் மிகப் பெரிய 100அடி உயரம் கொண்ட புத்த விஹாரம் இருக்கிறது.அதில் பல கற்றறிந்த பெரியவர்கள் உள்ளனர்.

காஞ்சியில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியே செல்லத் துறைமுகம் ஒன்றும் உள்ளது [மாமல்லபுரம் இதுவே].கப்பலில் மூன்று நாட்கள் ஆகும் என்கிறார்கள்.

இலங்கையில் புத்த மதத்தைப் பரப்ப அசோகர் காலம் முதல் இவ்வூரின் வழியே பிட்சுகள் சென்றுளர்.

நான் இலங்கைக்குச் சென்று அங்குள்ள புத்த மத நூல்களைக் கற்க எண்ணினேன்.ஆனால் அதற்குள் இலங்கை மன்னன் இறந்தான்.

சுமார் 300 புத்த பிட்சுகள் இலங்கையில் இருந்து பஞ்சத்தின் காரணமாகக் காஞ்சியில் வந்து இருக்கிறார்கள்.

”நாங்கள் பாரத தேசத்தில் புத்தர் வாழ்ந்த புனித ஸ்தலங்களைக் காணப் போகிறோம்.இலங்கையில் எங்களை விட அதிகம் புத்த மதத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் இல்லை” என்று அவர்கள் கூறினர்.

யோகாவைப் பற்றி நான் பல விளக்கங்களைக் கேட்டேன்.

இதற்கு முன் சீல பத்திரா - இவர் நளாந்த பல்கலைக்கழகத்தின் யோகா பேராசிரியர்.இவரே எனக்கு வடமொழி கற்பித்தார்.இவர் கூறிய யோக சாஸ்த்ரமே எனக்குப் புரிந்தது.

காஞ்சியில் வெவ்வேறு மதப்பிரிவுகளுக்கு உரிய தேவாலயங்களும் உண்டு” 

Day to day practical life with Buddha
Valaiyaapathy - a great Tamil epic - edited versio...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries