Madras - Wall Tax Road's history at its base....

வால் டேக்ஸ் ரோட்

1.9.1746

அதிகாலை நேரம், சாந்தோம் வழியாக சுமார் 600 வீரர்களுடன் ஃப்ரெஞ்ச் அதிகாரி டி லா போர்டனாயிஸ் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குள் நுழைந்து கொண்டனர். அதன் பின் ஜார்ஜ் கோட்டை மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அப்போது கிழக்கு இந்தியக் கம்பெனியின் போர்க் கப்பல்கள் கடலில் இல்லை.

தொடர்ந்து அவர்கள் கோட்டைமீதும் கறுப்பர் நகரம் எனப்படும் சென்னை மீதும் தாக்குதல் நடத்தினர்.ஊரையே காலி செய்யும் அளவுக்குத் தாக்குதல் நடந்தது.ஊர் சீர் கெட்டது. மேலும் கப்பல் மூலம் பீரங்கித் தாக்குதலும் நடந்தது. அதனால் ஆங்கில கவனர் பத்தாம் தேதி மதியம் கோட்டையை விட்டு வெளியேறி, தன் வாளை ஃப்ரெஞ்சிடம் தந்தார்.

கோட்டைக்குள் புகுந்து அனைவரையும் கைது செய்து, பல பொருள்களையும் கொள்ளை கொண்டு புதுவைக்குத் திருபியது ஃப்ரெஞ்ச் படை.சுமார் மூன்று ஆண்டுக் காலம் ஜார்ஜ் கோட்டையில் ஃப்ரெஞ்ச் கொடியே பறந்தது.அதன் பின் 1749ல் ஆங்கிலேயர் ஒரு மாபெரும் தாக்குதல் நடத்தி மீண்டும் கோட்டையைப் பிடித்தனர்.

மீண்டும் கறுப்பர் நகரத்தைப் புதுப்பித்த மக்களும் ஆங்கிலேயரும் அதைக் காக்கும் பொருட்டு ஒரு கோட்டைச் சுவற்றைக் கட்ட எண்ணினர்.அதற்காக மக்கள் தம் வருவாயில் இருந்து வரி தர வேண்டும் என்று ஆங்கிலேயர் சட்டம் கொண்டு வர அதை நம் ஊர் மக்கள் ஏற்கவில்லை. ”கோட்டையை விட்டவனுக்கு எதற்கு வரி?” என்று ஏளனம் செய்தனராம். கறுப்பர் நகரைச் சுற்றிக் கோட்டைச் சுவர் எழுப்ப ஆரம்பித்தனர், ஆனால் முழுவதும் கட்டப்படவில்லை. அது தான் இன்று வால் டேக்ஸ் சாலை.

Madras - Ice house alas Vivekanandha House
Madras - Naphier Bridge across koovam river
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries