Madras - Victoria Public Hall

விக்டோரியா ஹால் எனப்படும் மதராஸின் டவுன் ஹால்

 

இங்கிலாந்து மஹாராணி விக்டோரியா பாரத தேசத்தின் ஆளும் அதிகாரியாகி ஐம்பது ஆண்டுகள் முடிந்த பொன்விழாவை ஒட்டி எழுப்பப் பட்டதே இன்று ரிப்பன் மற்றும் சென்ட்ரல் நடுவில் அழகாக கம்பீரமாக நிற்கும் விக்டோரியா தவுன் ஹால் கட்டிடம்.

ஜார்ஜ் டவுன் பச்சையப்பன் கட்டிடத்தில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் மதராஸின் முக்கிய அரசியல், வணிக, உயர் சமூஹ ப்ரமுகர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் சுமார் முப்பது பேர் சேர்ந்து பார்க் டவுன் நிலத்தில் பணம் முதலீடு செய்து எழுப்பிய மாளிகை தான் இது.

17.12.1883 அன்று ஒரு தென்னாட்டின் சிற்றரசக் குடும்பம் மூலம் அடிக்கல் நடப்பட்டது.

மைசூர் உடையார், திருவிதாங்கூர் அரச குடும்பம், பி.ஓ ஆர் என் சன்ஸ் கடிகார நிறுவனம், அன்றைய உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்ரீமான்.முத்துஸ்வாமி ஐயர் போன்றோர் ரூ.1000 நன்கொடை அளித்து உதவினராம்.

ராபர்ட் ஃபெலோயஸ் சிஷோலெம் என்ற கட்டிடக் கலைஞர் வடிவமைத்த இம்மாளிகை நம்பெருமாள் செட்டி என்பவரால் அழகுறக் கட்டப்பட்டது.

பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆகியோரின் நாடகங்கள், பல இசை நிகழ்ச்சிகள் இங்கே அரங்கேறின.குறிப்பாக வீணை மாமேதை தனம்மாள் அடிக்கடி இங்கே கச்சேரி செய்துள்ளார்.

விவேகானந்தர், காந்தி, கோகலே, பாரதியார் போன்ற பலர் சொற்பொழிவு தந்துளர்.

மாலை வேளை நாடகங்களுக்குப் பெயர் போன அரங்கமாக விக்டோரியா ஹால் திகழ்ந்ததாம்.

Madras - Very first pipe line for drinking water i...
Madras - Central Railway Station
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries