Tamil Riddles (vidukathai) - தமிழ் விடுகதைகள்

Uni5 EDUCATION - TAMIL RIDDLES

Riddles playing was a part of language development and also helps analytical thinking and creativity. In our Uni5 system we strangly emphasize on playing riddles at school, home, before bed time, while driving with children as playing family games.

When children and adult play video games it spoils  social interactions. Playing riddles is equally entertaining for  adults and children and nutures social interactions. In our experience children living in foreign countries are proficient in their mother tongue and in other languages because of these traditional approaches.

We use the riddles in our uni5 schools because it boosts imagination, language skills, connecting talents, communication,  problem solving ability in children. Parents and teachers must ask the child to imagine and visualize the sentence to get the inner picture of the message.

We also use proverbs as part of this language teaching activity.

 

Some creative riddles from Uni5 School Syllabus. (Answers in the end of page)

1. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான் 

2. மூடிய வெள்ளைக் கிணற்றுக்குள் மஞ்சள் நிலா –

3. ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான் 

4. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் –

5. பாட்டி வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் –

6. கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது -

7. கரைந்து போகுது வெள்ளித் தட்டம் -

8. சேற்றுக்குள்ளே வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் -

9. வெடிய வெடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் -

10. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் -

11. மூவராய்ச் சேர்வார்கள், சிவப்பு வண்ணம் தீட்டுவார்கள் –

12. புளிப்பான மீனுக்கு உப்பு போதலையாம், மூடி வச்ச ஜாடிக்குள்ளே உப்பில் நீந்துதாம் 

13. வெள்ளைக்கார வீரன், சுட்டுப் போட்டால் நொறுங்குகிறான் -

14. சின்னப் பையனுக்குப் படுக்க வீட்டளவு பாய் வேணும் -

15. உரச உரச குழைவான், பூசப் பூச மணப்பான் -

16. தொட்டு விட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்திடுவான்

17. வெள்ளைக்கார அழகிக்கு வெள்ளை வண்ண மேலங்கி -

18. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி -

19. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் 

20. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -

21. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் -

22. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் 

23. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது 

24. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் -

25. மின்சாரம் இல்லாமல் விடிய விடிய எரியும் சீரியல் பல்புகள் -

26. ஊரைச் சுற்றுவார்கள், கூடித் தின்பார்கள், கறுப்புக்கோட்டு ஆசாமிகள் 

27. விட்டெறிந்த தங்கத் தட்டு வானத்துல நிற்குது -

28. ஒரு ஜான் பழத்தின் தோல் முழுக்க முள்கள் -

29. தண்ணீரில் விரிக்கும் ஓட்டைப் பாய் -

30. தலை சாய்க்க மடி தருவான் பஞ்சு நண்பன் -

31. சட்டையை  கழற்றி சட்டென குளத்தில் குதித்தான்.

32. காம்பு இல்லாத வட்ட இலை

33. நாலு காலில் உக்காருவான், அய்யோ பாவம் நிற்கமாட்டான்.

34. நீல நிற புடவைககாரி, முழு நீளம் குட்டி குட்டி ஒட்டைகளாம்

35. நெட்டையன் குட்டயணைவிட சீக்கிரம் ஓடிடுவான்

36.பச்சைமரகதப்பெட்டிக்குள்முத்துக்கள்வரிசையாய்மின்னுதம்மா!    
                                    
37. மழைவந்தால்பூமிவிரித்துக்கொள்ளும்குடைநான்.
 
38. கல் எறிந்தால் போதும் அரண்மனையே காலியாகி விடும்.   
 
39. தன்னையே கரைத்துக் கொள்வான், இருட்டை விரட்டிடுவான் .
 
40. மரக்கிளையில் தறியோட்டும் சின்னப்பொன்னு நான்.  
 
41. மண்ணுக்குள் மறைந்திருப்பேன், மங்கலத்தை வழங்கிடுவேன்.  
 
42. மண்ணுக்குள் செய்து வைத்த களிமண் சொப்புகள்.  
 
43. ரீங்காரப் பாட்டுப்பாடி ஊசி போட்டு ஓடிடுவான்.  
 
44. பச்சை அக்கா, சிவப்பு தங்கை, வாயில் போனா கதற அடிச்சுடுவாங்க.  
 
45. தண்ணீர் இல்லாத குளத்திலே, மிதந்து வாழும் னெண்டைமீன்.  
 
46. வீடு இரண்டு, பாதை ஒன்று.  
 
47. காட்டிலும் வயலிலும் பட்டுத்துணிக்கடை வைக்கிறாள் செல்லம்மா.
 
48. அரைக்க அரைக்கக் கரைந்திடுவான் ஊருக்கே மணம் தருவான்.
 
49. பள்ளத்தைக் கண்டதும் பாய்ந்தோடும் தம்பி இவன்.
 
50. நீல வண்ண வயலிலே பருத்திக்காடுகள் பூத்துக் குலுங்குது.
 
51. வெட்ட வெட்ட வளர்ந்திடும், கவனம் இல்லை என்றால் உதிர்ந்திடும்.
 
52. தண்ணீரில் மிதக்குது பத்துமாடி மாளிகை.
 
53. கடலுக்குள் பூத்தது, கோயிலிலே முழங்குது.
 
54. பச்சைக் கிளிப்பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்.  
 
55. பிறை போல இருக்கும் அண்ணன், பயிர்பச்சை அறுத்திடுவான்.  
 

Answers


1. ீக்குச்சி
2. முட்ளட
3. தசருப்பு
4.  பூசணிக்கொய்
5.  புடலங்கொய்
6.  இைநீர்
7.  ப ய்பிளற நிலொ
8.  ொமளர, சூரியன்
9.  கடிகொரம்
10.  சூரியன்
11.  தவற்றிளல, பொக்கு, சுண்ணொம்பு
12.  மொங்கொய் ஊறுகொய்
13.  அப்பைம்
14. சிலந் ி வளல
15. சந் னம்
16.  மரு ொணி
17.  பொல் ஆளட
18.  மயில்
19. கிைி
20.  கப்பல்கள்
21. ஒட்டகம்
22.  த ொட்டொச் சுருங்கிச் தசடி
23.  விமொனம்
24.  பப்பொைி விள கள்
25. விண்மீன்கள்
26.  கொகங்கள்
27. தபைர்ணமி நிலொ
28.  முள்ைம்பன்றி
29.  மீன் வளல
30.  ளலயளண
31. Peeling banana and putting in mouth.
32. Appalam
33. Chair
34. Stars in sky
35. Clock 

36. வெண்டைக்காய்
37. காளான்
38. தேன்கூடு
39. மெழுகுவர்த்தி
40. தூக்கனாங்குருவி
41. மஞ்சள்
42. உருளைக்கிழங்கு
43. கொசு
44. பச்சை, வர மிளகாய்கள்
45. கண்
46. மூக்கு
47. மயில்
48. சந்தனக்கட்டை
49. வெள்ளம்
50. மேகங்கள்
51. தலைமுடி
52. கப்பல்
53. சங்கு
54. கள்ளிச்செடி
55. அரிவாள்

 

(more to come soon) Please mail us  the riddles you know using this easy tamil software link.

 

Other sources:

Source: Tamil Delta

1. குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே?

2. மழையில் பிறந்து வெயிலில் காயுது?

3. நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?

4. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?

5. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்துவிடும்?

6. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

7. வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்

8. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்?

9. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

10. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?

 

எங்க
பாட்டி அடிக்கடி சொல்லுவாள் A.S.மணி🔔✍️

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் | காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே

More sources:

1. Indus ladies.

2. Ungal Ullagam

 

We have given a collection of riddles in

English

 Malayalam.

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries