Madras - Egmore Railway station - 1908 A.D

எக்மோர் ரயில் நிலையம்

மதராஸின் சென்ட்ரல் ரயில் நிலையம் உருவான பின்னும் தேசத்தின் பல பகுதிகளை ரயில் மூலம் இணைக்க வேண்டிய கட்டாயம் ஆங்கில அரசுக்கு ஏற்பட்டது. அதற்கான ஒரு திட்டம் தீட்டினர்.

எழும்பூரில் எக்மோர் ரீடெளட் என்ற சிறிய கோட்டை ஒன்று இருந்தது.அது ஆங்கிலேயரின் பயன்பாட்டிலும் இருந்தது.ஆனால் அவ்விடம் Dr.பால் ஏண்டி என்பவரது சொந்த நிலம் ஆகும்.

முதலில் தன் சொத்தை விற்க மறுத்த ஏண்டி ரூ.100,000 [அடேயப்பா!] தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டுக்கொடுத்த இடத்தில் கி.பி 1905ல் திட்டம் உருவாகி கி.பி 1908ல் ரயில்வே நிலையம் உருவானது.

தலை சிறந்த கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிஸ் ஹோம் மாதிரி வரைப்படம் தயாரிக்க, திரு.சாமிநாதப்பிள்ளை இதைக் கட்டினார். ரூ.1.7 மில்லியன் செலவனாதாம், காரணம் மிக உயர்தர சிற்றுண்டிச் சாலை, ஓய்வு அறைகள், ரயிலின் பெட்டி அருகிலேயே கார் நிற்கும் வசதி என உயர்தர வசதிகள் இருந்தன. 11.6.1908ல் மக்கள் பயன்பாட்டுக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தது.

Continue reading
  1560 Hits
1560 Hits

Madras - Kings of Presidency College

Kings of Presidency College --- மதராஸ் ப்ரெஸிடென்ஸிக் கல்லூரி...

 

கி.பி 1820ல் மதராஸின் தலைசிறந்த, மக்கள் பெரிதும் மதித்த ஸ்ரீமான் தாமஸ் மன்ரோ மதராஸின் கல்விப் பணிகளில் ஆங்கில அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆணித்தரமான கொள்கையை முன்வைத்தார்.அவருக்குப் பின் கி.பி 1840ல் தான் எல்ஃபின்  ஸ்டோன் கவனராக வந்த போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரை இந்தியாவுக்கு வரவழைத்தார்.அவர் பெயர் E.B . போவெல்.இவரை முதல்வராகக் கொண்டு கல்வி நிறுவனம் அமைக்க ஆங்கிலேயர் திட்டமிட்டனர்.அவரும் மும்பை வந்தார், ஆனால் பல காரணங்களால் அவரால் பயணத்தைத் தொடர இயலாமல் போனது.

இதனால் ஆங்கிலேயர் கூப்பர் என்ற பேராசிரியரை கொல்கத்தா ஹூக்லி கல்லூரியில் இருந்து மதராஸுக்கு அழைத்தனர், அவரும் மகிழ்ச்சியுடன் வந்தார்.

அவரது தலைமையில் எழும்பூர் பகுதியில் எடின்பர்க் ஹோம் என்ற வாடகை வீட்டில் ப்ரெஸிடென்ஸி பள்ளி 15.10.1840ல் தொடங்கப்பட்டது.மதிப்பு மிக்க மதராஸ் பல்கலைக்கழகத்து முன் தோன்றிய பெருமை ப்ரெஸிடென்ஸிக் கல்லூரிக்கு உண்டு.

Continue reading
  1629 Hits
1629 Hits

Madras - Armenian Church and Saidapettai Adyar bridge

பேரிஸ் கார்னர் ஆர்மீனிய சர்ச்சும் - தங்கப்பேழையில் தாய் நாடு சென்ற இதயமும்...ஆர்மீனியர்கள் மேற்கத்திய தேசத்தில் இருந்து வியாபாரம் செய்ய கொல்கத்தா வந்தனர்.அதன் பின் மதராஸின் பெருமையை உணர்ந்து வியாபாரத்தை வ்ருத்தி செய்ய இம்மண்ணில் கால் வைத்தனர்.அவர்கள் வாழ்ந்த பகுதி தான் இன்றும் பேரிஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் தெரு.மிகுந்த மதப்பற்றுள்ள இவர்கள் மேரியின் மீது மிக்க பக்தி கொண்டதன் பேரில் கி.பி 1712ல் மிக அழகிய சர்ச் ஒன்றை எழுப்ப அதை ஆங்கிலேயர் இடித்தனராம்.ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் மிக உயர்ந்த கட்டிடம் இருப்பதை விரும்பவில்லையாம். மீண்டும் கட்டிய சர்ச்சைக் கி.பி 1746ல் ஃப்ரெஞ்ச் படையினர் இடித்தனர்.அதன்பின் மீண்டும் கி.பி 1772ல் மீண்டும் ஒரு அழகிய சர்ச் அமைக்கப் பட்டது.அவ்விடம் ஆகா ஆஷ்மீர் என்ற பணக்கார வியாபாரின் மனைவின் கல்லறைத் தோட்டம் ஆகும்.அதில் அக்காலம் முதல் வாழ்ந்த பல ஆர்மீனியர்தம் கல்லறைகள் உள்ளன.மிகப் புராதானமான 6 மணிகள் [ஒவ்வொன்றும் 150 கிலோ எடை கொண்டவை], மேரி அன்னை சிலை ஆகியன உள.தென் தேசத்தின் மிகத் தொன்மையான சர்ச்சுகளில் ஒன்று பேரில் கார்னர் ஆர்மீனியன் புனித மேரி சர்ச்.சைதைப் பாலம்...இன்று காணும் சைதாப்பேட்டை அடையாற்றுப் பாலத்தை கோஜா பெத்ரோஸ் உஸ்கான் என்ற உயர்குடி ஆர்மீனிய வணிகர்.அவர் புனித தாமஸ் த்யானம் செய்த சைதைச் சின்னமலை சர்ச் பகுதிக்கு ஆற்றைக் கடந்து மக்கள் எளிதில் செல்ல பாலம் கட்டினாராம்.மேலும் அவரே புனித தாமஸ் மலையில் 164 கருங்கற் படிகளையும் அமைத்துத் திருப்பணி மேற்கொண்டுள்ளார்.இவரது ஆசைக்கு ஏற்ப இவர் இறந்ததும் இதயம் தங்கப்பேழையுள் வைக்கப்பட்டு அவரது தாய்மண்ணுக்கு அனுப்பப் பட்டுள்ளது!
Continue reading
  1639 Hits
1639 Hits

Madras - Very first Indian starts first college

தென்னிந்தியாவின் முதல் இந்தியரின் கல்லூரி...

 

துபாஷி

இரண்டு மொழிகள் கற்றவன் - இதன் பொருள்.

ஆங்கிலேயருக்கும் நாயக்க மன்னர்களுக்கும் இடையில் தெலுங்கும் - ஆங்கிலமும் அறிந்தவர்கள் இடைத்தரகர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.

Continue reading
  1713 Hits
1713 Hits

Madras - very first Western college in South India - Madras Christian College [MCC]

தென் இந்தியாவின் முதல் மேற்கத்திய கல்லூரி - மெட்ராஸ் கிறிஸ்டியன் காலெஜ் - MCC

 

கி.பி 1835.

ஸ்காட்லேண்ட் கிறிஸ்துவப் பாதிரிகள் இருவர் மதத்தைப் பரப்பும் நோக்குடன் மதராஸ் வந்தனர்.

அவர்கள் தான் ஜார்ஜ் லாரி மற்றும் மேத்யூ போவி.

Continue reading
  1665 Hits
1665 Hits

Madras - The very first English school in India

தேசத்தின் முதல் ஆங்கிலப் பள்ளிக்கூடம்...

கி.பி 1677ஆம் ஆண்டு வேளையில் ஜார்ஜ் கோட்டையின் மக்கள் தொகை பெருகியது.ஆம் வியாபாரம் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் இங்கிலாந்தில் இருந்து பல குடும்பங்கள் மதராஸ் வந்தன [கம்பெனி சார்பாக]

அக்குடும்பங்களில் உள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமியரின் கல்வியைப் பற்றிய பெரிய வினா எழுப்பப் பட்ட போது, கிறிஸ்துவ மதக் கல்வியை ஆங்கிலம் மூலம் போதிக்க முன்வந்தார் அப்போதைய பாதிரியார் ரால்ஃப் ஒர்டே. இவர் புனித மேரி சர்ச்சின் ப்ரதான பாதிரியார்.

அவரது மேற்பார்வையில் அவரின் கீழ் ஆங்கிலேயக் குழந்தைகள், சிறார் - சிறுமியர் சர்ச்சிலேயே பாடம் கற்றனர்.40 ஆண்டுகள் கல்வி என்பது இப்படித் தான் இருந்துள்ளது.அடிப்படைக் கணிதம், அறிவியலுடன் ப்ரதானமாக கிறிஸ்துவம் கற்பிக்கப் பட்டது.

1677ல் பாதிரியார் வில்லியம்ஸ் ஸ்டீவன்ஸன் கல்வியில் சில மாற்றங்கள் கொண்டு வந்தார்.பல பொதுப்பாடங்கள் ஆங்கிலம் மூலம் அறிமுகம் ஆயின.

Continue reading
  1587 Hits
1587 Hits

Madras - The very first boarding school in India

தேசத்தின் முதல் போர்டிங் ஸ்கூல்...

கி.பி 1790

மதராஸின் கருப்பர் நகர மக்கள் அந்த மே மாதத்தின் காலையில் சாலைகளில் வந்த போது பல இடங்களில் அந்த அதிசய விளம்பரத்தைப் பார்த்தனர்.

இரவோடு இரவாக விளம்பரம் செய்து காலையில் மக்களை ஈர்ப்பது ஒன்றும் புதியது அல்ல!

அது தான் ஆங்கிலக் கல்வியைக் கற்றுத் தரும் ஒரு பள்ளியின் விளம்பரம்.

Continue reading
  1649 Hits
1649 Hits

Madras - Very first pipe line for drinking water in India - 7 wells

ஏழு கிணறு - 7 Wells

கி.பி 1772ஆம் ஆண்டில்  ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னைப் பட்டிண வாசிகள் தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதியுற்றனர்.அதற்குத் தக்க தீர்வைக் காண முற்பட்டவர் கேப்டன் பேகர்.இவர் ஒரு பொறியாளர்.

அவரது தலைமையின் கீழ் இன்றைய மின்ட் பகுதியில் பத்து ஆழ் கிணறுகள் தோண்டப் பட்டன. ஏழில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைத்ததாம்.

அவற்றில் இருந்து மர ஏற்றம் மூலம் தண்ணீர் இரைக்கப் பட்டது.அதை நிலத்தடி சுடுமண் குழாய்கள் மூலம் ஊருக்குள்ளும் ஜார்ஜ் கோட்டைக்குள்ளும் கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் வீராசாமித் தெருவில் தான் அருட்பெருஞ்சோதி வள்ளலார் வாழ்ந்த வீடு இன்றும் உள்ளது.இன்று இப்பகுதி ”வள்ளலார் நகர்” எனப்படும்.

Continue reading
  1591 Hits
1591 Hits

Madras - Victoria Public Hall

விக்டோரியா ஹால் எனப்படும் மதராஸின் டவுன் ஹால்

 

இங்கிலாந்து மஹாராணி விக்டோரியா பாரத தேசத்தின் ஆளும் அதிகாரியாகி ஐம்பது ஆண்டுகள் முடிந்த பொன்விழாவை ஒட்டி எழுப்பப் பட்டதே இன்று ரிப்பன் மற்றும் சென்ட்ரல் நடுவில் அழகாக கம்பீரமாக நிற்கும் விக்டோரியா தவுன் ஹால் கட்டிடம்.

ஜார்ஜ் டவுன் பச்சையப்பன் கட்டிடத்தில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் மதராஸின் முக்கிய அரசியல், வணிக, உயர் சமூஹ ப்ரமுகர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் சுமார் முப்பது பேர் சேர்ந்து பார்க் டவுன் நிலத்தில் பணம் முதலீடு செய்து எழுப்பிய மாளிகை தான் இது.

17.12.1883 அன்று ஒரு தென்னாட்டின் சிற்றரசக் குடும்பம் மூலம் அடிக்கல் நடப்பட்டது.

Continue reading
  1723 Hits
1723 Hits

Madras - Central Railway Station

Central railway station - சென்ட்ரல் ரயில்வே நிலையம்

சென்னை என்றவுடன் பலரது கண் முன் வருவது அழகிய சிவப்பான தேவாலம் போன்ற அமைப்புள்ள சென்ட்ரல் ரயில் நிலையம்.1873ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நான்கு ப்ளாட்ஃபார்முடன் கூடிய இவ்விடத்தை உருவாக்கினர். ஆனால் சில குறிப்புகள் 1900ஆம் ஆண்டில் இக்கட்டிடம் முடிவடைந்ததாகக் கூறும்.மெட்ராஸ் - தென் மாராட்டா ரயில்வே என்பதே ஆரம்ப காலப் பெயராம்.

1931 ஆம் ஆண்டில் ரயில் நிலையத்தில் மின் வசதி செய்யப் பட்டது.

ஜார்ஜ் ஹார்டிங் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் இதை வடிவமைத்தார்.

இன்று ஒரு நாளுக்கு 3,50,000 பயணிகள் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகிறார்களாம்.

Continue reading
  1593 Hits
1593 Hits

Madras - Southern Railway Head Office Building

Southern Railway Office - தென்னக ரயில் வே அலுவலகக் கட்டிடம்

 

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் வால் டாக்ஸ் சாலை ஒட்டி அமைகிறது மிக அழகியக் கட்டிடம். அதில் பழங்காலத்துப் புகைவண்டி என்ஜின்கள் 2 காட்சிக்கு இக்கால மக்களுக்கு உள்ளன.

சென்னை மற்றும் தென் பாரதத்தின் பல இடங்களுமான ரயில் போக்குவரத்தைப் இரண்டு தனியார் ரயில் நிறுவனங்கள் மேற்கொண்டன.அவை அனைத்தும் ராயபுரத்தில் இருந்து தான் செயல் பட்டன.ஆனால் பல சிக்கல்களுக்கு முடிவு காணும் வகையில் ஒரே நிறுவனம் ஆனது 1908ஆம் ஆண்டில் தான். அதுவே இன்றைய தென்னக ரயில்வே.

The great Indian railway - 1853 [England] மற்றும் Carnatic railway ஆகிய இரு நிறுவனங்களும் சுமார் 3000 மைல் தொலைவுக்கு ரயில் போக்குவரத்தைத் தென் தேசத்தில் அறிமுகம் செய்தன.

Continue reading
  1670 Hits
1670 Hits

Madras - First railway station in South India - Royapuram

தென் பாரதத்தின் முதல் ரயில் நிலையம் - ராயபுரம்

 

மதராஸில் மிக முக்கியமான பழைய பகுதிகளில் ஒன்று வடசென்னையில் உள்ள ராயபுரம்.

அதில் தான் தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதை அமைக்கப் பட்டது.

தேசத்தின் முதல் ரயில் போக்குவரத்து மும்பையில் ஆரம்பம் ஆனது.

Continue reading
  1627 Hits
1627 Hits

Sendurai UNI5 center report - Guest visit - February 2016

 

Energy

Bamboo - objects - Sen

Kuppai meni keerai - medicinal herb - CBE

Real object

Continue reading
  1971 Hits
1971 Hits

Madras - Ice house alas Vivekanandha House

ஐஸ் ஹவுஸ் எனப்படும் விவேகானந்தர் இல்லம்

 

மரீனா கடற்கரையில் இருக்கும் ஒரு அழகான கட்டிடம் தான் ஐஸ் ஹவுஸ்.இதை இன்று மக்கள் வி.இல்லம் அதாவது விவேகானந்தர் இல்லம் என்கிறார்கள். இன்று இது ராமக்ருஷ்ண மடத்தின் செயல்பாட்டு ஸ்தலமாக உள்ளது.

1749ல் மீண்டும் மதராஸை ஆங்கிலேயர் ஆளத் தொடங்கிய போது, அமேரிக்காவில் ட்யூடர் என்பவர் பாஸ்டன் நகரில் உறைபனிக் கட்டிடகளை விற்பனை செய்வதை அறிந்தனர் [Tudor ice company].மதராஸின் கொடுமையான வெப்பத்திக்கு வடிகால் தேடிய லண்டன் காரர்கள் ட்யூடரை மதராஸிலும் வாணிபம் செய்ய ஊக்குவித்தனர்.கொல்கத்தாவில் தன் ஐஸ் கம்பெனியை நடத்திய அவர் மதராஸில் இன்று இருக்கும் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தான் தன் உறைபனி மூட்டைகளை மரத்தூளுடன் கலந்து சேமித்து வைத்து வியாபாரம் செய்தார்.அதனால் இவ்விடம் ”ஐஸ் ஹவுஸ்” ஆனது.

ட்யூடரை மதராஸுக்கு அழைத்து வந்தவர் கம்பெனியின் அலுவலர்களில் ஒருவரான ஆண்ட்ரூ பான்க்ராஃப்ட்.

Continue reading
  1960 Hits
1960 Hits

Madras - Wall Tax Road's history at its base....

வால் டேக்ஸ் ரோட்

1.9.1746

அதிகாலை நேரம், சாந்தோம் வழியாக சுமார் 600 வீரர்களுடன் ஃப்ரெஞ்ச் அதிகாரி டி லா போர்டனாயிஸ் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குள் நுழைந்து கொண்டனர். அதன் பின் ஜார்ஜ் கோட்டை மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அப்போது கிழக்கு இந்தியக் கம்பெனியின் போர்க் கப்பல்கள் கடலில் இல்லை.

தொடர்ந்து அவர்கள் கோட்டைமீதும் கறுப்பர் நகரம் எனப்படும் சென்னை மீதும் தாக்குதல் நடத்தினர்.ஊரையே காலி செய்யும் அளவுக்குத் தாக்குதல் நடந்தது.ஊர் சீர் கெட்டது. மேலும் கப்பல் மூலம் பீரங்கித் தாக்குதலும் நடந்தது. அதனால் ஆங்கில கவனர் பத்தாம் தேதி மதியம் கோட்டையை விட்டு வெளியேறி, தன் வாளை ஃப்ரெஞ்சிடம் தந்தார்.

கோட்டைக்குள் புகுந்து அனைவரையும் கைது செய்து, பல பொருள்களையும் கொள்ளை கொண்டு புதுவைக்குத் திருபியது ஃப்ரெஞ்ச் படை.சுமார் மூன்று ஆண்டுக் காலம் ஜார்ஜ் கோட்டையில் ஃப்ரெஞ்ச் கொடியே பறந்தது.அதன் பின் 1749ல் ஆங்கிலேயர் ஒரு மாபெரும் தாக்குதல் நடத்தி மீண்டும் கோட்டையைப் பிடித்தனர்.

Continue reading
  1759 Hits
1759 Hits

Madras - Naphier Bridge across koovam river

நேஃபியர் பாலம்

1819ல் ஸ்காட்லேண்டில் பிறந்த ஃப்ரேன்ஸிஸ் நேஃபியர் பல மொழிகளை எளிதில் க்ரஹித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.உயர்ந்த படிப்பு படிக்கா விடினும் அவரது சீரும் ஒழுக்கமும் நாணயமும் லண்டனை, அவரை மதராஸின் கவனர் ஜென்ரலாக நியமிக்க வைத்தது.[1866 - 1872 A.D]

பாவம் அவர் காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மிகக் கொடுமையான பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடின.

அவரது தோழி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேர்ளின் அறிவுரைப் படி அவர் மக்களுக்குப் பசி தீர்க்க வழி செய்தார்.

கூவம் ஆற்றின் முகத்வாரத்தின் அருகில் இருந்த நரி மேடு என்ற மணல் பாங்கான மேட்டை அகற்றினார், அம்மணல் கொண்டு சமன் செய்யப்பட்ட ஊரே மண்ணடி.

Continue reading
  1668 Hits
1668 Hits

Madras - St.Thomas Mount - a sign for acceptance by India

St.Thomas Mount - பரங்கி மலை

 

கி.பி 52ல் பாரத தேசத்தின் வடபகுதிக்கு வந்தார் ஏசுவின் மாணவருள் ஒருவரான புனித தாமஸ்.பின்னர் அவர் சேர தேசத்தின் தலைநகர் [இக்காலக் கேரளத்தின் கொடுங்கல்லூர்] வந்து மன்னனின் ஆதரவுடன் ஆன்மீகப் பணி செய்தார், மக்களின் மரியாதையைப் பெற்றார்.

அதன் பின்னர் அவர் தொண்டை தேசத்தின் துறைமுகப் பட்டிணமான திருமயிலைக்கு வருகிறார்.அங்கிருந்து ஆன்மீகப் பணியாற்றினார்.சைதைக்கு அருகில் உள்ள சின்னமலை மற்றும் பரங்கி மலைப்பகுதியில் அடிக்கடி தாமஸ் தவம் செய்வது வழக்கம், மக்களையும் அன்றைய ஆன்மீக அன்பர்களையும் பார்ப்பதும் வழக்கம்.

பரங்கி மலையில் அவர் பாரதக் கலாச்சாரத்தின் அடிப்படையில் புனித சிலுவையை வடிவமைத்தார்.அதைச் சாதி மத பேதம் இன்றி மக்கள் வணங்கினர் என்று கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டின் பயணிகள் குறிப்புகள் கூறும்.

Continue reading
  1760 Hits
1760 Hits

Madras - Why it is called as ''Mount road'' ?

மவுண்ட் ரோட்

பாரத தேசத்தின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று சென்னையின் அண்ணா சாலை. அதன் பெயர் மவுண்ட் ரோட். மவுண்ட் பேட்டனின் பெயரால் அது வழங்கியது என்பதில் ஏற்பு இல்லை.

கி.பி 52ல் பாரத தேசத்தின் தமிழத்துக்கு வந்தார் ஏசுவின் மாணவர் புனித தாமஸ்.அவர் மயிலையில் இருந்து ஆன்மீகப் பணியாற்றினார்.சைதைச் சின்னமலையிலும் பரங்கி மலையிலும் அவர் தவறாமல் பல முறை ஆன்மீகப் பணிகளைச் செய்துள்ளார்.

பரங்கிமலை தான் செயின்ட் தாமஸ் மவுண்ட். அன்றைய மதராஸப் பட்டிணத்தின் கடற்கரையில் இருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இம்மலையை அடையக் காலம் காலமாக மக்கள் பயன்படுத்திய நீண்ட சாலை தான் ஆங்கிலேயரால் ”மவுண்ட் ரோட்” எனப்பட்டது.

Continue reading
  1688 Hits
1688 Hits

Madras - Adayar Elliots Beach and Kaj Schmith

அடையாறு எலியட்ஸ் கடற்கரை

சென்னை மாநகரில் அடையாற்றில் உள்ள எலியட்ஸ் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது.தற்காலத்தில் அப்பகுதியில் தான் வேளாங்கண்ணி தேவாலயம், அஷ்டலக்ஷ்மி கோயில் மற்றும் அறுபடை வீடு முருகன் கோயில்கள் அமைந்துள்ளன. மேலும் அடிக்கடி பல கண்காட்சிகளும், ரோரல் ஸ்கேட்டிங் பயிற்சியும், களரிப் பயிற்சியும் இப்பகுதியில் ஏற்படுவதைக் காண்க.

கலாக்ஷேத்ரா, பெசன்ட் நகர், சாஸ்த்ரி நகர், ஆல்காட் பங்களா, தியோஸோஃபிகல் அமைப்பு ஆகியன அடையாறு கடல் ஓரம் அமைகின்றன.

ஹ்யூ எலியட்ஸ் - இவர் இந்தியாவின் கவனர் ஜென்ரல் லார்ட் மிண்ட்டோவின் தம்பி. இவர் மதராஸின் கவனராக இருந்தவர் [1812 - 1820 A.D].

இவர் இன்றைய அடையாறு கடற்கரையை ஒட்டிய பகுதியில் குடியிருந்தார்.அவரது மகன் எட்வேர்ட் எலியட்ஸ்.அவர் அடையாற்றுப் பகுதி மக்களுடன் வெகு இயல்பாகப் பழகினார், பல நன்மைகள் செய்தார்.ஆனால் பாவம் அவர் தன் 28வது வயதிலேயே இறந்தார்.

Continue reading
  1677 Hits
1677 Hits

Diary writing in UNI5 centers - February 2016

February

 

26,29th February condensed observation report from both centers: One of the good reports.

 

Energy

Continue reading
  1903 Hits
1903 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries