Ingredients:
• 1 cup fresh grated coconut
• ¼ cup soaked almonds
• ½ cup soaked dates
• ½ tsp cinnamon powder
• ½ tsp cardamom powder
• ½ tsp dry ginger powder
• ¼ tsp salt
• ¼ cup poppy seeds to top up
Procedure:
• Peel the almonds skin.
• In a mixie jar add dates and almonds first, so that it will be easy to blend.
• Then add rest of the ingredients and blend it.
• After few seconds, open the jar and mix with a ladle so that everything gets blended evenly.
• It has to be in moulding consistency so that we get a nice ball shape.
• Take a small portion and make a ball shape.
• Then dip in poppy seeds so that it gets coated.
• Few you can keep it as plain without topping.
• Keep these balls in refrigerator for 4 hours. Do not keep in freezer.
• After 4 hours enjoy these super healthy energy balls.
Note : It taste good only when it is kept in the refrigerator. So don’t skip.
For reference do click the above youtube link.
Uni5 Community Blog
There is only one Truth and a single path to Truth, only views are different.
Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.
Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.
To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.
Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.
We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.
Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.
Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.
To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.
Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.
We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.
946 Hits
946 Hits
தீபாவளி
ப்ரம்மம் பராசக்தியாக மாறுகிறது
பராசக்தி பஞ்சபூதங்களாக மாறி அதன் கூட்டு இயக்கத்தால் ப்ரபஞ்சம் தோன்றி இயங்குவதை நன்கு மாணாக்கன் அறிதல் வேண்டும்.
அதன்பின் தீபாவளிக் கோட்பாடு தருக.
காளி என்றால் என்ன?
பாத்திரத்தின் உள்ளே வெற்றிடம் உள்ளது.அதில் தண்ணீரை முழுவதும் நிரப்புகிறோம்.
இதைபோல் இப்ரபஞ்சம் முழுவதும் உள்ள அண்ட வெளியில் முற்றிலும் முழுதும் இருண்ட அடர்த்தியான ப்ரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது.அதைக்கொண்டே பராசக்தி ஐம்பூதங்களைத் தோற்றுவிக்கிறது.இந்த இருண்ட அடர்த்தியான சக்தியான ஆற்றலையே குமரிக்கண்ட முன்னோர் ”காளி” என்று உருவகம் செய்தனர்.[அகமான மனதில் உருவம் தருதல் உருவகம்.]
THE DARK SPACE ENERGY IS KAALI.
இந்தக் காளியை மஹாராத்ரி என்று வணங்குவது தீபாவளி அமாவாஸ்யை இரவு.கிழக்கு இந்திய மாநிலங்களில் தீபாவளிக்குக் காளி பூஜை என்றே பெயர்.இப்போது புரியும் ஏன் நம் தேசத்தில் ஊர் தோறும் காளியை அதிகம் மக்கள் வணங்குகிறார்கள் என்று.
அர்த்தநாரி விளக்கம்...
அதே அமாவாஸ்யை தினத்தில் ஆந்திரம் கர்நாடகம் வடதமிழகப் பகுதிகளில் தம்பதிகள் கேதார கெளரி பூஜையை இல்லற மேம்மைக்கு என மேற்கொள்வது மிக ப்ரஸித்தம்.
கேதார்நாத்தின் அன்னை பார்வதி தவம் இயற்றி சிவனின் உடலில் இடபாகத்தைப் பெற்ற நாள் இதுவாகும்.இவ்விடத்தில் ப்ரம்மமும் சக்தியும் ஒன்றே என்ற கோட்பாட்டையும் ஆண் - பெண் சமத்துவம் குறித்த அர்த்தநாரி உருவகத்தையும் விளக்குக.இதில் ப்ரம்மம் சக்தி ஆகிய இரண்டையும் ஆண் பெண் தத்துவங்கள் என்று உருவகம் செய்வதை மீண்டும் revise செய்க.குறியீட்டு முக்கோணங்களைக் காட்டுக.[ஆண் - மேல் நோக்கிய மஞ்சள் முக்கோணம், பெண் கீழ் நோக்கிய சிவப்பு முக்கோணம்]
தீபம் வழிபாடு ஏன்
இவ்விடத்தில் குத்துவிளக்கு ஏற்றும் UNI5 concept revise செய்யப்படுதல் அவசியம்
ப்ரபஞ்சம் முழுவதும் அணு சக்தி அலைகள் சதா வெளிச்சமாக இயங்குகின்றன.அனைத்தும் இந்த ஒளியால் ஆனவையே என்பது விஞ்ஞானம்.இதை உணர்த்தவே தீபங்களை வரிசையாக ஏற்றி வணங்கும் தீப ஆவளி - தீபாவளி உயர்விழாவை முன்னோர் உருவாக்கினர்.மனிதன் ஒளி சக்தியின் உண்மையை மேன்மையை உணர்ந்து அவ்வொளி புறத்தே விளக்காயும் அகத்தே ஆன்மீக ஒளியாயும் வணங்குவதே தீபாவளி.
எல்லா விளக்கும் விளக்கல்ல - குறளை இவ்விடத்தே விளக்குதல் வேண்டும்.
அண்ட வெளியின் ஒளி சக்தியால் தான் அனைத்தும் ஆனது என்ற உண்மையை அறியவும், மனதில் உள்ள அறியாமை இருளை நீக்கும் ஞான வெளிச்சத்தை உள்ளே ஏற்றவும் விளக்கு வழிபாடு உருவானது.
தமிழகத்தில் தீபாவளி...
தென் தேசத்தில் ஐப்பசியில் அடைமழைக்காலத்தில் ஐந்நூறு ஆண்டுகள் முன்பு வரை இவ்விழா இல்லை.நாயக்க மன்னர்கள் காலத்தில் வந்த பழக்கமே தீபாவளி.இன்று கேரளத்தில் தீபாவளி இல்லை.தமிழர்களுக்கும் கேரளத்தவர்க்கும் தீபாவளி என்பது திருக்கார்த்திகையே.
தமிழகத்தில் தீபாவளி அமாவாஸைக்கு முன் தினமான சதுர்தசியில் வரும்.இதை நரக சதுர்த்தசி என்றே கூறுவர்.
கண்ணனின் மகன் நரகன்.அவன் இன்றைய பீஹார் ஒரிஸா மாநிலங்களை ஆண்டவன்.அவனுக்கு அழகிய பெண்களைச் சிறைப்பிடித்துச் சித்ரவதை செய்வது பொழுதுபோக்கு.இதை அவன் தாயான சத்யபாமா எவ்வளவு தடுத்தும் அவன் மாறவில்லை.கண்ணன் வேறுவழியின்றி உலக சமூஹ நன்மைக்கு எனத் தன் மகனை எதிர்த்துப் போரிட அதில் பாமா அவனைக் கொல்கிறாள்.விடுவிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் கண்ணனுடன் த்வாரகைக்குச் சென்று அவன் கீழ் வாழ்ந்தனர்.இந்த நிகழ்வையே தமிழர் தீபாவளியெனக் கொண்டாடுகிறோம்.
மனமாகிய சிறையினுள் நமது எண்ணங்கள் முக்காலத்திலும் ஏதோ ஒன்றை எண்ணிக் கவலைப் படுவதில் இருந்து விடுதலை பெறுதலை இது குறிக்கும்.
பாமா தன் மகனையே கொல்வது என்பது, நம்மால் உருவான வேண்டாத எண்ணங்களை நாமே தான் அகற்ற வேண்டும் என்று உணர்க.
உத்திர மத்திய ப்ரதேச தீபாவளி...
ஸ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் கழிந்து அயோத்யா மீண்டு திரும்பிய நாள் அமாவாஸ்யை.ஸ்ரீராமன் இல்லாத 14ஆண்டுகள் கோசலை தேச மக்கள் விழா கொண்டாடவில்லை.அமாவாசை அன்று மாலை ஸ்ரீராமன் அயோத்யாவுள் நுழையும் போது ஊரே கூடி விழா எடுத்து வரவேற்றதை இம்மாநிலத்தோர் கொண்டாடுவர்.
தீபாவளி கொண்டாடும் முறை
த்ரையோதசி - புதுப் பாத்திரம் வாங்கி அதில் பால் காய்ச்சி வழிபடுக.சுத்தமான பாத்திரத்தில் இட்ட தூய பாலே கெடாமல் இருக்குமாப்போல் மனமாகிய பாத்திரம் எப்போது உயர் எண்ணங்கள் கொண்டு விளங்க வேண்டும்.இதையே தன த்ரயோதசி என்பர்.தனம் - செல்வம், உயர் எண்ணங்கள் வரின் அனைத்து செல்வங்களும் வரும்.
அன்று மாலை உளுந்து வடை வெங்காயம் இன்றிச் செய்து எட்டு திசைகளிலும் ஒரு வடையை வீசி, எட்டு திசைகளையும் ஐம்பூதங்களையும் வணங்குக.அன்று மாலை ஆறு மணிக்கு வீட்டில் தென் திசை நோக்கி எம தீபம் இடுக. முன்னோர்களின் அருள் வேண்டி அத்தீபத்தை ஏற்றுக [அகல்]
இரவில் உறங்கப் போகும் முன் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெயும் சொம்பில் துளசி தீர்த்தமும் சாமி அறையில் வைத்துச் செல்க.நல்லெண்ணெயில் உடல் ஆரோக்யத்தின் சக்தியும், துளசி தீர்த்தத்தில் மனத் தூய்மையின் சக்தியும் உள்ளது.
கங்கை ஸ்நானம்
அதிகால எழுந்து நல்லெண்ணெய்யைத் தலையில் பூசி, துளசித் தீர்த்தத்தைச் சிறிது குளிக்கும் தண்ணீரில் கலந்து, காசியில் கங்கையில் குளிக்கும் பாவனையில் உடல் மனம் தூய்மை வேண்டி நீராடுக.இதையே கங்கா ஸ்நானம் என்கிறோம்.
புறத்தூய்மை நீரான்...குறளை விளக்குக.
அன்னபூரணி
பூமி மூலம் உழவர் தரும் உணவை அன்னபூரணி என்கிறோம்.அந்த சக்தியை வீணாக்காமல் உண்க.அதே வேளை இயற்கை வேளாண்மை மூலம் கிட்டும் உணவை உண்க.தரமான உணவை உண்க.உணவை ஆரோக்யம் குறித்து விழிப்புணர்வுடன் உண்க.அதை இல்லாதவர்க்கும் விருந்தினர்க்கும் தருக. அந்த அன்னபூரணியின் பொன் விக்ரஹத்தைக் காசியில் மூன்று நாட்கள் தீபாவளியில் பூஜித்து உலகில் உள்ள மக்கள் யாவர்க்கும் உணவு கிட்ட வேண்டுவர்.
அன்று மாலை அல்லது காலை மஹாவிஷ்ணுவுக்கு உரிய ஸ்லோகங்கள், திவ்யப்ரபந்தத்தில் சில பகுதிகள் சொல்லி ஸ்ரீமந்நாராயணனை வணங்குக.
அன்று மாலை விளக்கேற்றி வழிபடுக, வீடு முழுதும் விளக்கு ஏற்றுக, ஐந்து விளக்காவது ஏற்றுக.
புத்தாடை - புதிய தரமான எண்ணங்கள்
மறுநாள் அமாவாஸ்யை.முன்னோர் வழிபாடு கழித்து, அர்த்தநாரீஸ்வரரைக் குடும்ப நலன் வேண்டு வழிபடுக.
மாலையில் புதுத்துணி, காசு, அரிசி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை வைத்து மஹாலக்ஷ்மியை பூஜித்து வீட்டில் எப்போதும் எட்டு வகைச் செல்வங்கள் கிட்ட வேண்டுக.புதிய வியாபாரக் கணக்கைத் தொடங்குக.வடதேசத்து மக்களுக்கு இந்த அமாவாஸையே தீபாவளி, புதுவருடம்.
மறுநாள் கோவர்த்தன பூஜை
களிமண்ணில் மலை செய்து, அதில் முளைப்பாரி இட்டு, கண்ணனின் உருவத்தை அதில் வைத்து, மலைகளும், காடுகளும் செழிக்க, பருவமழை பொய்க்காமல் பெய்ய இறைவனை வேண்டுக.மலைக்காடுகள் அழியாமல் காக்கும் விழிப்புணர்வை இவ்விடத்தில் நினைவில் கொள்க.
கண்ணன் வாழ்ந்த வ்ருந்தாவனம் அருகில் உள்ளது கோவர்த்தனம் குன்று.அதனடியில் ஆண்டு தோறும் மக்கள் மழைக் கடவுளான இந்திரனுக்கு விழா எடுப்பர்.ஆனால் கண்ணன் காலத்தில் அதைக் கண்ணன் மாற்றினான்.
கண்ணன் கூறுவான், ”மழை மேகங்கள் எப்போதும் பருவ காலத்தே வரும்.அது பூமி மீது பெய்ய மலைகளும், காடுகளும் அவசியம், அவற்றைப் பேணி நன்றிக் கடன் செய்க”
ஆழி மழைக் கண்ணா திருப்பாவையை ஓதுக.
தீபாவளி இனிக்கட்டும்!
2447 Hits
2447 Hits
தீபாவளி - விளக்கம் தரவேண்டிய தெய்வ உருவங்கள்
அன்னபூரணி
பூமிக்கு உணவை உற்பத்தி செய்விக்கும் சக்தி தான் அன்னபூரணி.பசித்தோர்க்கு வயியார உணவிடல் வேண்டும் என்று நம்முள் உள்ள அன்பே அன்னபூரணி.உணவை, பூமியை வீணாக்கும் போது அன்னபூரணி சக்தி உதவாது.
தீபாவளி அன்று காசியில் தங்க அன்னபூரணி விக்ரஹம் லக்ஷ்மி - பூமிதேவியுடன் மூன்று நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும்.
லக்ஷ்மி - வாழ்க்கைக்கு வேண்டிய எட்டு வகை அடிப்படைச் செல்வங்கள்.
பூமி - நமக்கு வாழ ஆதாரம் தரும் இட சக்தி.
கங்கை
அனைத்து நீர் நிலைகளில் ஆதார சக்தியே கங்கை.நீரின் சக்தி என்றும் கூறுக.உடல் மற்றும் உள்ளத் தூய்மையை அருளும் சக்தி கங்கை.சுயநலம் இல்லாத மனதில் தூய்மை சேர்கிறது.இதையே கங்கை குறிக்கிறது.பாரபட்சம் இன்றி கங்கை எல்லோரின் அழுக்கையும் ஏற்கிறது.அதனால் தான் சிவன் தலைதூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்.தன்னலம் அற்ற மனமே அந்த கங்கை.
கால பைரவர்
ப்ரம்மம் சக்தியாக மாறிட ஒரு கால அவகாசம் தேவை.அந்த time energy தான் கால பைரவர்.
காசி விஸ்வநாதர்
ப்ரம்மம் சக்தியாகி, ஐம்பூதங்கள் ஆகி உருவத் தோற்றங்கள் படைக்கப்பட்ட போது முதலில் உருவான உருவம் காசியில் உள்ள லிங்கம்.விஸ்வம் - ப்ரபஞ்சம், நாதர் - மூலக் காரணம். ப்ரபஞ்சத்துக்கு மூல விதையாக இருக்கும் ப்ரம்மத்தின் குறியீடு.
காசி விசாலாக்ஷி
அனைத்தையும் பரந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பார்க்கும் பார்வையே விசாலமான விழிப்புணர்வு கொண்ட உட்பார்வை.அதன் சக்தியே தேவி விசாலாக்ஷி.
சாகம்பரி
தாவரங்கள் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் உற்பத்தி செய்து கொடுக்கும் காய் கனி வித்துக்கள் மூலிகைகள் ஆகியவற்றின் சக்தியே சாகம்பரி தேவி
2045 Hits
2045 Hits
உடல் ஆரோக்யம் மன ஆரோக்யம், எட்டு வகை அடிப்படைச் செல்வங்கள், வாழும் வழி சொல்லும் புத்தி ஆகியன வேண்டி ஆதிசக்தியை துர்கை லக்ஷ்மி சரஸ்வதி என்று மூன்று நிலைகளில் பிரித்துக் கொண்டு பூஜிப்பதே நவராத்ரி.
வீட்டில் உள்ளோரின் கைவினைப்பொருள்கள், கலை வடிவங்களை கொலுவில் கொண்டு வருக.
கலைப் பயிற்சி செய்யும் குழந்தைகளை தினமும் அதை வெளிப்படுத்த வைக்கவும்.
பெரியவர்கள் தம் கலை ஞானத்தை, சமையல் கலை அறிவை வெளிப்படுத்துக.
தசமி அன்று குருமார்கள், ஆசான்கள், பயிற்சியாளர்களை வணங்கச் செய்க.
ஸ்ரீராமன் வஸந்த நவராத்ரி வ்ரதம் இருந்தே இலங்கை சென்றான்.
வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த சீதையோ மீண்டும் ஒரு முறை தன் கணவனைக் கண்டு தன் மகன்களை ஒப்படைக்க நவ்ராத்ரிதியில் ஸ்ரீலலிதா த்ரிசதி பாராயணம் செய்தாள்.மண முறிவு செய்து கொண்ட தம்பதிகளை இணைக்கும் வலிமை கொண்டது ஸ்ரீலலிதா த்ரிசதி.
ராதை நவராத்ரி பூஜை செய்தே க்ருஷ்ணனைத் தன்னுள் தன் ஆன்மாவின் உண்மையான உணர்ந்தாள்.
ருக்மிணி நவராத்ரி பூஜை செய்தே க்ருஷ்ணனைக் கணவனாக அடைகிறாள்.
த்ரெளபதியும் பாண்டவரும் நவராத்ரி வ்ரதம் இருந்தே பாரதப் போரை எதிர் கொண்டனர்.
நவராத்ரி வ்ரதம் பூஜை மேற்கொண்டவர்கள் எத்தகைய சவால்களையும் ஏற்று எதிர்கொள்வதைக் காண்கிறோம்.
விளக்கில் தினமும் தேவியை த்யானித்துப் பூஜை செய்யலாம்.
ஒரே ஒரு அம்மன் உருவம் மட்டும் வைத்தும் பூஜிக்கலாம்.
புதியதொரு தேவியின் படத்தையும் வைத்து பூஜிக்கலாம்.
கூடிய மட்டும் உங்கள் பூஜை இரவில் செய்க.
2104 Hits
2104 Hits
தசராத்ரிகளில்....
கொலு என்றால் அரசன் சபையில் வீற்றிருந்து தேசத்தை நிர்வாஹிக்கும் நிலை ஆகும்.ப்ரபஞ்ச சக்தியாகிய பராசக்தி [பெண்மை] எங்கும் எதிலும் வ்யாபித்து இருக்கும் தன்மையைகொலுவகா உருவகிக்கிறோம்.
பராசக்தி கோயில், வீடு, அன்பர்தம் உள்ளம் ஆகியவற்றில் வுஆபித்து இருக்கும் தன்மையை கொலு என்கிறோம்.
தமிழகத்தில் நவராத்ரியை கொலு வடிவில் கொண்டாடுகிறோம்.
பத்தி இரவுகளும் அன்னை பராசக்தியின் பூஜைக்கு உரியனவாக இருக்கிறது.
வருடத்தில் நான்கு நவராத்ரிகள் உண்டு.புரட்டாசி அமாவாஸ்யையில் வருவது சாரதா நவராத்ரி.ஆன்மீக கல்வி கலை கேள்வி ஞானத்தை மனிதன் உயர்த்திக் கொள்ளும் சக்தியை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.சாரதா - சரஸ்வதி.
தசராத்ரி என்பதே இயற்பெயர்.முழுமையாக மூன்று இரவுகள் பூஜை செய்க.
இரவில் தான் மனிதன் தன்னைப் பற்றி மிக விழிப்புணர்வுடன் இருப்பான்.வாழ்வையே இரவாக பாவித்துக் கொள்க.அதில் துணை ஆதிசக்தி என்ற விளக்கு.
கொலுப்படிகள் - மேல் படியில் பரம்பொருளின் குறியீடான கலசம் - கீழ்ப்படியில் ஓர் உயிரி வரை அனைத்தும் பொம்மை மாதிரிகளின் காட்சி - உயிரினங்களின் பரிணாம், மனிதன் தன்னுள் ஏற்படும் பரிணாமம் ஆகியன இவற்றின் மூலம் குறிக்கப்படும்.
வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீடும் கொலுப்படிகள் எனலாம்.
புனித கலசம் - பிற மாநிலங்கள், கோயில்களில் திவ்ய புனித கலசம் ஆவாஹனம் ஆகிப் பூஜை ஆகும்.வெறும் புனித கலசம் மட்டும் வைத்து தசராத்ரிகளை மேற்கொள்ளவும் செய்தல் மிக்க பயன் தரும். பஞ்ச பூதங்களின் கூட்டுச் சேர்க்கை இயக்கமாக விளங்கும் பரபஞ்ச - ப்ரபஞ்சமான அண்ட சராசரங்களின் மூலமான பரம்பொருளின் குறீயீடே கலசம்.ப்ரபஞ்ச சக்தியை வீட்டினுள் ஈர்த்து அருளும் உயர் energy generator, towers இந்தக் கலசம்.
மரப்பாச்சி பொம்மைகள் - உயர்ந்த செம்மரக் கட்டையினால் செய்யப்பட்டது.மிகத் தொன்மையான படைப்பு.ஆண்மை பெண்மையின் குறியீடு.ஒவ்வொருவருக்கும் தம் முன்னோரின் உருவகம்,சிவசக்தி தத்துவம் உணர்த்தும் பொம்மைகள்.
ப்ரபஞ்ச சக்தியான பராசக்தி மூன்று தன்மைகளில் இயங்குகிறது.
படைத்தல் - மஹா சரஸ்வதி
காத்தல் - மஹாலக்ஷ்மி
மாற்றுதல் - துர்கை
அனைத்தும் சேர்ந்த அதிசக்தி பாத்திரத்தில் நிறைந்த பால் போல் ப்ரபஞ்ச வெளியில் மிக அடர்த்தியான இருள் போன்ற கரிய சக்தியாக நிறைந்துள்ளது.இதுவே மஹாகாளி.
ஆதிசக்தியே கண்ணில் தோன்றும் கண்ணுக்குப் புலன் ஆகா அனைத்துமாய், அனைத்து உருவங்களாய், செயல்களாய் உள்ளது என்ற அறிவியல் உண்மையை உணர்த்த அனைத்து வகை பொம்மைகளும் படிகள் இடம்பெறும்.கலசம் முதல் டெடிபேர் வரை....
அனைத்துள்ளும் ஒரே சக்தி தான் இருப்பதை உணர்க.
அனைவரையும் அன்புடன் மதித்திடுக
அனைத்து பொருள்களையும் பேணுக
இயற்கையை நேசமுடன் அதனொடு இணைக, செயலாற்றுக
உண்மையான பக்தியால் உங்களையும் குடும்பத்தையும் சுற்றம் சூழலையும் சமூஹத்தையும் இயற்கையையும் தன்னலம் அற்ற அன்பினால் சேவைகள் செய்து பேணுக.
அலைப்பேசியை ரீ சார்ஜ் செய்வது போல் பத்து நாட்களும் வாழ்க்கை atleast அடிப்படை வசதிகளுடன் இயங்கத் தேவையான பாக்யசக்தியை அதிகரிக்க அன்னையை பூஜியுங்கள்.சாதி குல வழக்கம் இவற்றை விடுக.தரமான நல்ல வழக்கத்தை எவரும் பின்பற்ற உரிமை பூமி மீது எவர்க்கும் உண்டு....நவராத்ரியைப் பின்பற்றும் வேற்று தேசத்தினர் பலர் உளர்...
கொலு வைக்க வசதி இல்லை எனில் வீட்டில் ஒரு அலமாரி அல்லது பலகையில் வினாயகர், சரஸ்வதி, லக்ஷ்மியையாவது வையுங்கள்.
பெண்கள் ஒன்று கூடும் விழா, குழந்தைகளின் திறன்கள் வெளிப்படும் விழா, கலை அழகை மனிதன் தன் கற்பனையால் வெளிப்படுத்தும் விழா, பெண்மையை மதிக்கும் விழா, மாத்ருபூஜை, குருபூஜை ஆகிய மனித உறவுகளைக் கொண்ட விழா, உலகின் மிக நீண்ட கால விழா...நீண்ட விழா....
நம் மனதில் அன்னை கொலு இருக்க, வாழ்க்கை சீராக இயங்கும்
ஏனெனில் ஆட்டுவிக்கும் மஹாசக்தி அவள்....
ஓம் சக்தி
அக்டோபர் பத்து முதல் தசராத்ரி ஆரம்பம்.
2375 Hits
2375 Hits
ஸ்ரீரங்கத்தில் நவராத்ரி...இல்லற நெறி உணர்த்தும் தாயார் திருவடி சேவை.
ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் [பெருமாள் கோயில்கள்] தலையாய திவ்ய தேசம் ஸ்ரீரங்கம்.
ஸ்ரீராமனின் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதர் கோயில் கொள்ளும் திருத்தலம்.
இங்கு நவராத்ரியில் மஹாலக்ஷ்மியான ஸ்ரீரங்கநாயகித் தாயார் தினமும் மிகச் சிறப்பான முறையில் பல்லக்கில் புறப்பாடாகி, சன்னிதியை நிதானமாக வலம் வருவார், அதன் பின் நவராத்ரி கொலு மண்டபத்தில் கொலு வீற்றருள்வார்.
திவ்ய ஆடைகள், சகல அழகிய பாரம்பரிய திவ்ய நகைகள் சூடித் தாயார் செல்வத் திருமாமகளாய்க் காட்சி தருவார்.
கோயில் யானை [ஆண்டாள்] தாயாருக்கு முன் மாலை ஏந்தி மரியாதை செய்வதைக் காணக் கூட்டம் கூடும்.
எட்டு திசைகளை யானைகள் என சிற்ப சாஸ்த்ரம் உருவகம் செய்யும்.
எட்டு திசைகளிலும் அங்கீகாரமும் புகழும் சேர வேண்டும் என்று இரு யானைகளுடன் கூடிய கஜலக்ஷ்மி வடிவம் உணர்த்துகிறது.
சோழ தேசத்தில் பல கோயில்களில் தாயார் கஜலக்ஷ்மியாகவே அலங்காரத்தில் இருப்பார்.
ஸ்ரீரங்கத்தில் ஏழாம் திருநாள் [சப்தமி] அன்று தாயாரின் இரண்டு புனிதத் திருவடிகளும் வெளிப்படும் வண்ணம் அலங்காரம் செய்து இருப்பர்.இதற்குத் ’திருவடி சேவை’ என்று பெயர்.
தம்பதிகள் கல்யாணம் மூலம் இணைந்து இல்லறம் கண்டு குடும்பத்துக்கும் சமூஹத்துக்கும் பல்வேறு அறங்கள் செய்ய சப்தபதி மந்த்ரம் மூலம் உறுதி எடுத்துக் கொள்வர்.கணவன் போன அறவழியில் மனைவியும் செல்ல வேண்டும் என்ற உயர் கோட்பாட்டைக் காட்டவே இந்த அலங்காரம் செய்யப்படும்.
ஸ்ரீராமன் சென்ற சத்ய வழியில் சீதையும் பயணித்தாள்.
மேலும் வாழ்வாதாரத்தை அளிக்கும் பாக்ய சக்தியைத் தாயாரின் திவ்யமான திருவடிகள் மட்டுமே அளிக்கும், அதற்கு நம் மனதில் தீய எண்ணங்கள் அகல வேண்டும், அவள் பாதங்கள் பக்தியால் ஊன்ற வேண்டும்....
அன்று தாயார் கிளிகள் கொண்ட கிளிமாலையும் அணிவாள்.
கிளி - சத்யத்தின் அடையாளம்.சொன்னதையே சொல்லும் கிளி.அதாவது ப்ரபஞ்சத்தில் இருப்பது ஒரே பரம்பொருளான சத்யமே என்று அனைத்து சமய உண்மைகளும் கூறுவதையே கிளியின் குறியீடு எனக் கொள்க.
ஆழ்வார்கள் சன்னிதியில் உள்ள ஆண்டாள், உள் ஆண்டாள் ஆகியோரும் திவ்யமாகக் காட்சி தருவர்.
மதுரையை அடுத்து, ஸ்ரீரங்கம் பெரியகோயிலின் கொலு மிகவும் ப்ரஸித்து பெற்றது.
விஜய தசமி அன்று ஸ்ரீரங்கன் நம்பெருமாள் காட்டு அழகிய சிங்கர் கோயிலில் எழுந்தருள் வன்னி மரத்தின் மீது தீய சக்திகளை அழிப்பதன் குறியீடாக அம்பு எய்துவார்.
ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு வருடத்தில் ஐந்து அபிஷேகம் தான் உண்டு.அதில் ஒன்று நவராத்ரியில் வரும்.
செல்வத் திருமாமகள் ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் அருளால் வாழ்க்கை வளர்க...வளமுடன்...
ReplyReply allForward |
2374 Hits
2374 Hits
மாமதுரையில் நவராத்ரி...
எல்லாக் கோயில்களிலும் அன்னை ஆதிசக்தியை உயர் நவராத்ரிகளில் விதவித சக்தி வடிவங்களில் அலங்காரம் செய்து வழிபடும் போது எதிலும் வித்யாசம் காணும் பாண்டியர்தம் உயர் மாநகர், தமிழ் கெழு கூடல் மாநகராம் மதுரையில் உலகையே ஆளும் அன்னை மீனாக்ஷியின் நவராத்ரி மிக மிக வித்யாசம் ஆனது.
உலகின் பெரிய கொலு மதுரைக் கோயில் கொலு எனலாம்.
மிக ப்ரம்மாண்டமான கொலு பொம்மைகளை இங்கே காணலாம்.
அன்னையின் நவராத்ரி பூஜை கோலாகலமாக இருக்கும்.
கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யும்.
அன்னை அங்கயற்கண்ணி முதல் நாள் உலகையை ஆளும் சக்தியின் உருவகமான ஸ்ரீராஜராஜேஸ்வரியாய் இருப்பாள்.
அதன் பின் அவள் தானும் பரம்பொருளான ஈசனும் வேறல்ல, இரண்டும் ஒரே ப்ரம்ம தத்வம் தான் என்று உணர்த்தும் வேத வாக்யத்தை உருவகம் செய்ய சிவனின் கோலத்தில் அலங்காரம் ஆவாள்.இது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று.
தானே சிவம் [அஹம் சிவம் விவம் அஹம் சிவோஹம்]ஆன அத்வைத்த நிலையை மீனாக்ஷி உணர்த்துகிறாள்.
தானே சிவமாக பக்தியும் அத்துடன் இணைந்த அறமும் தன்னலமற்ற சேவையும் செய்ய வேண்டும்.அதை உணர்த்துவதே திருவிளையாடல் புராண நிகழ்வுகள்.
ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கிய லீலைகளை அலங்காரத்தில் காட்டுவர்.
எட்டாம் நாளில் மகிஷாசுரமர்த்தினியாகி, ஒன்பதாம் நாளில் சொக்கரை பூஜிக்கும் சிவசக்தியாக அலங்காரம் ஆவாள்.
இதில் கோலாட்டம் ஆடுவது போன்ற அலங்காரம் மிக அழகியது.
இருகோல்களை மாறி மாறித் தட்டுவது பரம்பொருள் பராசக்தியாக மாறி மீண்டும் சக்தி பரம்பொருளாக மாறும் தன்மையை உணர்த்தும்.
கரிக்குருவிக்கு ம்ருத்யுஞ்ச மந்த்ரம் உபதேசம் செய்தல்
நாரைக்கு முக்தி தருதல்
தருமிக்குப் பொற்கிழி கொடுத்தல்
அன்னக்குழியும் வைகை ஆற்றையும் உண்டாக்குதல்
கல்யாணக் கோலம்
பிட்டு மண் சுமத்தல்
வளையல் விற்றல் ஆகிய லீலைகள் அலங்காரத்தில் வரும்.
பக்தியால் வாழ்வாதாரத்தை வளம் செய்க.
அதன் மூலம் குடும்பத்தையும் சமூஹத்தையும் இயற்கையையும் அறச் செயல்கள் மூலம் காத்திடுக.
அதுவே உயர் ஆன்மீகம்
தன்னலம் அற்ற சேவையால் தான் பரம்பொருளை உணர்தல் முடியும் என்று மீனாக்ஷி தன் உயர் நவராத்ரி அலங்காரத்தின் மூலம் உணர்த்துகிறாள்.
விஜய தசமி அன்று ஸ்ரீராஜ மாதங்கி [கல்வி கலை ஞானம் மூலம் உயர் முக்தி அருளும் சக்தி] வடிவில் உள்ள மதுரை மீனாக்ஷி கோயிலில் சரஸ்வதி முன் நூற்றியெட்டு வீணைகள் வாசித்து நாதாஞ்சலி செய்வது இவ்வூரின் பெருமைகளுள் ஒன்று.
ஊரே மாதங்கி மஹாயந்த்ர வடிவில் இருக்கும் மதுரையில் ஒரு முறையேனும் நவராத்ரி காண்க.
1754 Hits
1754 Hits
தசராத்ரிகளில்....
கொலு என்றால் அரசன் சபையில் வீற்றிருந்து தேசத்தை நிர்வாஹிக்கும் நிலை ஆகும்.ப்ரபஞ்ச சக்தியாகிய பராசக்தி [பெண்மை] எங்கும் எதிலும் வ்யாபித்து இருக்கும் தன்மையைகொலுவகா உருவகிக்கிறோம்.
பராசக்தி கோயில், வீடு, அன்பர்தம் உள்ளம் ஆகியவற்றில் வுஆபித்து இருக்கும் தன்மையை கொலு என்கிறோம்.
தமிழகத்தில் நவராத்ரியை கொலு வடிவில் கொண்டாடுகிறோம்.
பத்தி இரவுகளும் அன்னை பராசக்தியின் பூஜைக்கு உரியனவாக இருக்கிறது.
வருடத்தில் நான்கு நவராத்ரிகள் உண்டு.புரட்டாசி அமாவாஸ்யையில் வருவது சாரதா நவராத்ரி.ஆன்மீக கல்வி கலை கேள்வி ஞானத்தை மனிதன் உயர்த்திக் கொள்ளும் சக்தியை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.சாரதா - சரஸ்வதி.
தசராத்ரி என்பதே இயற்பெயர்.முழுமையாக மூன்று இரவுகள் பூஜை செய்க.
இரவில் தான் மனிதன் தன்னைப் பற்றி மிக விழிப்புணர்வுடன் இருப்பான்.வாழ்வையே இரவாக பாவித்துக் கொள்க.அதில் துணை ஆதிசக்தி என்ற விளக்கு.
கொலுப்படிகள் - மேல் படியில் பரம்பொருளின் குறியீடான கலசம் - கீழ்ப்படியில் ஓர் உயிரி வரை அனைத்தும் பொம்மை மாதிரிகளின் காட்சி - உயிரினங்களின் பரிணாம், மனிதன் தன்னுள் ஏற்படும் பரிணாமம் ஆகியன இவற்றின் மூலம் குறிக்கப்படும்.
வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீடும் கொலுப்படிகள் எனலாம்.
புனித கலசம் - பிற மாநிலங்கள், கோயில்களில் திவ்ய புனித கலசம் ஆவாஹனம் ஆகிப் பூஜை ஆகும்.வெறும் புனித கலசம் மட்டும் வைத்து தசராத்ரிகளை மேற்கொள்ளவும் செய்தல் மிக்க பயன் தரும். பஞ்ச பூதங்களின் கூட்டுச் சேர்க்கை இயக்கமாக விளங்கும் பரபஞ்ச - ப்ரபஞ்சமான அண்ட சராசரங்களின் மூலமான பரம்பொருளின் குறீயீடே கலசம்.ப்ரபஞ்ச சக்தியை வீட்டினுள் ஈர்த்து அருளும் உயர் energy generator, towers இந்தக் கலசம்.
மரப்பாச்சி பொம்மைகள் - உயர்ந்த செம்மரக் கட்டையினால் செய்யப்பட்டது.மிகத் தொன்மையான படைப்பு.ஆண்மை பெண்மையின் குறியீடு.ஒவ்வொருவருக்கும் தம் முன்னோரின் உருவகம்,சிவசக்தி தத்துவம் உணர்த்தும் பொம்மைகள்.
ப்ரபஞ்ச சக்தியான பராசக்தி மூன்று தன்மைகளில் இயங்குகிறது.
படைத்தல் - மஹா சரஸ்வதி
காத்தல் - மஹாலக்ஷ்மி
மாற்றுதல் - துர்கை
அனைத்தும் சேர்ந்த அதிசக்தி பாத்திரத்தில் நிறைந்த பால் போல் ப்ரபஞ்ச வெளியில் மிக அடர்த்தியான இருள் போன்ற கரிய சக்தியாக நிறைந்துள்ளது.இதுவே மஹாகாளி.
ஆதிசக்தியே கண்ணில் தோன்றும் கண்ணுக்குப் புலன் ஆகா அனைத்துமாய், அனைத்து உருவங்களாய், செயல்களாய் உள்ளது என்ற அறிவியல் உண்மையை உணர்த்த அனைத்து வகை பொம்மைகளும் படிகள் இடம்பெறும்.கலசம் முதல் டெடிபேர் வரை....
அனைத்துள்ளும் ஒரே சக்தி தான் இருப்பதை உணர்க.
அனைவரையும் அன்புடன் மதித்திடுக
அனைத்து பொருள்களையும் பேணுக
இயற்கையை நேசமுடன் அதனொடு இணைக, செயலாற்றுக
உண்மையான பக்தியால் உங்களையும் குடும்பத்தையும் சுற்றம் சூழலையும் சமூஹத்தையும் இயற்கையையும் தன்னலம் அற்ற அன்பினால் சேவைகள் செய்து பேணுக.
அலைப்பேசியை ரீ சார்ஜ் செய்வது போல் பத்து நாட்களும் வாழ்க்கை atleast அடிப்படை வசதிகளுடன் இயங்கத் தேவையான பாக்யசக்தியை அதிகரிக்க அன்னையை பூஜியுங்கள்.சாதி குல வழக்கம் இவற்றை விடுக.தரமான நல்ல வழக்கத்தை எவரும் பின்பற்ற உரிமை பூமி மீது எவர்க்கும் உண்டு....நவராத்ரியைப் பின்பற்றும் வேற்று தேசத்தினர் பலர் உளர்...
கொலு வைக்க வசதி இல்லை எனில் வீட்டில் ஒரு அலமாரி அல்லது பலகையில் வினாயகர், சரஸ்வதி, லக்ஷ்மியையாவது வையுங்கள்.
பெண்கள் ஒன்று கூடும் விழா, குழந்தைகளின் திறன்கள் வெளிப்படும் விழா, கலை அழகை மனிதன் தன் கற்பனையால் வெளிப்படுத்தும் விழா, பெண்மையை மதிக்கும் விழா, மாத்ருபூஜை, குருபூஜை ஆகிய மனித உறவுகளைக் கொண்ட விழா, உலகின் மிக நீண்ட கால விழா...நீண்ட விழா....
நம் மனதில் அன்னை கொலு இருக்க, வாழ்க்கை சீராக இயங்கும்
ஏனெனில் ஆட்டுவிக்கும் மஹாசக்தி அவள்....
ஓம் சக்தி
அக்டோபர் பத்து முதல் தசராத்ரி ஆரம்பம்.
1681 Hits
1681 Hits
இருமாநிலங்களின் ஒற்றுமைக்கு வழிசெய்யும் நவராத்ரி விழா...
கி.பி பதினோராம் நூற்றாண்டில் கம்பன் வாழ்ந்தார்.
அவர் வாழ்க்கை மிகவும் துன்பமானது.
சோழன் குலோத்துங்கனின் பகை, பொறாமை கொண்ட ஒட்டக்கூத்தரின் பகை ஒரு புறம், இதற்கிடையில் தன் மகன் அம்பிகாபதி சோழன் மகள் அமராவதி மீது காதல் கொள்ள, அவன் கொலை செய்யப்பட்டான்.
ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பெரும்பாடுபட்ட கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த கம்பன் தன் வாழ்க்கையின் துன்பங்கள் தாளாமல் சில காலம் கவிஞர்களை மதிக்கும் சேர தேசம் குறிப்பாகத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆதரவில் இன்றைய பத்மநாபபுரம் அரண்மனையில் வாழ்கிறார்.
அப்போது அவர் தான் ஆராதித்த மஹாசரஸ்வதி விக்ரஹத்தை மன்னனுக்கு அளித்து, அத்தேசத்தில் கல்வி கேள்விகள் கலைகள் வளர ஆசீர்வதித்தார்.அதன் பின் தன் ஊரான தேர் அழுந்தூர் வரும் போது நாட்டரசன்கோட்டையில் இயற்கை எய்தினார்.
விஜயதசமி அன்றி அவரது சமாதியில் இன்றும் பலர் எழுத்து அறிவித்தல் செய்வதைக் காண்கிறோம்.
இந்த சரஸ்வதி சிலை அதுமுதல் பத்மநாபபுர அரண்மனையில் மிக முக்கிய வழிபாட்டு மூர்த்தி ஆயிற்று.
குறிப்பாக சரஸ்வதியை உயர்த்தி ஆராதிக்கும் சாரதா நவராத்ரி [புரட்டாசி நவராத்ரி] மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
கி.பி 1834ல் திருவிதாங்கூர் மன்னர் குடும்பங்கள் தம் ஜாகையைத் திருவனந்தபுரத்துக்கு மாற்றிய போது, ஆண்டுக்கு ஒரு முறை நவராத்ரியில் சரஸ்வதி மிக்க மரியாதையுடன் திருவனந்தபுரம் எழுந்தருளும் மஹோத்சவம் துவங்கப்பட்டது.
அதற்காக அவ்வூரில் பத்மநாபர் கோயில் அருகில் ப்ரம்மாண்டமான நவராத்ரி மண்டபம் எழுப்பப் பட்டது.
இவ்விழாவில் மிக அருமையான விசயம் என்னவென்றால் நவராத்ரி துவங்கும் மூன்று தினங்களுக்கு முன் ஆரம்பம் ஆகும் மூன்று தெய்வங்களின் யாத்ரை தான்.இன்று இவ்விழா கேரளம் - தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுப் பணியால் இரு மாநில மக்களின் ஒற்றுமையுடன், இரு மாநிலக் காவல்துறையின் உதவியுடன் அமைதியாக ஆனால் அழகாகக் கோலாகலமாக நிகழ்கிறது.
கன்யாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரஸ்வாமி முருகன், சுசீந்திரம் சக்திபீட தேவதையான முன் உதித்த நங்கை, பத்மநாபபுரம் கம்பர் ஆராதித்த சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களும் அறுபது கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள்.
இரு மாநில மக்களின் பக்தியும், காவல்துறையின் அருமையான பாதுகாப்பும் கொண்டு இவ்விழா நடக்கிறது.அன்னை சரஸ்வதி திருவனந்தபுரத்தில் நவராத்ரி கொலு மண்டபம் சேற, மற்ற இரு தெய்வங்களும் உள்ளூரில் இரு வேறு கோயில்களில் சேவை சாதிப்பர்.
நவராத்ரி மண்டபத்தில் பத்து தின இசை விழாவில் பெண்கள் பாட அனுமதி இல்லை.நவநாகரீகப் பெண்கள் வழக்குப் போடலாமே? [இன்று எதற்கும் வழக்கு தானே?]
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இசை நாட்டியக் கலைகளில் ஈடுபடுவோர் கோயிலில் பணியாற்றும் தேவரடியார் பெண்களே என இருக்க, சமூஹத்தில் அவர்களின் நிலை சற்று மதிப்பில்லாமல் இருந்த கால கட்டத்தில் பெண்கள் இதில் பங்கேற்க அரசாங்கம் தடை செய்தது.
இன்று வரை நம் தமிழகத்து ப்ரதான ஊடகங்கள் இவ்விழாவைப் பெரிய விழாவாகக் காட்டுவதில்லை.இருமாநிலங்களின் ஆன்மீகக் கலாச்சார சங்கமம்! அழகர் வைகையில் இறங்கும் பெருவிழாபோல் இவ்விழாவிற்கும் சிறப்பு உண்டு.இதையும் ஊடகங்கள் முயற்சித்து மக்கள் முன் கொண்டு வரலாமே!
1549 Hits
1549 Hits
தந்தை தாய் பேண்..
நவராத்ரியின் ஒரு நாள் அன்று குழந்தைகள் தம் தாய் தந்தையரை வணங்கக் கற்றுக் கொடுக்கவும்.
ஆறு வயது உட்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர்கள் என்னென்ன வழியின் அவர்களுக்கும் அன்பும் அரவணைப்பும் தருகிறார்கள் என்று கூறுக.
அவர்தம் வயோதிகத்தில் அவர்களைப் பேணியே ஆக வேண்டும் என்பதையும் விளக்குக.
கொலுவுக்குப் பெற்றோர் வருகையில் சிறு வாழ்த்து அட்தை தயார் செய்து குழந்தைகள் மூலம் தருவதையும், ஆசீர்வாதம் பெறுவதையும் செய்க.
பெரிய குழந்தைகள் தாமே வாழ்த்து அட்டையைத் தயார் செய்யலாம்.அதில் தன் பேற்றோர் குறித்த நல்ல கருத்துக்களை வெளியிடலாம்.கொலுவின் ஒரு நாள் அவர்கள் அதைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம்.
2018 முதல் இதை அனைத்து UNI5 மையங்களும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2582 Hits
2582 Hits
அசுரர்கள் யார்?
வேறு யார் நம்முள் உள்ள தீய எண்ணங்கள் தான்.
தேவி மாஹாத்மியம் வர்ணிக்கும் பல்வேறு அசுரர்கள்
மது கைடபர் - நம்மை அறியாமல் நம் வீட்டில் உள்ள ப்ரச்சனைகள்
தூம்ரலோச்சனன் - எதையும் யாரையும் எப்போதும் எதற்கும் தவறாகவே பேசி, குறை காணும் தன்மை
சுக்ரீவன் - தீய செயலுக்குத் தூண்டுதலாக இருக்கும் குருட்டு தைரியம்
ரக்தபீஜன் - ஒரு ப்ரச்சனையை விரைவில் தீர்த்தாலும், அதை விடாது பிடித்துக் கொண்டு அதில் இருந்து அடுத்த அடுத்த ப்ரச்சனைகளை ஆரம்பிக்கும் அறியாமை.
பாணாசுரன் - எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் வெறி
சும்பன் நிசும்பர்கள் - நம்மால் உருவாக்கிய ப்ரச்சனைக்கும் நமக்கும் இடையே அல்லாடும் மனம்
மகிஷாசுரன் - எதற்கும் மாறாத வீண் பிடிவாதம் அகம்பாவம் திமிர்
மூகாசுரன் - தரங்கெட்ட தீய negative பேச்சைப் பேசும் நாவின் சக்தி
சண்ட முண்டர்கள் - எப்போதும் தீய செயல்களை வெளிப்படுத்தத் திட்டமிடும் தீய அறிவு
அனைவரும் சமூஹத்தில் ஒன்றானால் தான் தீமையை வெல்ல முடியும் என்பதையே அனைத்து தேவர்களும் இணைந்து தம் சக்திகளை ஒருங்கிணைத்து உருவாக்கும் துர்கை உணர்த்துகிறாள்.
அன்னை மஹாசக்தி - ஆன்மீக உயர் சக்தி.அதன் துணை கொண்டே மேற்கண்ட அசுரர்களை அழிக்க முடியும்.
1904 Hits
1904 Hits
கலைமாமகள்
கலை - அழகு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் அழகு கொண்ட கலை வடிவம், கல்வி, கேள்வி...இதன் மூலம் மனிதனுள் உண்டாகும் அடிப்படை அறிவு, அது வளர்கையில் விழிப்புணர்வு.இதன் சக்தியே கலைமாமகள்.
வெறும் பொருள் ஈட்டும் ஏட்டுக் கல்வியை ஞானம் என்று எக்காலத்தும் பாரதம் ஏற்றதில்லை.அது வெறும் புத்தக அறிவே.ஆனால் அதுவும் தேவை.ஆனால் ஏட்டுக் கல்வி cosmic pattern education ஆக ஐம்பூதங்களால் ஆன இயற்கையுடன் மனிதன் தன்னைத் தொடர்பு படுத்தும் selftual கல்வியாக மாறுதல் ஆதிசக்தியின் அம்சமே.
மாணாக்கனின் மனம் தூய்மையான கவனச் சிதறல் இல்லாமல் இருந்தாலே ஒழிய கல்வி வேர் ஊன்றாது.அதுவே வெண்தாமரை மலர் மீது வெண்பட்டாடை உடுத்திய கலைமகளின் அமர்ந்த கோலம் உணர்த்தும் உருவகத் தத்துவம்.
ஏட்டு அறிவும், அதை மீண்டும் மீண்டும் தன்னுடன் தொடர்பு படுத்திக் காணும் செயல்பாட்டும் மிக முக்கியம் என்பதையே ஓலைச்சுவடியோ புத்தகமோ உணர்த்தும்.எத்தகைய அறிவும் காலத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையின் பதிவாக்கப்படுதல் வேண்டும் என்பதையும் ஓலைச்சுவடி உணர்த்தும்.
51 ஒலிகளை 51 மணிகள் கொண்ட அட்சர மாலை உணர்த்தும்.
பெற்ற அறிவை மீண்டும் மீண்டும் சிந்தித்து விரிவாக்குவதையும் மணிமாலை உணர்த்தும்.
கலைகளின் உயர் வடிவங்களை வீணை உணர்த்தும்.வீணை மிக நுட்பமான பயிற்சி செய்ய வேண்டிய இசைக்கருவி.ஞானானுபவம் என்பது அத்தகைய பயிற்சியும் சாதனையும் இன்றி வராது என்பதையே வீணை உணர்த்தும்.
அன்னையில் கையில் உள்ள அம்ருத கலசம் - ஞானத்தால் வரும் ஆனந்தம்
கிளி - உண்மையை அறியும் தன்மை
அன்னம் - பாலை மட்டும் பருகி அதில் கலந்த தண்ணீரை விட்டுவிடும் பறவை.அதுபோல் நன்மையை மட்டும் ஏற்றுத் தீமையை மனம் விடுதல் வேண்டும்.
மயில் - பரந்து பட்ட அண்ட சராசரம் ஐம்பூதங்களின் கூட்டுச் சேர்க்கையினால் ஆன அழகை உணர்த்தும்.
புரட்டாசி நவராத்ரி - சாரதா நவராத்ரி.அது கலைமாமகளின் சக்தியைப் பெறவே அதிகம் உதவுகிறது.நவராத்ரியின் ஏழு எட்டு ஒன்பதாம் தினங்களில் அன்னையை வழிபடுக.அதில் நவமியான மஹாநவமி மிக மிக உயர்ந்தது.ஆன்மீக ஞானம் கொண்டு உயர் முக்தியை அடையும் சக்தியை அன்னை அருள வேண்டுகிறோம்.
1769 Hits
1769 Hits
மலைமாமகள்
ஆதிசக்தியின் மிகத் தொன்மையான உருவகம்.கொற்றவை, துர்கை, பார்வதி, அம்பிகை, அம்மன் எனப் பல்வேறு உருவங்களின் தத்துவங்களில் உருவகம் ஆகும் சக்தி மலைமகள்.
மலை - கம்பீரமான, பூமியின்கண் மிக உயரமான இடம்.அது ஞானத்தின் குறியீடு ஆகும்.
மனதின்கண் எப்போதும் மிக மிக உயர்ந்த எண்னமும் அதன் வெளிப்பாடாய்ப் பேச்சும் செயலும் இருத்தல் வேண்டும் என்றே ஆதிசக்தி வேண்டப்படுகிறாள்.
தீய எண்ணங்களை அசுரர் என்று உருவகித்தால், அவர்களை வெல்லும் ஞானமே கொற்றவையாகிய மலைமகள்.
செல்வமும் அறிவும் இணைந்து வாழ்வில் உயர் செயலுக்காக வழிவகுக்கும் செயல்பாடே மலைமகள்.
அதனால் தான் திருமகளும் கலைமகளும் மலைமகளின் தோழியர் என்று உருவகம் செய்யப்படுவர்.
செயல்பாடே மேன்மையானது என்பதைக் காட்டவே மலைமகளுக்கே பாரினில் மிக அதிகமான கோயில்கள் வடிவங்கள் உள.
நவராத்தியின் முதல் மூன்று தினங்களில் மலைமாமகளை வழிபடுக.
1875 Hits
1875 Hits
திருமாமகள்
உயர்ந்த மனம் தாமரையுடன் ஒப்பிடப்படும்.தாமரை சேற்றில் வளரினும் தூய்மை கொண்டதாக வாழுவது போல் மனம் எத்தகைய சூழலிலும் தூய்மை மாறாமல் இருக்க வேண்டும்.அத்தகைய உயர் மனமே செம்மனம்.அதுவே செந்தாமரையின் குறியீடு.அதில் செல்வத்தின் அதிசக்தியாகிய பாக்ய சக்தி ஊறும்.அதுவே திருமகள் - மஹாலக்ஷ்மி.
அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் அருளும் ஆதிசக்தியே திருமாமகள்.
வாழ்வாதாரத்தின் மிக முக்கியமான எட்டு வளங்களை அஷ்ட லக்ஷ்மி வடிவில் அவள் அருள்கிறாள்.
ஆயுள் - ஆரோக்யம் - ஆதிலக்ஷ்மி
உணவு, நீர் - தான்யலக்ஷ்மி
அறிவு - வித்யா லக்ஷ்மி
அடிப்படைச் செல்வம் - தனலக்ஷ்மி
உறவுகள் - சந்தான லக்ஷ்மி
வலிமை - வீர\தைர்ய லக்ஷ்மி
வெற்றி\புகழ் - விஜயலக்ஷ்மி
அங்கீகாரம் - கஜலக்ஷ்மி
நவராத்ரியின் 4,5,6ஆம் நாட்களில் அன்னை திருமாமகளைப் பூஜித்திடுக.
ஸ்ரீரங்கம், திருச்சானூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருத்தங்கல், அனைத்து பெருமாள் கோயில்கள், கொல்ஹாபூர், சோற்றாணிக்கரை ஆகிய பல ஸ்தலங்களில் அன்னை திருமாமகள் சக்தியாய் உள்ளாள்.
மனமாகிய செம்மலரின்கண் மலர்மாமகள் அமர்க, அருள்க.
1799 Hits
1799 Hits
2018 நவராத்ரி
October 8th - Mahaalaya ammavaasyai
Navarathry starts from 10th
Days 10, 11, 12 - பராசக்தியை உடல் மற்றும் மன வலிமை தரும் ஆதிசக்தியான துர்கை [பார்வதி] வடிவாய் வணங்குக. சிவப்பு வண்ண மலர்கள், வேப்பிலை, குங்குமம் கொண்டு பூஜித்திடுக.
Days 13, 14, 15 - பராசக்தியை வாழ்வாதாரத்தை அருளும் அஷ்ட சக்திகளான மஹாலக்ஷ்மியாய் வணங்குக.மஞ்சள் வண்ண மலர்கள், செந்தாமரை, வில்வம், மஞ்சள் கொண்டு பூஜித்திடுக.
Days 16, 17, 18 - பராசக்தியை கல்வி, கலைகள், அறிவு, அனுபவம், ஆன்மீக உயர் ஞானம் அருளும் மஹாசரஸ்வதியாய் பூஜித்திடுக.வெண்மை வண்ண மலர்கள், வெண்தாமரை, சந்தனம் கொண்டு பூஜித்திடுக.
October 17 - துர்கா அஷ்டமி
October 18 - மஹாநவமி சரஸ்வதி பூஜை
October 15 night 9.6 PM - மூல நட்சத்திரம் வரும் வேளையில் கல்வி, தொழில் ஆகியவற்றிற்கு உதவும் கருவிகளை recharge செய்ய அன்னை முன் வைத்திடுக.தசமி அன்று எடுத்து அவற்றின் மூலம் புதிய முயற்சிகள் மேற்கொள்க.
Day 19 - விஜய தசமி - அன்னையை மஹாகாளி வடிவில் வணங்குக.அனைத்து மலர்கள் கொண்டும் குங்குமம் கொண்டும் பூஜிக்கலாம். இரவில் ஆரத்தி எடுத்து மறுநாள் காலையில் மறுபூஜை செய்து தச ராத்ரிகளை முடித்திடுக.
பால், பழம், உலர் பழங்கள், பருப்பு நெய் கலந்த சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, சுண்டல் வகைகள், பால் பாயஸம், பாசிப்பருப்புப் பயாஸம், எள் சாதம், வெங்காயம் இடாத காய்கறி சாம்பார் சாதம், வெண் மற்றும் சர்க்கரைப் பொங்கல், இனிப்பு வகைகள் ஆகியன கொண்டு நிவேதனம் செய்க.
தமிழ் அர்ச்சனை நூல்கள் ஏராளம் உள.அவற்றின் மூலம் தேவியை அர்ச்சிக்கவும்.
வீடும் மனமும் மங்கலகராமய் இருக்கட்டும்.
கொலு வைக்க முடியாவிடின் பூஜை அறையில் கலசம் வைத்தேனும் அன்னையைப் பூஜித்திடுக.
ஓம் சக்தி.
1698 Hits
1698 Hits
தனுஷ்கோடியில் ஒரு திவ்ய தரிசனம்
1964 டிசம்பரில் தனுஷ்கோடி புயலால் அழிந்தது.அதன் பின் இவ்வூரை ”வாழத் தகுதி அற்ற நகரம்” என்று அரசு கூறியது.
ஆனால் பல மக்கள் தாம் பிறந்த பூமியை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அங்கேயே வாழ்ந்தனர்...அவர்தம் சந்ததியினர் இன்றும் மண் மீது கொண்ட பற்றினால் வாழ்கின்றனர்...எவ்வித அடிப்படை வசதியும் இன்றி.
இவர்களுள் ஒருவர் ஸ்ரீமதி.காளியம்மாள்.இவர் தம் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகளைத் தன் ஆன்மீக பலம் கொண்டு சாதனைகள் ஆக்கிக் கொண்டு, இப்போது தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை ஈர்க்கும் சிவன் கோயிலை உருவாக்கியவர்.
பல காலம் உடல் ஆரோக்யம் இல்லாமல் இருந்த காளியம்மாள் இறை அருளால் குணமானவர்.அதன்பின் தன் வாழ்க்கை என்பது தன் பிறந்த மண்ணின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறவே என்று முடிவெடுத்து இன்றும் அதைச் செய்கிறார்.
தேவி ராஜராஜேஸ்வரி, சீதா லக்ஷ்மண அனுமன் உடன்சேர் ஸ்ரீராமன், காசி அகோரி குரு மனமுவந்து ஆசீர்வதித்து அளித்த கோடீஸ்வரர், கணபதி, முருகன் ஆகிய திவ்ய மூர்த்திகளுடன் இவரது தனுஷ்கோடி ஆலயம் ஓலைக் குடிலாய் இயற்கையின் சூழலில் இரு கடல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் இவரது மகனால் கடலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீராமசேது மிதவைக் கல்லும் வழிபாட்டில் உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை அனுமனின் ப்ரதிபலிப்பாக வானரம் ஒன்று வந்து தங்குவது, மயில் ஒன்று வந்து இரை தின்பதும் வியக்கத் தக்க காட்சிகள்.
பிறந்த ஊரின் மீதான அன்பினால் காளியம்மாள் உருவாக்கிய இக்கோயில் இன்று தனுஷ்கோடியின் ஒரு திவ்ய ஸ்தலமாக உள்லது.காரணம் அக்காலத்தே இருந்த கோயில்கள் புயலால் அழிந்தன.
உலக மக்களின் நலன் வேண்டியும் சகல உயிர்களில் நலன் வேண்டியும் காளியம்மாள் அன்றாடம் பூஜை செய்து வருவதைக் காண்கிறோம்.
புயலால் அன்று சீரழிந்து போன தனுஷ்கோடி சிவன் கோயில் மூலம் இன்றும் தன் புனிதத் தன்மையை வெளிப்படுத்தி அருள்கிறது.
விரைவில் இக்கோயில் அன்பர்களின் முயற்சியால் மேன்மையுறும்.
ஓம் நம சிவாய!
ஸ்ரீராம ஜெயம்!
1976 Hits
1976 Hits
திருப்புல்லாணி - சேதுக்கரை
தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மைமிக்க ஊர் இது.
நூற்றியெட்டு வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று.
ராமனின் வரலாற்றுடன் மிக்க தொடர்பு கொண்டது.
மிகப் பெரிய பாண்டியர் காலக் கோயில்.
மிகப் பெரிய குளம்.
திருப் புல் அணை - கடல் தர்பைப் புல்லால் ஆன அணை [படுக்கை]
முக்கியமான தெய்வமாக ஜகன்நாத பெருமாள், பத்மாசனி தாயார் உள்ளனர்.
தென் தேசத்தின் பூரி ஸ்தலம் என்ற பெருமை உடையது இவ்வூர்.
குழந்தை வரம் வேண்டி தசரதனும் அவன் மனைவியரும் புத்ர காமேஷ்டி யாகம் செய்த பல ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.இன்றும் குழந்தை இல்லாத தம்பதிகள் அதைச் செய்து பாயசத்தைப் ப்ரசாதமாக உண்பதைக் காண்கிறோம்.
குழந்தைப் பேற்றை நல்கும் பெரிய சந்தான கோபாலன் சிலை உள்ளது.
மிகப் பெரிய அளவில் பட்டாபிஷேக ராமன் இருக்கிறார்.
மற்றொரு மிகத் தொன்மையான சன்னிதி தர்ப சயன ராமன்.
கிடந்த கோலத்தில் மிகப் பெரிய ராமன் இருக்கிறார்.
திருமங்கையாழ்வார் தமிழ் பாடி போற்றிய ஸ்தலம்.
இக்கோயிலின் உத்சவ மூர்த்திகள் மிக மிகத் தொன்மைமிக்க பாண்டியர் காலச் செப்புவார்ப்புகள்.
கோயிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலும் அதன் கரையில் ஹனுமான் சன்னிதியும் உண்டு.இதுவே சேதுக்கரை.
கோடைக்காலத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுள் மூழ்கிய ராமன் பாலம் தெரியும்.முன்பு படகில் மக்கள் செல்ல அனுமதித்தனர்.இப்போது இல்லை.
இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்க வேண்டும்.அதற்காகக் கடலிடமும் பஞ்சபூதங்களிடமும் ஸ்ரீராமன் அனுமதி வேண்டி கிழக்குப் பக்கம் பார்த்து மூன்று நாட்கள் த்யானத்திலும் யோகத்திலும் படுத்துக் கிடந்தார்.
கடலில் விளையும் ஒரு வித புல்லை அணையாகக் கொண்டு அதன் மீதே அவர் கிடந்தார்.
அதனால் தர்ப்ப சயனம் - திருப்புல்லாணி ஆயிற்று.
இப்பகுதியில் தான் சம்பாதிக் கழுகு பனை மர உச்சியில் இருந்து இலங்கையில் அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டு வானர வீரர்களுக்கு அறிவித்தது.
சேது என்பதே பக்தனுக்கும் இறைவனுக்கும் உள்ள உண்மையான உறவுப் பாலம்.அது ஞானகுருவால் அமையும்.அக்குருவே ஹனுமன்.சதா ஹனுமன் அந்த ஆன்மீக பந்தமான ஞானப்பாலம் சிதையாமல் நம்முள் காக்க வேண்டும்.இதையே சேதுக்கரை ஹனுமான் உணர்த்துகிறார்.
சித்திரைப் பூர்ணிமையில் ஜகன்நாதரும் ஸ்ரீராமனும் இங்கு வந்து கடல் நோக்கி இருப்பர், அபிஷேகம் அலங்காரம் காண்பர்.
முழுநிலவின் ஒளியில் இலங்கையில் சிறை இருக்கும் தன் மனைவியை எண்ணி எண்ணி ராமன் வருந்திப் புலம்பிய ஒலியை இன்றும் அலைகள் மூலம் கேட்கலாம்.
கடந்த பத்து ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரித்துள்ளது.
முன்னோர் கடன் செய்யும் ஒரு முக்கிய ஸ்தலமுமாக சேதுக்கரை உள்ளது.
1695 Hits
1695 Hits
தனுஷ்கோடி
பாரத தேசத்தின் தென் திசையில் தமிழகம் அமைகிறது
அது கிழக்குக் கடற்கரையுடன் அமைகிற மாநிலம்.
ராமநாதபுர மாவட்டத்தில் வங்கக்கடலில் அமைகிற சிறிய தீவு தான் ராமேஸ்வரம்.
அதன் பெயர் பாம்பன் தீவு.
பாம்பு அணிந்தவன் பாம்பன்
பாம்பைப் பாயாகக் கொண்டவன் பாம்பன்
சிவனின் திருமாலின் பெயர் கொண்ட தீவு
ராமேஸ்வரம் என்பது கோயிலின் பெயர்.
ராஜேராஜேஸ்வரம் - சோழன் ராஜராஜன் எழுப்பிய கோயிலின் பெயர்.
அது போல் ஸ்ரீராமன் எழுப்பிய கோயில் ராமேஸ்வரம்
ராமனின் ஈஸ்வரன் உறையும் கோயில் என்றும் பொருள் கொள்க.
ராமேஸ்வரம் தீவின் ஒரு பகுதி தான் தனுஷ்கோடி.
தனுஷ்கோடிக்கும் இலங்கை தேசத்தின் தலைமன்னார்க்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 18 KM தான்.
மன்னார் வளைகுடாவை நோக்கி அமைகிறது தனுஷ்கோடி.
கி.பி 1946,47ல் ஏற்பட்ட சில கடல் மாற்றங்களால் தனுஷ்கோடியின் ஐந்து அடி அளவு நீருள் மூழ்கியது.ஏழு கிலோ மீட்டர் தூரமும் அரைக் கிலோ மீட்டர் அகலமும் கொண்டதே தனுஷ்கோடி கடலுள் மூழ்கியது.
ஸ்ரீராமன் ஏற்படுத்திய சேது - பாலம் தனுஷ்கோடி வழியே இலங்கை நோக்கிச் செல்வதை அமெரிக்க நாசா செயற்கைக்கோள் மூலம் காட்டுகிறது.
ஸ்ரீராமன் எழுப்பிய சேதுவை அவன் பல காரணங்களுக்காகத் தன் வில்லால் எல்லைக் கோடு இட்டு வரையறை செய்தான்.மேலும் வானில் இருந்து பார்க்கும் போது வில்லின் முனை போள் இருக்கும் தீவுக்கு தனுஷ்கோடி - வில்லின் முனை என்றும் பெயர் கூறலாம்.
ஸ்ரீராமன், லக்ஷ்மணன், சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான் உடன் கூடிய வானர சேனை இலங்கைக்கு தனுஷ்கோடி மூலம் செல்வதைக் கண்களில் கொண்டு வருக.
நலன் என்ற பொறியாளன் மூலம் கடலில் உள்ள மணல் திட்டுக்கள் குறுகிய பால அமைப்புகள் கொண்டு இணைக்கப்பட்டன என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. கி.மு 7000.இக்கட்டத்தில் தான் கடல்கோளால் தென்மதுரை அழிந்து இலங்கை பிரிகிறது என்பதைக் குமரிக்கண்டம் கட்டுரை மூலம் அறிக.
கி.பி 1964முன் இத்தீவினில் இன்றுள்ள உலக ப்ரசித்தி பெற்ற ராமநாத ஸ்வாமி சிவன் கோயில் மட்டுமே முக்கியமான இடம், சுமார் பல ஆயிரம் மக்கள் சுற்றுலாவும் மீன்பிடித்தொழிலும் கப்பல் மூலம் வணிகமும் செய்து வாழ்ந்த ஊர் தனுஷ்கோடி.
இதை ”மின் இந்திய சிங்கப்பூர்” என்பர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக முக்கிய போக்குவரத்து நிகழ்ந்த இடம் தனுஷ்கோடி.
சமய ரீதியில் காலம் காலமாக வடதேசத்தினரும் தென் தேசத்தினரும் காசிக்கும் குமரிக்கும் ராமேஸ்வரத்துக்கும் செல்வது, தீர்த்தம் ஆடிக் கோயில் வழிபாடு, முன்னோர் வழிபாடு செய்வது உயர் ஒற்றுமையையும் பண்பாட்டையும் காட்டும்.
கோடி தீர்த்தம் என்ற தனுஷ்கோடியின் கடல்கள் தீர்த்தம் மிகப் புண்யமாக மக்களால் மதிக்கப்படக் காரணம் ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசம் பட்டதே ஆகும்.
வினாயகர் கோயில், ஸ்ரீராமன் கோயில் [தனுஷ்கோடி ராமன் - இன்று சென்னை பம்மல் ஊரில் இருக்கிறார்] கிறிஸ்துவ தேவாலயம் ஆகியன இருந்துள்ளன.அவற்றின் எச்சங்கள் இன்றும் அழிந்த தனுஷ்கோடியில் காண உண்டு.
சரி இந்த தனுஷ்கோடியில் இன்று யார் வாழ்கிறார்கள்?
சில மீனவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
ஏன்?
புயலால் அழிந்த ஊரை அரசாங்கம் ”பிசாசு நகரம்” என்றே கூறி, ”மக்கள் வாழ்வதற்கு ஏற்ற ஊர் இல்லை” என்று ப்ரகடணம் செய்து விட்டது.
எவ்வித மிக மிக அடிப்படை வாழ்க்கை வசதிகளும் இன்று அங்கு இல்லை.
சுற்றுலாப் பயணிகள் வண்டிகள் மூலம் சென்று பார்த்து வரும் இடமாக உள்ளது.
தற்போது தரமான சாலை போடப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி உள்ளது.
சரி அப்படி என்ன தான் புயல் செய்தது?
இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைச் சீற்றங்களில் ஒன்று 1964, dec 22 தனுஷ்கோடி புயல்.
இது ஒரு கடல்கோளே.ஆழிப்பேரலைகளுடன் சேர்ந்த புயல்.இதன் மூலம் தீவின் பல பாகங்கள் நீருள் மூழ்கின.சுமார் இரண்டாயிரம் மக்கள் கடலுள் தொலைந்து இறந்தனர்.
கோரமான ஆழிப்பேரலைகளுடன் கூடிய அப்புயலைப் பற்றி மிக விவரமாக நாட்டுப்புறப் பாடல்கள் ஒப்பாரியாகவே வர்ணிப்பதைக் காண்கிறோம்.[பரவை முனியம்மா பாடியுள்ள பாடல் யூ ட்யூபில் உள்ளது]
17 December 1964, அன்று தெற்கு அந்தமான் கடலில் ஒரு காற்ரழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது.19 December அன்று அது புயலாக மாறியது.21 December 1964 அன்று அது மேற்கு நோக்கி நகர்ந்தது.400 -550 km \hour வேகத்தில் புயல் காற்று பயணித்தது.On 22 December அன்று இலங்கையில் வவுணியாவைப் புயல் கடந்து அன்று இரவில் ராமேஸ்வரத் தீவில் தனுஷ்கோடி நோக்கி அப்புயல் வருகிறது. இருபத்தி மூன்று அடி உயரத்தில் ஆழிப்பேரலைகள் எழுந்தன.
தனுஷ்கோடியை இரவில் தாக்கிய புயலும் அலைகளும் துறைமுகத்தை அழித்தன, ஊரை விழுங்கின, இரண்டாயிரம் மக்களை விழுங்கின, பாம்பன் - தனுஷ்கோடி பயணிகல் ரயில்வண்டியை விழுங்கின, பள்ளி மாணக்கருடன் கூடிய 115 பேரையும் கடல் விழுங்கியது.
December 2004, சுனாமி தாக்கும் முன் ஐந்நூறு மீட்டர் கடல் உள்வாங்கும் போது விழுங்கப்பட்ட ஊரின் சில எச்சங்கள் காணப்பட்டன.
அன்று வானொலியும் பத்திரிக்கையும் மட்டும் தான் ஊடக சக்திகள்.
இன்று இணையதளம் மூலம் பல காணொளிக் காட்சிகள் மூலம் மீண்டும் தனுஷ்கோடி மீட்டுருவாக்கம் செய்யப்படுவதைக் காண்கிறோம்.பல்வேறு எஞ்சிய வயோதிகர்தம் நேர்காணல்கள் மூலம் பல அரிய தகவல்கள் வெளியாயின.
தனுஷ்கோடி மீண்டும் உயர் வணிகம், சுற்றுலா நகர் ஆகவே மக்கள் அவா கொள்கிறார்கள்.
முகுந்தராயர் சத்திரம் என்ற இடம் முதல் அரிச்சல் முனை [9.5 KM] என்ற தனுஷ்கோடியின் கடைசி முனைவரை தேசிய நெடுஞ்சாலை 2016 ல் போடப்பட்டது.அதன் எல்லையில் அசோகச் சக்கரம் கொண்ட தூண் உள்ளது.இன்று அது வரை நம் வாகனத்திலேயே செல்லமுடியும்.ஆனால் அதுவரை ஜீப் வண்டிகள் மூலம் அழகிய சதுப்பு நில வழிப்பயணம் மேற்கொண்டே நாம் சென்றோம்.
சென்னை எக்மோர் முதல் தனுஷ்கோடி வரையிலான தொடர்வண்டி ஓடியது.அதே போல் இந்தியப் பெருநிலத்தில் உள்ள மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை ஒரு ரயில் ஓடியது.அதன் ரயில் நிலையங்களின் எச்சம் இன்றும் உள்ளது.சென்னை ரயில் போட் மெயில் எக்ஸ்ப்ரஸ் ஆகும்.அது கடலில் கப்பல் அருகில் சென்று நிற்பது போல் தண்டவாள அமைப்பு இருந்தது.அதில் இருந்து இறங்கி இலங்கி செல்வோர் கப்பலில் ஏறுவார்களாம். அடித்த புயலில் பயணிகளுடன் மண்டபம் - பாம்ப வழி - தனுஷ்கோடி ரயில் தான் கடலுள் மூழ்கியது.
சரி, பல்வேறு வயோதிகர்கள் [தப்பித்தவர்கள் ] என்ன கூறுகிறார்கள்?
ராமேஸ்வரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி பகுதி பாம்பன் தீவில் அமைகிறது.
வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் முனையே அரிச்சல் முனை. [அரி - அதாவது ஹரியான ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும் சேதுவின் முனை]
ஐம்பது ஆண்டுகட்கு முன்பு பல வணிக நிறுவனங்கள் இங்கே இருந்து கப்பல் மூலம் வியாபரம் செய்து பொருள் ஈட்டிய ஊர் தனுஷ்கோடி.
பல நூறு ஆண்டுகளாய் வணிகர் ஐந்நூற்றி இருவர், முன்னூற்றி இருவர், நூற்றி இருவர் போன்ற வணிகக் குழுக்கம் பங்குதாரராக இருந்து வியாபாரம் செய்தனர்.இதைப் பற்றிய கல்வெட்டும் தற்போது கிடைத்துள்ளது.
பர்மாவில் வெட்டப்பட்டு விற்கப்படும் தேக்கு, சந்தனம் ஆகிய மரங்களைக் கடலில் வீச அவை காற்றில் திசையில் தனுஷ்கோடியைச் சேரும் என்பது இருந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் தனுஷ்கோடியில் இருந்து இலக்கைக்கு வணிகம், மக்கள் பயணம் ஆகியவற்றிற்காகத் துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர் தம் தென் இந்திய ரயில்வே அதிகாரி ஹென்றி மட்ராஸ் - தனுஷ்கோடி போட் மெயில் ரயில் வண்டியை அறிமுகம் செய்தார்.தனுஷ்கோடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.
மூன்று நீராவிக் கப்பல்கள் கட்டப்பட்டன.
இத்திட்டத்தின் அடிப்படையில் பாம்பன் ரயில் பாலம் 1914 பிப்ரவரி இருபத்தி நாலாம் தேதியில் உருவானது.
தீவினுள் ஒரு பயணிகள் ரயிலும் இயங்கியது.
படகுத்துறை, ரயில் நிலையம், சுங்க வரி வசூலிக்கும் அலுவலகம், பள்ளி, தேவாலயம், கோயில்கள், தபால் தந்தி நிலையம் ஆகியன இருந்தன.
இண்டோ சிலோன் எக்ஸ்ப்ரஸ் என்றே மக்கள் அதிகம் கூறுவர்.பலர் கொழும்புவுக்கே பயணச்சீட்டும் எடுப்பர்.ரயில் தண்டவாளத்தின் மற்றொரு புறம் ஆழமான படகுத்துறையில் கப்பல் இருக்க, இலங்கை செல்வோர் அதில் ஏறித் தலைமன்னார் போவர், அங்கிருந்து மீண்டும் ரயில் மூலம் கொழும்பு செல்வர்.இதைப் போல் உலகில் எங்கும் இருந்ததே இல்லை.ஆங்கிலேயனின் கீழ் இலங்கை இந்தியாவுடன் இணைத்தே பார்க்கப் பட்டது.
ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.காரணம் இரவுகளில் காற்றில் மணல்கள் பாதையை மூடும் , அதைச் செப்பனிட்டுக் கொண்டே செல்லும் நிலை இருந்தது.
கால்நடைகள் தமிழகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் ஏற்றுமதி ஆயின.
எஸ் ஐ ஆர் - சவுத் இண்டியன் ரயில்வே என்று முத்திரை இடப்பட்ட மூன்று கப்பல்கள் இயங்கின.
கிரிக்கெட் குழுக்கள் கப்பல் மூலம் சென்று இலங்கையில் விளையாடின.
காலை ஏழு மணிக்குக் கிளம்பி இரண்டு மணி நேரப்பயணத்தில் தலைமன்னாரை அடையலாம்.கப்பலில் சிற்றுண்டி தருவர்.
டிசம்பரில் புயல் இரவில் தனுஷ்கோடியைத் தாக்கியதை யாரும் அனுமானிக்கவே இல்லை.
ஆறு அடி உயரத்துக்குக் கடல் நீர் தீவெங்கும் பரவிட, காற்றும் மழையும் பேரலைகளும் வீச, உள்ளூர்ப் பயணிகள் ரயில் கடலுள் போனது.ஒரே ஒரு பெட்டி மட்டும் கரையில் சரிந்து இருக்க, மீதி ரயில் கடலுள் மூழ்கியது.
வானொலியும் பத்திரிக்கையும் மட்டுமே இருந்த அக்காலத்தில் இரு நாட்கள் கழித்தே புயலில் கோரமானச் சீரழிவு தேசத்துக்குத் தெரிய வந்ததாம்.
பாம்பன் பாலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாம்.
புயலில் தப்பித்து எஞ்சியோர் மீண்டு மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அன்று முதல் ”வாழத் தகுதி அற்ற ஊர்” என அரசு அறிவித்தது.
புயலுக்குப் பின் போக்குவரத்து அற்றுப் போன கதியில், சிலர் புனித நீராடக் குதிரைகள் கழுதைகள் பயன்படுத்த அதன் பின் ஜீப்புகள் வந்தன.
ஊற்றுத் தண்ணீரே குடிநீர் எனக் கொண்டு இன்றும் சில நூறு மீனவர்கள் மட்டும் அவ்வூரின் மீதுள்ள பற்றினாலும் மீன் பிடித் தொழிலினாலும் வாழ்கிறார்கள். புயலில் எஞ்சியோரும் வாழ்கிறார்கள்.
அப்துல் கலாம் அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் தற்போது சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் வெளிச்ச வசதி வந்துள்ளது.
மீன் பிடித்தல், சங்கு சிப்பி மணி மாலைகள் விற்றல், மீன் உணவு விற்றல், சிறு தீனிக்கடை ஆகியன மூலம் வாழ்கிறார்கள் சுமார் முன்னூறு குடும்பத்தினர்.
அவர்கள் இயற்கையுடன் வாழ்வதையே அதிகம் விரும்புகிறார்கள்.நவீன வாழ்க்கை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
புதிய தேசிய நெடுஞ்சாலை மூலம் எளிதான போக்குவரத்து வசதி வந்து பல சுற்றுலாப் பயணியர் தனுஷ்கோடி வருகிறார்கள், மேலும் மீன்களை ராமேஸ்வரம் கொண்டு செல்வதும் எளிமையாயிற்று என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
இந்த மீட்டுருவாக்கம் நல்ல தரமான அமைதியான வாழ்வை நெய்தல் நில மக்களுக்கு அளிக்கட்டும்.
1984 Hits
1984 Hits
ராமேஸ்வரம்
பாரதத்தின் தென் பகுதியில் தமிழகம் அமைகிறது.
தமிழகத்தில் கிழக்குத் திசையில் வங்கக் கடலை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் அமைகிறது.
அதில் வங்கக் கடலில் அமைந்துள்ள அழகிய தனித்தீவு தான் பாம்பன்.
இலங்கைக்கு மிக அருகில் அமைகிற தீவு.
அத்தீவில் உள்ள உலகப் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கோயில் அமைகிறது.
ராமன் அமைத்த ஈஸ்வரன் ராமேஸ்வரன்.
கோயிலின் பெயர் ராமேஸ்வரம்.
[கபாலீச்சரம், கணபதீச்சரம், பல்லவனீச்சரம், ராஜராஜேச்சரம் போல்]
பாரதத்தின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்று.
உலகின் மிக நீளமான கோயில் ப்ரகாரம் [சுற்று] கொண்ட கோயில்.
மனதையும் உடலையும் தூய்மை செய்யும் பல தீர்த்தங்கள் கொண்ட கோயில்.
சீதை செய்த மணல் லிங்கம் உள்ள கோயில்.அதுவே ராமநாத ஸ்வாமி, ஜோதிர் லிங்கம்.
அன்னை பார்வதி ”மலைவளர்க் காதலி” - ”பர்வத வர்த்தினி” என்ற பெயரின் பெரும் கோயில் கொண்ட இடம்.
காசி கங்கை நீரைக் கொண்டு வந்து மக்கள் அபிஷேகம் செய்யும் கோயில்.
பாரதத்தின் ஒற்றுமைக்கும் கலாச்சாரப் பண்பாட்டுக்கும் வழிவகுக்கும் உயர் கோயில்.
பாண்டிய நாட்டின் தேவார ஸ்தலம்.சம்பந்தரும் அப்பரும் போற்றிப் பதிகம் பாடிய கோயிலிது.
ராமநாத சேதுபதி அரச குடும்பம் தம் திருப்பணிகள் செய்யும் கோயில் இது.
அனுமன் கொண்டு வந்த லிங்கம், காசி விஸ்வநாதர் - விசாலாக்ஷி, ஸ்ரீராமன் விபீஷணன் செப்புத் திருமேனிகள், ப்ரம்மாண்டமான சுயம்பு அனுமன், மிகத் தொன்மை மிக்க அனுமனின் செப்புத் திருமேனி, அழகிய சிற்பக்கலை நயம் ஆகியன கண்டு களித்திடுக.
காலம் காலமாகப் பல ஆயிரம் ஆன்மீக அன்பர்கள் சித்தர் ஞானிகள் ரிஷிகள் மஹான்கள் வணங்கும் ஸ்தலம், சுற்றுலாவுக்கும் இயற்கையின் எழிலுக்கும் ஏற்ற இடம்.
1891 Hits
1891 Hits
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
தீர்த்தம்
தண்ணீர் இறையுணர்வுடன் பயன்படுத்தும் போது தீர்த்தம் ஆகிறது.
கங்கை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, குமரி ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் பாரத தேசத்து மக்களுக்குக் காலம் காலமாக மிக முக்கியமான ஆன்மீக விஷயமாகும்.
உடலின் அழுக்கைத் தண்ணீர் கழுவுவது போல் மனதின் அழுக்கை ஆன்மீக ஞானத்தால் அறத்தால் கழுவ வேண்டும் என்று தீர்த்தம் உணர்த்தும்.
தண்ணீர் மிக அதிகமாக சக்தியை உடையது.
அது மனதின் குறியீடு.
மனம் நல்ல வழியில் செல்ல ஆன்மீகத்தில் தீர்த்தம் பயன்படுத்தப்படும் ஒரு வெளிப்புறச் சாதனம் ஆகும்.
ராமேஸ்வரத்தில் மிக முக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தமான கடல் தான்.
அக்னியும் தண்ணீரும் சேர்ந்த நிலை.
அக்னி மாற்றத்தை உண்டாக்கும் சக்தி கொண்டது.
சீதை மீண்டும் பொருளாசையினால் மனம் போன போக்கில் தான் இருக்கக்கூடாது என்று அக்னியான ஞானத்தால், தீர்த்தத்தால் தன்னை மாற்றிக் கொண்ட தீர்த்தம் இதுவாகும்.
இலங்கைப் போருக்குப் பின் ராமனும் சீதையும் யாவரும் இக்கடலில் நீராடி, மணலில் சிவலிங்கம் செய்து அடுத்த கட்ட வாழ்வை ஆரம்பிக்க விழிப்புணர்வு கொண்ட இடம் அக்னி தீர்த்தம்.
ஸ்ரீராமன் சீதையின் உடல் ஸ்பரிசம் பட்ட கடல் தான் இது.
எந்தச் செயலால் நாம் மிகவும் துன்பம் கொண்டோமோ அதை மீண்டும் செய்யவே கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வைப் பெற சிவபரம் பொருளை, ஸ்ரீராமனை எண்ணித் தீர்த்தம் ஆடுக.
அதே போல் தான் கோயிலுள், தீவுனுள் உள்ள பலர்பல தீர்த்தங்களும்.அதைக் கொண்டு உயர் மனப் பரிமாற்றம் கொள்க.
தீர்த்தாடனம் என்பது அத்தகைய உயர் மனப் பரிமாணத்துக்கே!
ReplyReply allForward |
1648 Hits
1648 Hits