Madras - Egmore Railway station - 1908 A.D

எக்மோர் ரயில் நிலையம்

மதராஸின் சென்ட்ரல் ரயில் நிலையம் உருவான பின்னும் தேசத்தின் பல பகுதிகளை ரயில் மூலம் இணைக்க வேண்டிய கட்டாயம் ஆங்கில அரசுக்கு ஏற்பட்டது. அதற்கான ஒரு திட்டம் தீட்டினர்.

எழும்பூரில் எக்மோர் ரீடெளட் என்ற சிறிய கோட்டை ஒன்று இருந்தது.அது ஆங்கிலேயரின் பயன்பாட்டிலும் இருந்தது.ஆனால் அவ்விடம் Dr.பால் ஏண்டி என்பவரது சொந்த நிலம் ஆகும்.

முதலில் தன் சொத்தை விற்க மறுத்த ஏண்டி ரூ.100,000 [அடேயப்பா!] தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டுக்கொடுத்த இடத்தில் கி.பி 1905ல் திட்டம் உருவாகி கி.பி 1908ல் ரயில்வே நிலையம் உருவானது.

தலை சிறந்த கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிஸ் ஹோம் மாதிரி வரைப்படம் தயாரிக்க, திரு.சாமிநாதப்பிள்ளை இதைக் கட்டினார். ரூ.1.7 மில்லியன் செலவனாதாம், காரணம் மிக உயர்தர சிற்றுண்டிச் சாலை, ஓய்வு அறைகள், ரயிலின் பெட்டி அருகிலேயே கார் நிற்கும் வசதி என உயர்தர வசதிகள் இருந்தன. 11.6.1908ல் மக்கள் பயன்பாட்டுக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தது.

ராபர்ட் க்ளைவ் பெயரில் ரயில் நிலையத்தைத் திறக்க அரசு முற்பட மக்கள் எதிர்த்தனர்.எக்மோர் என்ற பெயர் தான் வேண்டும் என்று அடித்துக்கூறி இன்று வரை அப்பெயர் நிலைக்க அக்கால மதராஸ் வாசிகள் ஏற்பாடு செய்து விட்டனர்.

கி.பி 1935ல் இதைப் பார்வையிட்ட மேலை தேசத்தவர் ”ஆஹா லண்டன் சேரிங் க்ராஸ் நிலையத்தை விட பெரிய ப்ளாட்ஃபார்ம்கள் இருக்கிறதே!” என்று வியந்தனராம்!

Madras - very first TRAM service for transport - 1...
Madras - Kings of Presidency College
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries