Madras - Light Houses

மதராஸ் - லைட்ஹவுஸ்[கள்]

கலங்கரை விளக்கு ஒன்றும் தமிழருக்குப் புதியதே அல்ல.
மாமல்லபுரத்தில் கி.பி ஏழாம் நூற்றாண்டின் கலங்கரை விளக்கு உள்ளது.

கோடியக்ரையில் மிக்க இடிபட்ட தன்மையில் சோழரின் கலங்கரைச் சுவர் ஒன்றும் உள்ளது.

ஆனால் ஆங்கிலேயன் எழுப்பிய கலங்கரை விளக்கு மதராஸுக்கு மிக முக்கியம்.

புயல் மழையினால் மதராஸின் கடல் அலைகள் அடிக்கடி மரக்கலங்களை அலைக்கழித்து பழவேற்காடு அல்லது கோவளம் மணற்கரைகளில் தரைதட்டிச் செய்வது வழக்கம்.

Continue reading
  1946 Hits
1946 Hits

Madras - High Court Of Madras

ஹைக்கோர்ட் ஆஃப் மதராஸ்

கி.பி 26. 6. 1862 அன்று இங்கிலாந்தின் விக்டோரியா மஹாராணி அம்மையார் அனுமதித்ததன் பெயரில் இன்று மதராஸ் உயர்நீதி மன்றம் முறைப்படி ஆரம்பம் ஆனது.

மதராஸின் அழகிய, பெரிய வளாகங்களுள் ஒன்று இன்று ப்ராட்வேயில் இருக்கும் மதராஸ் உயர்நீதி மன்ரம்.

அதனுள் தான் பாரம்பரியம் மிக்க சட்டக் கல்லூரி இயங்குகிறது.

துறைமுகத்துக்கு எதிராக அமையும் இவ்வாளகத்தினுள் தான் இரண்டாம் கலங்கரை விளக்கு நிமிர்ந்து நிற்கின்றது.

Continue reading
  1844 Hits
1844 Hits

Madras - Black Town or George Town or Chenna Pattinam

ஜார்ஜ் டவுன் - கருப்பர் நகரம் - சென்னப் பட்டிணம்

 

* கடற்கரையின்கண் அமையும் நகரம், பட்டிணம் ஆகும்.

நம்மூர் நாயக்க மன்னனின் அனுமதி பெற்று, கூவத்தின் கரையில் வியாபாரம் நிமித்தம் கோட்டையும் குடோனும் கட்டிக் கொண்ட ஆங்கிலேயர், தம் கோட்டைக்குள் யாரையும் தேவையில்லாமல் நுழையவோ வாழவோ விடவில்லை.

மிகப் பழங்காலக் குறிப்புகளின்படி இன்று ஜார்ஜ் கோட்டையுள்ள இடப்பகுதி அந்நாளைய மீனவக் குடிகளின் நிலமாகும்.

Continue reading
  1888 Hits
1888 Hits

Pungeri UNI5 center - Kanchipuram Dt, Jan, Feb 2016 - Report

Pungeri UNI5 Center - Pungeri, Kanchipuram Dt

 

Main concepts presented from 25th January 2016 - February 12th, 2016

 

Energy

Continue reading
  1709 Hits
1709 Hits

Poraiyar UNI5 Center - Nagapattinam Dt, Jan, Feb - 2016 - report

Poraiyar UNI5 center - Nagapattinam Dt

 

Observation - 25.1.2016 - 12.2.2016

Energy

Oma valli leaves - medidinal water

Continue reading
  1703 Hits
1703 Hits

Madras - first encounter shooting....

மதராஸின் முதல் என்கவுண்ட்டர்

கி.பி 1642
ஆகஸ்ட் மாதம் ஒரு நாள்,
அன்று காலையிலேயே நன்றாக சரக்கு அடித்து விட்டு, சாந்தோம் போர்த்துகீஸ் வீரர்கள் மூவர் வேண்டுமென்றே TOM AND JERRY ரகளை செய்ய ஜார்ஜ் கோட்டை அருகில் வருகின்றனர்.

இவர்களைப் பார்த்ததுமே ஆங்கிலேயர்களுக்குக் கடுப்பு, வியாபார, மத எதிரிகள் அல்லவா?

போட்ட சரக்கு புத்தியை மயக்க, போர்த்துகீஸியர் வாய்வார்த்தை விட, பதிலுக்கு இவர்களும் வாய் பேச, கைகலப்பில் முடிய...அடே ஆண்டனி மிராண்டோ என்ற போர்த்துகீஸிய வீரன் ஓர் ஆங்கில வீரனை ஒரே போடு கத்தியால் போட்டுத் தலைக் கடற்கரையில் வீசினான்.

இவன் சும்மா விடுவானா?
மூவரையும் கைது செய்ய, விஷயம் வியாபாரிகள் மூலம் சாந்தோமுக்குப் பரவ - sorry no cellphone, watsup.

Continue reading
  1734 Hits
1734 Hits

Madras - very first case and death sentence given by English in India

மதராஸின் முதல் வழக்கும் தூக்குத் தண்டனையும்

கி.பி 1641
ஜார்ஜ் கோட்டையின் வாசலில் ஒரே பரபரப்பு!
ஆங்கில வீரர்கள் முகத்தில் பயம்...
கூவம் ஆற்றின் ஓரத்தில் ஒரு இந்தியப் பெண்ணின் உடல் மிதப்பதாகச் செய்தி வந்தவுடன் இந்த பயமும் வந்துவிட்டது...
***
கருப்பர் நகரம் [அதான் இன்றைய ஜார்ஜ் டெளன், அன்றைய சென்னைப்பட்டிணம்]

அதில் வாழ்ந்த ஒரு ஒழுக்கமற்ற பெண்ணின் சடலம் அது.
அவள் உடலில் காயங்கள் இல்லை, ஆனால் கொல்லப்பட்டு வீசப்பட்டாளோ என்ற ஐயம்!

கூவம் கரையில் உடலைப் பரிசோதித்த அதிகாரிகள் சிலர் அக்கூட்டத்தில் வேடிக்கை பார்த்த ஒரு இளைஞனை சந்தேஹத்தின் பேரில் கைது செய்தனர்.காரணம் அவன் உடலில், சட்டை வேட்டியில் ரத்தக்கரை.

நையப்புடைத்து விசாரித்ததில் அவன் இவளைக் கொன்றது தெரிய வந்தது.அவன் வீட்டில் இவளது உடைகள் மற்றும் சில பித்தளை ஆபரணங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

Continue reading
  1681 Hits
1681 Hits

Madras - Mint road

மிண்ட் ஸ்ட்ரீட்

மதராஸின் மிக முக்கியமான, பழமையான பகுதிகளில் ஒன்று மின்ட் சாலை.அதில் தான் மின்ட் மருத்துவக் கல்லூரி உள்ளது.

இதுவே அக்கால மதராஸின் நீளமான சாலை என்பர்.பூவிருந்தவல்லி சாலையையும் பார்க் டெளனையும் இணைக்கிறது.மேலும் மிக முக்கியமான தொழில்கள் இச்சாலையில் காலம் காலமாக நிகழ்கின்றன.

கம்பெனியின் துணிகளை ப்ளீச் செய்ய, வெளுக்க, சாயமேற்றத் தேவையான தெலுங்கு வண்ணார்களையும், தெலுங்கு துபாஷிகளையும் அக்காலத்தில் இங்கு அதிகம் குடியேற்றியது கோட்டை.அதன்பின் கி.பி 1740 வாக்கில்  குஜராத்தின் செளராஷ்டினரும் மார்வாடிகளும் இங்கு குடியேறினர்.துணி வியாபாரம், சில்லரை வியாபாரங்கள், கொடுத்து வாங்கல், வட்டித் தொழில் என்று இன்று வரை மின்ட் பகுதி சதா சுறுசுறுப்பாகவே உள்ளது.

கி.பி 1841 - 1842ல் மதராஸ் ஆங்கிலேய அரசு தன் நாணயங்களை அச்சிடும் தொழிற்சாலையை ஜார்ஜ் கோட்டையில் இருந்து இப்பகுதிக்கு மாற்றி ”மிண்ட் ஸ்ட்ரீட்” என்று பெயரிட்டது.

Continue reading
  1800 Hits
1800 Hits

Madras - Wesley Church - Egmore - 1905 A.D

எக்மோர் வெஸ்லே சர்ச்

கி.பி 1892ல் ஜான் ப்ரீடன் ஒரு பெரிய தாமரைக் குளத்தைத் தான் வாங்கினார், அதுவும் இன்றுள்ள எக்மோரில்.

அதை மூடி அதன் மீது தேவாலயம் ஒன்றையும் எழுப்பினார்.

அது தான் இன்று மதராஸில் உள்ள வெஸ்லே சர்ச்.

ஜார்ஜ் கத்தீட்ரல், மேரிஸ் சர்ச் ஆகியவற்றில் உள்ள ஆர்கன் பைப் இசைக் கருவி இங்கும் உள்ளது.மிக அழகிய கோதிக் கட்டிடக் கலை நயம் கொண்ட சர்ச் கி.பி 11. 2. 1905 அன்று தன் இறைப்பணியை ஆற்றத் தொடங்கியது.

Continue reading
  1649 Hits
1649 Hits

Madras - Madras School Of Arts - 1850 A.D

மதராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்

மதராஸின் அழகிய கட்டிடங்கள் ஒரு புறம்.
அதே வேளையில் பாரத தேசத்தின் கலைகளையும் ஆங்கிலேயர் அதிகம் ரசித்து மதித்தும் உள்ளனர்.

தன் தேசத்து ஓவியக் கலையை, வண்ணக்கலவைக் கலையை, சிற்பக் கலையை இந்தியனும், மதராஸ் வாழ் ஆங்கிலேயனும் கற்பதற்காகவே கி.பி 1850ஆம் ஆண்டு சர்ஜன் அலெக்ஸேண்டர் ஹன்ட்டர் மதராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற தரமான பள்ளியை ப்ராட்வேயில் ஆரம்பித்தார்.

ஆனால் கி.பி 1852ல் மதராஸ் அரசு இப்பள்ளியைக் கைக்கொண்டு மதராஸ் ஸ்கூல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ் என்று மறு பெயர் சூட்டிவிட்டது. அவ்வாண்டு தான் இன்றுள்ள கட்டிடத்துக்குப் பள்ளி மாற்றப்பட்டது.

இன்று சென்ட்ரல் - பூந்தமல்லி சாலையில் மிகத் தொன்மை மிக்க வளாகத்துள் தேசத்தின் பல ஓவியக் கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பெருமை Madras school of artsக்கு உண்டு!

Continue reading
  1710 Hits
1710 Hits

Madras - Egmore Museum , theater and art gallery

எக்மோர் ம்யூஸியம்

 

மதராஸின் பெருமைகளில் ஒன்று எக்மோர் ம்யூஸியம் - எழும்பூர் அருங்காட்சியகம்.

பாரத தேசத்தில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இரண்டாம் அருங்காட்சியகம் இதுவாகும்.முதல் ம்யூஸியம் கொல்கத்தா மாநகரில் அமைந்துள்ளது.

கி.பி 1778ல் அன்றைய கோட்டையின் கவர்னர் 43 ஏக்கர் நிலப்பரப்பை எழும்பூரில் அரசு அலுவலங்களுக்கு என ஒதுக்கியது.

Continue reading
  1775 Hits
1775 Hits

Madras - first shopping mall of India - Spencer Plaza - 1864 A.D

ஸ்பென்ஸர் ப்ளாஸா - தேசத்தின் முதல் ஷாப்பிங் மால்

இன்று ஊருக்கு ஒரு மால் ஷாப்பிங் சென்டர் உருவாகி வருகிறது.

தெற்கு ஆசிய தேசங்களின் பழமையான மற்றும் பெரியதொரு மால் தான் இன்று மதராஸின் மவுண்ட் ரோட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கும் ஸ்பென்ஸர் ப்ளாஸா.

பாரத தேசத்தின் முதல் மேற்கத்திய ஷாப்பிங் வளாகம் இதுவே!

கி.பி 1863-64 ஆம் ஆண்டுக் காலத்தில் ஆங்கிலேயரின் மேற்கத்திய வாணிபம், பொருள்களின் தேவைக்கு வேண்டி மதராஸில் ஸ்பென்ஸர் ஆரம்பம் ஆனது.

Continue reading
  1703 Hits
1703 Hits

Madras - Moore Market [1898 to 1985]

மூர்மார்கட்

ஆண்டுக்கு ஒருமுறை மதராஸில் புத்தகக் கண்காட்சி வருகிறது.

ஆனால் ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் புத்தகக் கண்காட்சி போல் ஒரு விற்பனைப் பகுதி மதராஸில் இயங்கியது.

முன்பெல்லாம் யாராவது மதராஸ் போகிறார்கள் என்றால் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள் ஒரு புத்தகப் பட்டியலே கொடுத்து விடுவார்கள்.

குறிப்பாக second hand books அதிகம் கிடைக்கும் இடமாக இது இருந்தது.

Continue reading
  1766 Hits
1766 Hits

Madras - University of Madras - 5.9.1857

மதராஸ் பல்கலைக் கழகம்

உலகில் ஐரோப்பியர்களால் உருவாக்கப் பட்ட மிகத் தொன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று மதராஸ் பல்கலைக் கழகமும் ஆகும்.

கி.பி 1857 ஆம் ஆண்டில் மதராஸ் யூனிவர்ஸிட்டி உருவானது.

மரீனா கடற்கரையில் ”கல்வி கரையில” என்பதை உணர்த்துவதாக நிமிர்ந்து இன்றுவரை அழகிய இந்தோ சாரசானிக் கட்டிட வடிவில் நிற்கிறது.


அன்றைய மதராஸின் ஆளுனர் சர் எலிஃபின் ஸ்டோன் அவர்களின் மேற்பார்வை, லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆளுமையில் பல்கலைக்கழகம் உருவாயிற்று.

Continue reading
  1679 Hits
1679 Hits

Madras - Twin townships - Mailapore - Thiruvallikeni

மயிலை - திருவல்லிக்கேணி கண்டேனே...

மதராஸ் என்பது புதிது.ஆனால் அதன் உதிரி பாகங்களான ஊர்கள் மிகப் பழையன.

திருவொற்றியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், பல்லாவரம் [பல்லவபுரம்], கோட்டூர்புரம், வடமுல்லைவாயில், பாடி, எழுமூர் [எக்மோர்] குன்றத்தூர், கோவூர், மாங்காடு போன்ற பல ஊர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறு நகரங்களே!

அவற்றில் உள்ள திருக்கோயில்களை பக்தி இலக்கியத்தில் நம் தெய்வீகப் பெரியோர்கள் பதிவு செய்துளர்.

மதராஸின் திருமயிலையில் பேயாழ்வாரும் வாயிலார் நாயனாரும் வாழ்ந்தனர்.

Continue reading
  1929 Hits
1929 Hits

Madras - River Adyar and Battle of Adyar - 22.10.1746 A.d

அடையாறு

மதராஸின் மற்றொரு ஆறு அடையாறு.
மதராஸின் ஜீவநதி இதுவும் ஆகும் - ஒரு காலத்தில்....
ஆங்கிலேயர் இதையே தம் தெற்கு அரண் என நம்பினர்.

கடலைச் சென்று அடைவதால் ”அடை ஆறு” [வினைத்தொகை] எனலாம்.

தன் கரையில் வாழும் மக்களை அடைகாத்து உய்விப்பதால் ”அடை ஆறு” ஆனது.

நமக்குப் பயன்படாவிட்டாலும் இன்றும் பல பறவைகளுக்கு உறைவிடம் இதன் முகத்வாரம்.

Continue reading
  1688 Hits
1688 Hits

Madras - ''Thames of India'' - River Coovam

கூவம் - ”பாரதத்தின் தேம்ஸ்” என்று ஆங்கிலேயன் புகழ்ந்த நதியின் கதை

 

மதராஸின் பெருமையே அதன் இரண்டு ஆறுகள் தான்.

காரணம் ஆற்றின் கரைகள் தானே நாகரிகத்தின் வளர்ச்சிக் களம்?

வைகைக் கரை - மதுரை

Continue reading
  1897 Hits
1897 Hits

Madras - Buckingham Canal

பக்கிங்ஹேம் கால்வாய்

உலகின் நீளமான கால்வாய்களுள் ஒன்று தென் பாரத தேசத்தின் பக்கிங்ஹம் கால்வாய்.இன்று மதராஸில் துர்நாற்றம் வீசிக் கொண்டு, தன் நிலை குலைந்து, ஏதோ ஒரு சாக்கடை போல் நம்மால் ஆக்கப்பட்டு விட்டதை எண்ணி வெட்கம் கொள்க.

மொத்தம் 796 கிலோமீட்டர் நீளம் ஓடுகிறது இக்கால்வாய். படகுப் போக்குவரத்து இருந்துள்ள இக்கால்வாய் ஆந்திராவின் காக்கினாடாவில் ஆரம்பம் ஆகி, மாமல்லபுரம் தாண்டி மரக்காணம் வரை ஓடுகிறது. கி.பி 1877-1878ல் மிகுந்த பஞ்சம் தென் தேசத்தில் தலைவிரித்து ஆடியபோது ஆங்கிலேயர் மக்களுக்கு தினக்கூலி கொடுத்து ஆங்காங்கே தோண்டி உருவாக்கிய உழைப்பின் சின்னம் இக்கால்வாய். மதராஸ் மாநகரின் முக்கிய பகுதிகள் வழியே ஓடுகிறது இக்கால்வாய். முதலில் ஆங்கிலேயர் இதை ”வட ஆறு - North river'' என்றனர்.கோச்சேன்ஸ் கால்வாய் என்றும் இது அழைக்கப்பட்டுள்ளது.

கி.பி 1801ஆம் ஆண்டில் மதராஸ் பட்டிணம் - என்னூர் வரை தோண்டப்பட்டதாம். துறைமுகப் பயன்பாட்டுக்கே அதிகம் பயன்பட்டது இக்கால்வாய்.
கி.பி 1837ல் ஆந்திராவுக்குள் நுழைந்த கால்வாய், தெற்கில் மரக்காணம் வரை தோண்டப்பட்டுள்ளது. லார்ட் க்ளைவ் தான் இதை பக்கிங்ஹேம் கால்வாய் என்று பெயர் மாற்றினார்.

Continue reading
  1593 Hits
1593 Hits

Madras - First Mayor, Rippon Building and Governor's Raj Bavan

ரிப்பன் மாளிகை - கவர்னர் மாளிகை - மதராஸ் மாநகராட்சி

துபாஷி பேரி திம்மப்பாவின் தம்பி தான் பேரி வெங்கடாத்ரி.இவர் கிண்டியில் மிகப்பெரிய ஆடம்பர விடுதியைக் கட்டினார்.அதுவே இன்றைய கவர்னர் மாளிகை - ராஜ் பவன்.இவர் மூலம் தான் தேசத்தின் மிகப் பழமை மிக்க மதராஸ் கார்ப்பரேஷன் உருவானது.Corporation of Madras - 16.9.1688 A.D, oldest among all other corporations.

மதராஸ் பட்டிணம் வளரும் சூழலில், அதற்கு ஈடாக அதன் வெளியே கருப்பர் நகரமும் வளர்ந்தது.இவற்றின் பராமரிப்புச் செலவுகளை மனதில் எண்ணியும், சில நீதிநெறிகள், சட்டதிட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொருட்டும் அன்றைய கவர்னர் ஸ்ட்ரெயிஷம் மாஸ்டரின் ஆலோசனையின் பெயரில் மாநகராட்சி உருவானது.

30.12.1687ஆம் நாள் இங்கிலாந்து மன்னன் ஜேம்ஸ் மதராஸை மாநகராக உருவாக்கும் அனுமதியை ஏலிஹூ யேலிடம் [யேல் பல்கலைக் கழகம் தோன்ற நிதி உதவி செய்தவர்] அளிக்க,அவர் அதைக் கொண்டு வந்து கோட்டையின் சேர்மேன் சர் ஜோஸியா சைல்ட்டிடம் தர, அடுத்த ஆண்டே மதராஸ் மாநகராட்சி உருவானது.

மதராஸின் முதல் மேயர் ”The worshipful Mayor'' என்று போற்றப்பட்டுள்ளார்.

Continue reading
  1592 Hits
1592 Hits

Madras - Person who seeded for Madras - Dhubaashi Beri Thimmappaa

மதராஸ் உருவாகக் காரணமானவர் - துபாஷி.பேரி திம்மப்பா

மொழி அறிவே மனிதனை உயர்த்திக் காட்டுகிறது.
மொழி மூலம் இன்று வரை உலகில் ப்ரச்சனைகளும் உண்டு, மகிழ்ச்சிகளும் உண்டு.
***
பல மொழி வல்லமை இன்று மிகவும் அவசியம் என்கிறார்கள்.
அன்றும் அது வணிகர்களுக்கு மிக மிக அவசியமாக இருந்துள்ளது.
சங்ககாலத்திலேயே மதுரையிலும் புகாரிலும் பல்மொழி பேசும் மக்கள் கலந்து வாழ்ந்தனர் என்பது இலக்கியங்கள் காட்டும் எதார்த்த உண்மை.
***
சுற்றுலாத் தலங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தவுடன் வியாபாரிகள் அவர்தம் மொழியைப் பேசுவதைக் காண்கிறோம்.
இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழருக்கே வெகுவிரைவில் பல மொழிகள் கற்கும் ஆற்றல் அதிகம், காரணம் நம் மொழிகளில் உள்ள கட்டமைப்பே!
***
அரசியல்வாதிகள் அரசியல் பண்ணாமல் விட்டு இருந்தால் தேசத்தின் பல மொழிகளையும் தமிழன் கற்றிருப்பான்.
***
ஆனால் பலமொழிகள் கற்கும் தமிழனுக்கு அதுவே தன் மொழியை அவ்வப்போது மறக்கும் குணத்தையும் ஏற்படுத்துகிறது.
***
தெலுங்கு நாட்டுக்கு வெகு அருகில் உள்ளது சென்னை. அதனால் தெலுங்கு மக்கள் அதிகம். தமிழகத்தைல் தான் கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர், மொகலாயர்கள், போர்த்துகீஸியர், ஆங்கிலேயர் என எவரும் வந்து போய் உள்ளனர்.அவர்தம் மொழிகளைத் தமிழ் அணைத்துக் கொண்டுள்ளது.
***
கி.பி 16ஆம் நூற்றாண்டில் வியாபாரம் நிமித்தம் நம் ஊர்களுக்கு வருகை தரும் வெளிதேசத்தவர்க்கு மிக முக்கியமான உறவு ”துபாஷி” ஆவார்.
இரண்டு மொழிகள் அறிந்தவர் என்று இதற்குப் பொருள்.

குறிப்பாக ஐரோப்பியர்களை நம் தேசத்து அரசர்களும் வணிகர்களுக்கும் மக்களுக்கும் அறிமுகம் செய்யும் அரும்பெரும் பணியை துபாஷிகள் செய்துள்ளனர். [Translators]

இவர்களின் நாணயத்தின் பேரில் தான் வணிகர் - அரசர் - மக்கள் ஒன்றுபட்டு உயர்ந்துள்ளனர்.ஏமாற்றிய கள்ள துபாஷிகள் பலரும் இருந்தனர்.

துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் personal diray குறிப்பே ஃப்ரெஞ்சின் பாண்டிச்சேரி வரலாற்றின் கண்ணாடி ஆகும்.

Continue reading
  1675 Hits
1675 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries