Madras - Naphier Bridge across koovam river

நேஃபியர் பாலம்

1819ல் ஸ்காட்லேண்டில் பிறந்த ஃப்ரேன்ஸிஸ் நேஃபியர் பல மொழிகளை எளிதில் க்ரஹித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.உயர்ந்த படிப்பு படிக்கா விடினும் அவரது சீரும் ஒழுக்கமும் நாணயமும் லண்டனை, அவரை மதராஸின் கவனர் ஜென்ரலாக நியமிக்க வைத்தது.[1866 - 1872 A.D]

பாவம் அவர் காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மிகக் கொடுமையான பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடின.

அவரது தோழி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேர்ளின் அறிவுரைப் படி அவர் மக்களுக்குப் பசி தீர்க்க வழி செய்தார்.

கூவம் ஆற்றின் முகத்வாரத்தின் அருகில் இருந்த நரி மேடு என்ற மணல் பாங்கான மேட்டை அகற்றினார், அம்மணல் கொண்டு சமன் செய்யப்பட்ட ஊரே மண்ணடி.

அதற்கான கூலியை மக்களுக்கு வழங்கினார்.மேலும் மரீனாவையும் ஜார்ஜ் கோட்டையையும் இணைக்கப் பாலம் எழுப்பினார்.அதுவே இன்று அழகிய ஆறு வளைவுகளுடன் கூடிய நேஃபியர் ப்ரிட்ஜ்.அதுவரை ஓடத்தில் தான் மக்கள் கூவத்தைக் கடந்தனர்.

வெறும் அன்ன தானம் செய்யாமல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தந்த அறிவைக் காண்க.

ஆனால் இன்று காணும் பாலம் 1869ல் எடுக்கப் பட்ட புகைப்படத்தில் இல்லை.வளையங்கள் அதில் இல்லை.பின்னர் கட்டப்பட்டன. சில புகைப்படங்களில் சதுர வடிவிலான பிடிகளையும் காண முடிகிறது.

ஆர்த்தர் ஹோப் என்ற ஆங்கிலேய அதிகாரி 1943ல் இப்பாலத்தினைச் சற்று விரிவாக்கினார்.

கூவத்தின் தூய்மை, மதராஸின் சுகாதாரம் ஆகியவற்றில் மிக மிக கவனமும் கண்டிப்பும் உடையவர் நேஃபியர்.இன்று இருந்திருக்கக் கூடாதா?

சுகாதாரம் - தூய்மை பற்றிய பயிற்சிகள் பெற தனிக்குழுவை அவர் லண்டனுக்கு அனுப்பினாராம்.அவருக்கு ஒரு சல்யூட்!

Madras - Wall Tax Road's history at its base....
Madras - St.Thomas Mount - a sign for acceptance b...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries