Madras - 450 years old Darga which blesses many people

மவுண்ட் ரோட் தர்கா...

 

மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சிக்கு அதிரில் சற்று கிழக்கில் மசூதியுடன் கூடிய மிகத் தொன்மையான தர்கா உள்ளது.

மத வேற்றுமை இல்லாமல் மக்கள் வழிபடும் ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் மெக்காவில் இருந்து வந்து, நம்மூர் மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றி, உடற்பிணி தீர்த்து வைத்த ஒரு இஸ்லாமிய மஹானின் ஜீவசமாதி இது. [ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி]

Continue reading
  1482 Hits
1482 Hits

Madras - First telephone communication in the city

மதராஸின் முதல் தொலைப்பேசி...

இன்று கையில் நாம் வைத்துக்கொண்டு உலகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் Selfie phonesக்கு மூதாதையர் க்ரஹாம்பெல்லின் தொலைப்பேசி தான்.

தேசத்தின் முதல் தொலைப்பேசி இங்கிலாந்தின் அனுமதியுடன் ஓரியண்டல் டெலிஃபோன் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் கி.பி 1881, நவம்பர் 11 ஆம் தேதி ஆரம்பித்தது.

பேரிஸ் கார்னர், எர்ரபாலு செட்டித் தெரு, கதவு எண் 37ல் தேசத்தின் முதல் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் செயல்பட்டது.

ஆனால் மதராஸில் வெறும் பதினேழு பேர்தான் இதைப் பயன்படுத்தினர்.

Continue reading
  1547 Hits
1547 Hits

Madras - First post office in city

மதராஸின் முதல் போஸ்ட் ஆபிஸ்

ஒருவருடன் ஒருவர் கடிதம் மூலம் தொடர்பு கொள்வது மிகப் பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.

இன்று நினைத்த மாத்திரத்தில் இணைய தளம் மூலம், அலைப்பேசி மூலம் ஏதோ ஒரு கண்டத்தில் இருக்கும் தோழனை, உறவைப் பார்த்துக் கொண்டே பேசும் நிலைக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.

ஒரு கடிதம் சென்று சேர்ந்து பதில் வருவதற்கே ஓராண்டு ஆன காலமும் வரலாற்றில் உண்டு, அதைக் கற்பனை செய்து பார்க்க இக்கால மக்கள் சற்று சிரமப்படக்கூடும்.

ஒரு வீட்டில் கடிதம் வருவதை எவ்வளவு சிறப்பாகக் கருதினர் என்பதை 1980,90 களில் வாழ்ந்தோர் உணர்வர்.

Continue reading
  1408 Hits
1408 Hits

Madras - Marina Beach

மரீனா கடற்கரை

மதராஸின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று மரீனா கடற்கரை. வருடம் முழுவதும் ஏதொ ஒரு ஊர் மக்கள், சுற்றுலாக் கூட்டம் காலை, பகல், மாலை வேளைகளில் இங்கு இருக்கிறது.ஆதரவற்ற, வீடற்றவர்கள் பலரும் ”வானமே கூரையாக” உறங்குவதும் இங்கு தான்.

பஜ்ஜி, சுண்டல், பூக்கள் விற்றே படித்துப் பட்டம் பெற்றவர்களும் உண்டு.

இன்று எத்தனையோ சிறுவியாபாரிகளுக்குச் சோறு போடும் கடற்கரை இது.

அன்று புனித தாமஸ் கால் வைத்து, ஆன்மீகப் பணியாற்றி, ஜீவசமாதி மேற்கொண்ட சாந்தோம் இக்கடற்கரையின் ஒரு அங்கம் தான்.

Continue reading
  1608 Hits
1608 Hits

Madras - forest department and zoological park in the city

மதராஸ் வனத்துறை மற்றும் முதல் உயிரியல் பூங்கா...

கி.பி 1836ல் மதராஸுக்குக் கப்பல் ஏறி வந்தவர் ஆங்கில மருத்துவர் எட்வர்ட் க்ரீன் பேல்ஃபர். இவரது பெயரிலேயே பசுமை உள்ளது!

இவர் இந்தியா முழுவதும் பயணம் செய்து, தட்பவெப்பம், பருவ மாற்றம், தாவர வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து ஆங்கில அரசுக்கு அளித்தார்.அவரது அறிவுரையின் பேரில் மதராஸ் வனத்துறை உதயம் ஆகிப் பல அரிய வகை மரங்களை வளர்த்து வந்துள்ளது.

மேலும் அவர் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு புலியையும் ஒரு சிறுத்தையையும் கூண்டில் இட்டு மக்களின் பார்வைக்கு வைத்து முதல் மிருகக்காட்சி சாலையை ஆரம்பித்தார்.அதன் பின் கி.பி 1855ல் அது இன்றுள்ள வண்டலூர் தேசிய உயிரியல் பூங்காவாக மலர்ந்தது.

__________________________________________________________________

Continue reading
  1445 Hits
1445 Hits

Madras - first observatory of the city

மதராஸ் வானியல் ஆய்வு நிலையம்...

கி.பி 1787ல் நுங்கம்பாக்கத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரி வாழ்ந்தார்.

அவர் பெயர் வில்லியம் பெட்ரீ.

அவருக்கு இளமையிலேயே வானியல் ஆய்வில் ஆர்வம் அதிகம்.அதன் காரணமாக மதராஸுக்குப் பயணம் ஆகும் முன் தரமான சில தொலைநோக்கிகள், காம்பஸ் போன்ற உபகரணங்களை வாங்கிக்குக் கொண்டே கப்பலில் ஏறினார்.

இரவில் மதராஸின் வானிலையை ஆராய்வதே இவரது பொழுது போக்கு ஆகும்.கம்பெனியின் கப்பல் படையும், சரக்குக் கப்பல்களும் இவரது வழிகாட்டுதலை அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டன.

Continue reading
  1477 Hits
1477 Hits

Madras - first medical college in city, first woman English doctor in world.

மதராஸின் முதல் மருத்துவக் கல்லூரி...

கி.பி 2.2.1835 அன்று மதராஸில் பணியாற்ற அல்லோபதி மருத்துவம் அறிந்த மருத்துவர்களை உருவாக்க ஆங்கிலேய அரசு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன் உள்ள தம் மருத்துவக்கூடத்துடன் இணைந்த சிறிய மருத்துக்கல்விப் பள்ளியையும் உருவாக்கியது. பின்னர் 1.10.1850ல் அது மதராஸ் மெடிக்கல் கல்லூரி ஆனது.

உலகின் முதல் பெண் அல்லோபதி மருத்துவர்...

கி.பி 1875ல் உலக நாடுகள் பெண்களுக்கு மருத்துவக் கல்வியை நிராகரித்த அதே வேளையில் மதராஸ் மருத்துவக் கல்லூரி மேரி ஆன் டெகாம்ப் ஷார்லிப் என்ற பெண்ணை உலகின் முதல் மருத்துவ மாணவியாக அனுமதித்துக் கல்வி தந்தது! இவரை அடுத்தே ரோம் மெடிக்கல் பள்ளியில் மரியா மாண்டிசொரி போராடி அனுமதி பெற்று இத்தாலியின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.

அதற்கு நன்றிக் கடனாகத் தான் அவர் தமிழகத்தில் வாழ்ந்து, இன்று திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா பெண்கள் - குழந்தைகள் மருத்துவமனையை உருவாக்கி அர்ப்பணித்தார், ராணியின் அனுமதியுடன்.செய்ந்நன்றி மறவாத மருத்துவர் வாழ்க!

Continue reading
  1422 Hits
1422 Hits

Madras - first cinema in Madras

மதராஸில் திரைப்படக் கலை....

 

சென்ட்ரலுக்கு அருகில் இருக்கும் அழகிய [இன்று வீணாக்கிக் கொண்டு இருக்கும்] ப்ரம்மாண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில் தான் கி.பி 1897ல் வெண்திரையில் ஒலி இல்லாத மெளனப்படம் அரங்கேறியது.

எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் கப்பல் மூலம் இப்படத்தை வரவழைக்கு நம்மூரில் காட்டினார்.

அவரையே ”கோலிவுட்டின் தந்தை” எனலாமே!

Continue reading
  1505 Hits
1505 Hits

Madras - First book printed in Madras....

மதராஸின் முதல் அச்சகம்....

 

இன்று எப்போது வேண்டுமானாலும் எவ்விடத்திலும் கையில் அலைப்பேசியில் டைப் செய்து அதை உடனே இணையதளத்தில் பல ஆயிரம் பேரிக்கும் தான் எண்ணியதை வெளியிடும் வசதி வந்து விட்டது.

இதற்குக் காரணம் அச்சுத் தொழில் தான்.எந்திரத்தில் மனிதர்கள் உழைத்து உருவேற்றிய எழுத்துக்கள் இன்று டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன.

பாரத தேசத்தின் மொழிகளில் முதலில் அச்சேறியது இனிமைத் தமிழே!

Continue reading
  1479 Hits
1479 Hits

Madras - The very first flight across Madras sky...

மதராஸ் வானில் பறந்த முதல் மனிதர்...

மதராஸில் மவுண்ட் ரோட்டில் கி.பி 1910ல் மிக ப்ரம்மாண்டமான தரமான மேலைதேசத்து உணவகம் ஒன்று இயங்கியது. [அப்போதே மல்டி க்யூஸைன்] வந்துள்ளது தம்பீ....]

அதுவே மதராஸில் செட்டில் ஆகிவிட்ட ஃப்ரெஞ்ச்காரர் டி ஏஞ்சிலி என்பவர் ஆரம்பித்த டி ஏஞ்கிலிஸ் ஆகும். மதராஸின் மிகப் பெரிய உணவகம் இது தான் என்று கூறப்படுகிறது.

அவர் தம் சுய உழைப்பால் மதராஸின் செல்வந்தர்களுள் ஒருவர் ஆனார் என்பதில் ஐயம் இல்லை.

தன் தாய் தேசத்தில் ஆகாய விமானம் இயங்குவதை அறிந்து கொண்ட அவர், அதைப் பற்றிய முக்கியமான தொழில்நுட்பத் தகவல்களைச் சேகரித்தார். பெரம்பூரில் ஆங்கிலேயருக்கு ரயில் பெட்டிகள் செய்யும் சிம்ஸன் கம்பெனியை அனுகினார்.அவரது தகவல்களைக் கொண்டு சிறிய விமானம் தயார் ஆனது.

Continue reading
  1489 Hits
1489 Hits

Madras - Walking in the streets of Madras [inside fort]

மதராஸில் நடக்கும் போது....

கோட்டைக்குள் இன்று ஞாயிற்றுக் கிழமையின் அமைதி. [21.2.201

அந்த அமைதியில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகிறேன்.

கோட்டையில் வடக்கு வாயிலின் வெளியே வந்தால் குப்பையும் புதருமாக இருக்க, அருகில் பல கூரை வீடுகள்.

காலம் காலமாக இவ்விடத்தில் கோட்டையின் சுவருக்கு வெளியே இருப்பதாகச் சொன்னார்கள், ஓ இவர்கள் மூதாதையர் அன்றைய கம்பெனிக்கு நெசவாளராகவோ, வீட்டுப் பணிகளுக்காகவோ, குற்றேவல்களுக்காகவோ வாழ்ந்திருக்கலாம்.

Continue reading
  1462 Hits
1462 Hits

Madras - St.George Fort Museum

St.ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்

21.2.2016
இன்றும் ஜார்ஜ் கோட்டையின் அருங்காட்சியகம் சென்றேன்.
முழுமையாகப் பார்த்தேன்.
மனதை மிகவும் கவர்ந்த விஷயங்கள் பல.
மக்களும் மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய பல பொருட்கள் உள.
நம்மை ஆட்சி செய்தோரின் ஞாபகச் சின்னங்கள்!
***
பீரங்கிகள், ஆயுதங்கள் [துப்பாக்கிகள், வாள், கோடரிகள்], குண்டுகள், எம்டன் கப்பல் வீசிய குண்டு, சீருடைகள், பாராட்டுப் பதக்கங்கள், அரச சின்னங்கள், அதிகாரிகள், இந்திய அரசர்தம் ஓவியங்கள், கொடிகள், சர்ச்சின் பயன்பாட்டுப் பொருட்கள், கி.பி 1640 ஆம் ஆண்டின் பைபிள், ப்ரார்த்தனை நூல், சர்ச் தஸ்தாவேஜுகள், உடைகள், பீங்கான் அழகுப் பொருட்கள், பாத்திரங்கள், நாணயங்கள், கோட்டையின் பரிணாம வரைப்படங்கள், விடுதலை வீரர்களின் பெயர்ப்பட்டியல், கோட்டையில் முதன்முதலில் ஏற்றிய மூவர்ணக்கொடி, ஹிந்து நாள் இதழின் கட்டுரை [ஆகஸ்ட் 15, 1947] எனப் பல பொருட்களைக் காணமுடிந்தது.

கார்ன் வாலிஸின் மிக ப்ரம்மாண்ட சிலை, அவரிடம் திப்பு சுல்தானின் இரு பால்யப் பிள்ளைகளும் பிணைக்கைதிகளாகத் தரப்படும் அவலத்தைக் கல்லில் காட்டியுள்ளனர்.

மரீனா - ஃப்ரெஞ்சின் ”பாரத மாதா” Lady of France - என்று கூறலாம். அவள் விடுதலை மற்றும் பகுத்தறிவின் அடையாளம்.அவளது அழகிய சிலையும் உள்ளது.

கோட்டையின் வரலாற்றை எளிய முறையில் இருமொழிகளிலும் தந்துள்ளனர்.பார்வை அற்றவர்க்கு ப்ரெயில் முறையில் தகவல் தரும் உதவியும் இருக்கிறது.பராமரிப்பு மிகவும் தூய்மையாக உள்ளது.

Continue reading
  1524 Hits
1524 Hits

Madras - first Islamic women educational centers

மதராஸின் முதல் இஸ்லாமிய பெண்கள் கல்வி நிலையம்

வாலாஜா நவாப் குலாம் முகமது கவுஸ்.
இவரே கடைசி நவாப்.

இவரது துணைவியார் ஸ்ரீமதி பேகம் அஸீமா உனிசா.
இவர் காலத்துக்கு ஏற்ப பெண்கள் பரிணமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்.
குறிப்பாக இஸ்லாமிய பெண்களும் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்.
அதன் விளைவு?
***
சேப்பாக்கம் மாளிகையில் இவர் முதல் ஆங்கிலப் பள்ளியை இஸ்லாமிய பெண்களுக்கு ஆரம்பித்தார். அதுவே மதரஸா - இ - ஆஸாம் பள்ளி.
அதை அவர் மவுண்ட் ரோட்டுக்கு மாற்றினார்.

மவுண்ட் ரோட்டில் தம் கணவர் தனக்காக விட்டுச் சென்ற மிகப் பெரிய நிலப்பகுதியில் அவரது மாளிகை இருந்தது.அதன் பெயர் உம்தா பாக்.

கி.பி 1901 ஆம் ஆண்டில் மதராஸில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கல்வியின் தேவை வலியுறுத்தப்பட்டது.

Continue reading
  1556 Hits
1556 Hits

Madras - Queen Marys College - 1st European college for Tamil women

தமிழகத்தின் முதல் பெண்கள் கல்லூரி - ராணி மேரிக் கல்லூரி

கல்வியில் சிறந்த தமிழ் தேசத்தில் முற்காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.
மதுரை மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் 49 பெண் புலவர்கள் இருந்த சான்று போதுமானது!
***
ஆங்கிலக் கல்வி மூலம் பட்டம் பெற்று உயரும் முறை பெண்களுக்குக் கி.பி 1910ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது.அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.

மஹாகவி பாரதியார் இதற்கு ஒரு முக்கியமான உந்துதல் சக்தி என்பதை இக்காலத்துப் பெண்கள் மறக்கவே கூடாது.

இன்று நம்மூர்ப் பெண்கள் ஊர் விட்டு, தேசம் விட்டு வெளியேறி மிக உயர்ந்த வேலைகள் மூலம் பொருளீட்டும் கல்வியைக் கொடுக்கும் எண்ணம் 1910ஆம் ஆண்டில் விதைக்கப் பட்டதே!

கி.பி 1900ல் கர்னல் ஃப்ரான்ஸிஸ் கேப்பர் மரீனாவின் எதிர்ப்புறம் மிகப்பெரிய தோட்ட வீட்டைக் கட்டினார்.ஆனால் அவர் அதை விற்றுவிட, அவ்வீட்டில் கி.பி 1914ல் தமிழகத்தின் முதல் பெண்கள் கல்லூரி [ஆங்கில வழிக் கல்வி] ஆரம்பம் ஆனது.

Continue reading
  1543 Hits
1543 Hits

Madras - Luz corner , Luz Church-1st European Church in South

மயிலாப்பூர் லஸ் சர்ச்

லஸ் கார்னர்

சென்னை வாசிகளுக்கு மயிலாப்பூர் பகுதியில் மிகவும் ப்ரபலமான போக்குவரத்து நெரிச்சல் மிக்க இடம்.

ஆனால் இதை எல்லாம் தாண்டி லஸ் சர்ச் அமைதியாகத் தன் பெருமையைத் தன்னடக்கத்துடன் உள் வைத்து நிற்கிறது.

தமிழகத்திலேயே இதையே மிக மூத்த ஐரோப்பிய கலைப்பாணி சர்ச் என்கிறார்கள்.

Continue reading
  1614 Hits
1614 Hits

Madras - 1000 lights Mosque - Mount Road

ஆயிரம் விளக்கு மசூதி

மதராஸின் மிக முக்கியமான இடங்களுள் ஒன்று மவுண்ட் ரோட்டில் உள்ள 1000 LIGHTS MOSQUE - ஆயிரம் விளக்கு மசூதி.

இது ஒரு சட்டசபைத் தொகுதியும் கூட.

கி.பி 1785ல் ஆங்கிலேயரிடம் இருந்த இப்பகுதி முழுக்க அடர்ந்த மரங்கள் கொண்டதாக இருந்துள்ளது.

அதை வாலாஜா நவாப் அதீத விலைகொடுத்து வாங்கினார்.

Continue reading
  1676 Hits
1676 Hits

Madras - Parry's corner

பேரிஸ் கார்னர்

மதராஸின் மிக ப்ரபலமான இடம் பாரி முனை, மன்னிக்கவும் இதன் பெயர் பேரிஸ் கார்னர்.

இன்றைய வடசென்னையின் துறைமுகத்தின் எதிரில் ப்ராட் வே [நேதாஜி சுபாஷ் சந்த்ர போஸ் சாலை] ஆரம்பம் ஆகும் முனையில் வலது புறம் அழகிய பேரி கட்டிடம் உள்ளது.

1780 ஆம் ஆண்டில் வேல்ஸ் தேசத்தில் இருந்து மதராஸுக்கு வந்த தாமஸ் பேரி இந்த உரம் நிறுவனத்தை ஆரம்பித்தார்[ ஜூலை 22 ஆம் நாள், 1788 ]. தென் தேசத்தின் மண் வளத்தைக் கொள்ளை கொண்ட செயற்கை உரத்துக்கு வரவேற்பு தந்த நாள்.

தென் பாரதத்தில் அதிக அளவில் செயற்கை உரத்தை அறிமுகம் செய்து மண்ணைக் கெடுத்த மகத்தான பெருமை இவருக்கே உண்டு!

Continue reading
  1630 Hits
1630 Hits

Madras - St.George Cathedral - 1815 A.D

கத்தீட்ரல் சாலையில்....[St.George Church] - 1815 A.D

மதராஸின் கோட்டையுள் வாழ்ந்த கவர்னர்களும் வைஸ்ராய்களும் உயர்குடி ஆங்கில மக்களும், நம்மூர் மதம் மாறிய அன்பர்களும் கூடும், ப்ரார்த்திக்கும் ப்ரம்மாண்டமான சர்ச் தான் இன்று ஜெமினி பாலத்தின் கீழ் அமெரிக்கன் தூதரகத்தின் அருகில் இருக்கும் புனித ஜார்ஜ் சர்ச்.

இதையே ”கத்தீட்ரல்” என்கிறார்கள். இதனால் இச்சாலை கத்தீட்ரல் சாலை ஆனது.

சுமார் 201 ஆண்டுகள் வயதான சர்ச் இது.

அக்காலத்தின் மிகப்பெரிய லாட்டரிப் பரிசுத் தொகையைக் கொண்டு எழுப்பப் பட்ட சர்ச் இது.

Continue reading
  1565 Hits
1565 Hits

Madras - St.Mary's Church - 1st English Church in Asia

புனித மேரி தேவாலயம் - ஆஸியாவின் முதல் ஆங்கிலப் பாணி சர்ச்

செப்டம்பர் மாதம் நாள், 1662 வருடம்
எட்வர்ட் விண்டர் மதராஸ் கோட்டையின் உயர் அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றார்.
***
உணவுக் கூடத்தில் தம் சகாக்கள் ப்ரார்த்தனை செய்வதைக் கண்டார், மனம் பொறுக்கவில்லை.

அவரது உத்தரவின் பேரில் மரத்தால் ஆன சிறிய அழகிய தொழுகை இடமும் மருத்துவமனையும் கட்டப்பட்டன.

அந்த தொழுகைக் கூடமே புனித மேரி சர்ச்சின் விதை ஆகும்.

அவ்விடமே புதன் - சனிக் கிழமைகளில் கவனர் மற்றும் பிற தலைவர்கள் கூடி முக்கிய வழக்கை விசாரிக்கும் இடமும் ஆயிற்று.

Continue reading
  1620 Hits
1620 Hits

Madras - very first TRAM service for transport - 1877 A.D

மதராஸ் ட்ராம்

இன்று கொல்கத்தா மாநகரத்தில் மட்டுமே காணப்படும் ட்ராம் போக்குவரத்து முதன்முதலில் மெட்ராஸில் தான் [1877 A.D] அறிமுகம் ஆனதாம்.

முதன்முதலில் குதிரைகள் இழுக்கும் சிறிய ட்ராம்கள் இருந்துள்ளன.

பின்னர் 7.5.1895 அன்று முதல் மின்சார ட்ராம் வண்டி மதராஸில் ஓடியதாம்.அதன் பின் தான் லண்டனில் மின்சார ட்ராம் வந்துள்ளது.

சென்ட்ரல், புரசைவாக்கம், மயிலை, திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோட், ராயபேட்டை, பேரிஸ் கார்னர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளை இப்போக்குவரத்து இணைத்துள்ளது.

Continue reading
  1440 Hits
1440 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries