Madras - Ice house alas Vivekanandha House

ஐஸ் ஹவுஸ் எனப்படும் விவேகானந்தர் இல்லம்

 

மரீனா கடற்கரையில் இருக்கும் ஒரு அழகான கட்டிடம் தான் ஐஸ் ஹவுஸ்.இதை இன்று மக்கள் வி.இல்லம் அதாவது விவேகானந்தர் இல்லம் என்கிறார்கள். இன்று இது ராமக்ருஷ்ண மடத்தின் செயல்பாட்டு ஸ்தலமாக உள்ளது.

1749ல் மீண்டும் மதராஸை ஆங்கிலேயர் ஆளத் தொடங்கிய போது, அமேரிக்காவில் ட்யூடர் என்பவர் பாஸ்டன் நகரில் உறைபனிக் கட்டிடகளை விற்பனை செய்வதை அறிந்தனர் [Tudor ice company].மதராஸின் கொடுமையான வெப்பத்திக்கு வடிகால் தேடிய லண்டன் காரர்கள் ட்யூடரை மதராஸிலும் வாணிபம் செய்ய ஊக்குவித்தனர்.கொல்கத்தாவில் தன் ஐஸ் கம்பெனியை நடத்திய அவர் மதராஸில் இன்று இருக்கும் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தான் தன் உறைபனி மூட்டைகளை மரத்தூளுடன் கலந்து சேமித்து வைத்து வியாபாரம் செய்தார்.அதனால் இவ்விடம் ”ஐஸ் ஹவுஸ்” ஆனது.

ட்யூடரை மதராஸுக்கு அழைத்து வந்தவர் கம்பெனியின் அலுவலர்களில் ஒருவரான ஆண்ட்ரூ பான்க்ராஃப்ட்.

சுமார் 1800களில் எழுப்பப்பட்ட இக்கட்டிடம் அரசின் கட்டிடம் ஆகும். இதை சாந்தோம் கிடங்கு என்று அக்காலத்தில் அழைத்தனராம்.[Depot of Santhome] 1840ல் ஐஸ் ஹவுஸை ட்யூடர் வாடகைக்கு வாங்கி 1865 வரை வியாபாரம் செய்துள்ளார். [ஒரு கிலோ ஐஸ் கட்டி ஒரு அணா]

அதன் பின் ஹை கோர்ட் நீதிபதி பிலஹரி ஐயங்கார் இக்கட்டிடத்தை விலைக்கு வாங்கினார். ஜேம்ஸ் கெர்னன் என்ற கவர்னர் ஜெனரலின் பெயரிட்டு [Castle Kernan] அதைப் பராமரித்தார்.ஐயங்கார், ஸ்வாமி விவேகானந்தரின் முக்கிய சீடர்களுள் ஒருவர்.

சிகாகோ சென்று திரும்பும் வழியில் 1897ல் விவேகானந்தரைக் கொழும்பில் இருந்து ஐயங்கார் மதராஸுக்கு வரவேற்று ஐஸ் ஹவுஸில் தங்க வைத்து ஒன்பது நாட்கள் மக்களுக்கு ஆன்மீக சத்சங்கம் அளித்தாராம்.இத்தருணத்தில் தான் ஒரு நாள் அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொற்பொழிவு செய்துள்ளார்.அதன் தகவலை இன்றும் கோபுரத்தின் நுழைவாயிலில், வலது பக்கத்தில் காண்க.

அதன் பின் மதராஸில் விவேகானந்தரின் சீடர்கள் மூலம் இக்கட்டிடத்தில் அவர் காட்டிய ஆன்மீக சமூஹப் பணிகள் தொடங்கின, இன்று விவேகானந்தர் இல்லம் ஆயிற்று. அண்ணல் காந்தியை மஹாகவி பாரதியார் இங்கு தான் சந்தித்துள்ளார்.

________________________________________________________________________-

Feb 2016 PUP
Madras - Wall Tax Road's history at its base....
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries