Madras - The very first boarding school in India

தேசத்தின் முதல் போர்டிங் ஸ்கூல்...

கி.பி 1790

மதராஸின் கருப்பர் நகர மக்கள் அந்த மே மாதத்தின் காலையில் சாலைகளில் வந்த போது பல இடங்களில் அந்த அதிசய விளம்பரத்தைப் பார்த்தனர்.

இரவோடு இரவாக விளம்பரம் செய்து காலையில் மக்களை ஈர்ப்பது ஒன்றும் புதியது அல்ல!

அது தான் ஆங்கிலக் கல்வியைக் கற்றுத் தரும் ஒரு பள்ளியின் விளம்பரம்.

அதில் என்ன ஆச்சர்யம் தெரியுமா? பள்ளிக்கூடத்திலேயே விடுதி வசதியும் செய்து தரப்படும் என்று விளம்பரம் கூறியது.

குருகுலக் கல்வி முறை அடியோடு மாறிய இறுதிக் காலத்தில் ஒரு M.A பட்டதாரி மீண்டும் விடுதியுடன் கூடிய பள்ளியை ஆரம்பிக்க முயற்சித்ததை  மக்கள் வரவேற்றுள்ளனர்.

விரைவில் ஆங்கிலத்தில் பேச-எழுத கற்றுத் தரப்படும் என்பதே விளம்பரத்தின் ஹைலைட் மெஸேஜ். முப்பது தினங்களில் வேற்று மொழிகள் கற்றுத்தரப்படும் மையங்களுக்கு இதுவே முன்னோடி.

கணிதம், பூகோளம், ஐரோப்பிய வரலாறு, அறிவியல், தத்துவம் ஆகிய பாடங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் தரப்படும் என்றும் பட்டதாரி கூறினாராம்.

க்ரீக் அல்லது லத்தீன் மொழியை இணை மொழியாக எடுத்துக் கற்றவும் வாய்ப்பு தரப்பட்டதாம்.

அக்காலத்திலேயே மதராஸின் வசதி மிக்க மக்களும் வெளியூர் மக்களும் இப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தனர்.

யார் இந்த பட்டதாரி? அவர் தான் ஜான் ஹோம்ஸ்.

இவரது இப்பள்ளியே பாரதத்தின் நவீன போர்டிங் பள்ளிகளுக்கு முன்மாதிரி என்பதில் வரலாற்றில் சந்தேஹம் இல்லை!

___________________________________________________

Madras - The very first English school in India
Madras - Very first pipe line for drinking water i...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries