Madras - Armenian Church and Saidapettai Adyar bridge

பேரிஸ் கார்னர் ஆர்மீனிய சர்ச்சும் - தங்கப்பேழையில் தாய் நாடு சென்ற இதயமும்... ஆர்மீனியர்கள் மேற்கத்திய தேசத்தில் இருந்து வியாபாரம் செய்ய கொல்கத்தா வந்தனர்.அதன் பின் மதராஸின் பெருமையை உணர்ந்து வியாபாரத்தை வ்ருத்தி செய்ய இம்மண்ணில் கால் வைத்தனர்.அவர்கள் வாழ்ந்த பகுதி தான் இன்றும் பேரிஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் தெரு. மிகுந்த மதப்பற்றுள்ள இவர்கள் மேரியின் மீது மிக்க பக்தி கொண்டதன் பேரில் கி.பி 1712ல் மிக அழகிய சர்ச் ஒன்றை எழுப்ப அதை ஆங்கிலேயர் இடித்தனராம்.ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் மிக உயர்ந்த கட்டிடம் இருப்பதை விரும்பவில்லையாம். மீண்டும் கட்டிய சர்ச்சைக் கி.பி 1746ல் ஃப்ரெஞ்ச் படையினர் இடித்தனர். அதன்பின் மீண்டும் கி.பி 1772ல் மீண்டும் ஒரு அழகிய சர்ச் அமைக்கப் பட்டது.அவ்விடம் ஆகா ஆஷ்மீர் என்ற பணக்கார வியாபாரின் மனைவின் கல்லறைத் தோட்டம் ஆகும். அதில் அக்காலம் முதல் வாழ்ந்த பல ஆர்மீனியர்தம் கல்லறைகள் உள்ளன. மிகப் புராதானமான 6 மணிகள் [ஒவ்வொன்றும் 150 கிலோ எடை கொண்டவை], மேரி அன்னை சிலை ஆகியன உள. தென் தேசத்தின் மிகத் தொன்மையான சர்ச்சுகளில் ஒன்று பேரில் கார்னர் ஆர்மீனியன் புனித மேரி சர்ச். சைதைப் பாலம்... இன்று காணும் சைதாப்பேட்டை அடையாற்றுப் பாலத்தை கோஜா பெத்ரோஸ் உஸ்கான் என்ற உயர்குடி ஆர்மீனிய வணிகர்.அவர் புனித தாமஸ் த்யானம் செய்த சைதைச் சின்னமலை சர்ச் பகுதிக்கு ஆற்றைக் கடந்து மக்கள் எளிதில் செல்ல பாலம் கட்டினாராம்.மேலும் அவரே புனித தாமஸ் மலையில் 164 கருங்கற் படிகளையும் அமைத்துத் திருப்பணி மேற்கொண்டுள்ளார். இவரது ஆசைக்கு ஏற்ப இவர் இறந்ததும் இதயம் தங்கப்பேழையுள் வைக்கப்பட்டு அவரது தாய்மண்ணுக்கு அனுப்பப் பட்டுள்ளது!
Madras - Kings of Presidency College
Madras - Very first Indian starts first college
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries