Paanar artists of ancient Tamil culture in Kerala

Sakthi Foundation

சேர தேசத்துப் பாணர்கள்...

இன்றும் சேர தேசமாம் கேரத்தில் பல்வேறு தொல் த்ராவிடக் கலை வடிவங்கள் அப்படியே மாறாமல் உள.காரணம் மலைகள் தாண்டிய படையெடுப்புகள் குறைவே.ஆனால் இஸ்தாத்தையும் கிறிஸ்துவத்தையும் பாரத தேசத்துக்குள் முதன்முதலில் வரவேற்று இடம் கொடுத்த பூமி அதுவே.

பாணர்கள் இன்றும் ஒரு சாதியினராய்க் கேரளம் முழுவதும் உளர்.அவர்கள் கையில் யாழ் தாங்கிப் பாடுவர்.அவர்தம் மனைவியோ மகளோ சகோதரியோ அம்மாவோ [பெண்] அவசியம் உடன் இருப்பர்.

கோயில்களின் முன்பில் அத்தெய்வத்தைக் குறித்துப் பாடி அத்துடன் நம் பெயரைச் சொல்லி நம் க்ரஹ பீடா தோஷங்கள் போக வேண்டிப் பாடூவர், நாம் தரும் தட்சிணைக் கைக்கொள்வர்.இவர்கள் அதிகம் நாக சர்பப் பாட்டுக்களை சேர்த்துக் கொள்வதும் வழக்கம்.

கொடுங்கல்லூர் [மூதூர் வஞ்சி] கோயில் வாசலில் பல ஆண்டுகளுக்கு முன் தேவியின் கண்ணகி சரிதத்தை இவர்கள் பாடக் கேட்டு அடியேன் தட்சிணை கொடுத்த ஞாபகம் உண்டு.

இவர்கள் இன்றும் ஊர் ஊராய்ச் செல்லும் வழக்கம் உடையோர்.

தமிழகத்தில் பிற்கால இசைக் கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் பாணர்தம் இடத்தை நிரப்பினர் என்று ஓரளவுக்குக் கொள்க.

காயங்குளம் ஓச்சிராவில் பாணர்களை நமஸ்கரித்து, அவர்தம் பாடல்களைக் கேட்டதோடு அடியேன் அவர்தம் யாழ் விலைக்குக் கிடைக்குமோ என்று வேண்டியபோது ”எத்தனை கஷ்டம் வரினும் யாழை விற்க மாட்டோம்” என்று அவர்கள் கூறியதை மறக்க முடியாது.மேலும் யாருக்கும் யாழினை செய்தும் தர மாட்டார்களாம்.அது அவர்களுக்கே உரிய வித்யை!

அன்புடன்

Dr.Madeswaran.M

23.6.2016, Madras

Our first day on reopening….Coimbatore UNI5 center...
Kodungaloor Thaalapoli festival - a historical stu...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries