Day to day practical life with Buddha
Sakthi Foundation
Buddism for today
Written on January 1st, 2015 the day we came back from Singapore, to feel the impact of Buddism in Eastern world.
மனதில் எழும் ஆசைகளை கவனிக்கவும்.அவை நம்முடைய, சமூஹ நலனுக்காக வழி வகுக்கிறதா என்று காண்க.இல்லையேல் அவ்வாசைகளை மீண்டு வருக.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.நம்முடைய கஷ்டங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் நாமே காரணம்.
எக்காரணம் கொண்டு பிற உயிர்களையும் பிற மனிதர்களையும் எண்ணம், வார்த்தை, செயலால் துன்புறுத்த வேண்டாம்.
புத்தம் - குரு, சங்கம் - குருவின் அடியார்கள் கூட்டணி, தர்மம் - அவர்கள் மூலம் என்ன வாழ்க்கைக்கு சொல்லப் படுகிறது?
குருவின் கீழ் ஞானம் பெற்ற அவரது அடியார்கள் அந்த ஆதிகுரு உலகிற்குச் சொன்ன உண்மைப் பொருளை மக்களுக்கு எடுத்துக் கூறி வழிநடத்துதல் மிக மிக முக்கியம்.
அதுவே தர்மம் - வாழ்க்கையைப் பற்றிய சத்தியம். [மனதின் தூய்மை, சமூஹத்திற்குப் பயனுள்ளவனாக இரு, உன் துன்பத்துக்கு என்ன காரணம் என்று யோசி]
தர்மத்தை உலகில் யார் வேண்டுமானாலும் உணர்ந்து செயல்படுத்த முடியும்.
கண்மூடித் தனமான சடங்குகளைக் கைவிட்டு, பகுத்தறிவால் உண்மையை உணர்ந்து அவற்றை மேற்கொள்க.
உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டும்.அதற்கு ஒழுக்கம் முக்கியம்.
மனம் தேவையற்ற எண்ணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
பஞ்சபூதங்களை மதிக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இசை, நடனம், ஓவியம், சிற்பம், தீர்த்தம், மலர்கள், தீபம், தூபம் அனைத்தும் புத்த மதத்தில் உண்டு.
கர்மவினையும் பிறவிகளும் புத்த மதத்தில் உண்டு [காரணம் புத்தர் உண்மையான வேத சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளார்] - வினை அதன் விளைவு பற்றி மனிதன் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நல்வினை - தீவினை என இரண்டையும் பகுத்துப் பிரிக்க நாம் பயிற்சி செய்ய வேண்டும்.வினைப் பலனை அனுபவிக்க எண்ணற்ற பிறவிகள் எடுக்க வேண்டி உள்ளது.
சம்சாரம் என்று வேதவழியில் புத்தமும் கூறுவது என்ன?
.சம்சாரத்தில் இருந்து விடுபட வினைகளை விட வேண்டும்.அதற்கு ஆசைகளை விட வேண்டும்.
நிர்வாணம் - everlasting bliss - பரமானந்த நிலை - அனைத்து வினைகளில் இருந்தும், ஆசைகளில் இருந்தும், சம்சார சுழற்சியில் இருந்து விடுபடுவதே நிர்வாணம். [அனைத்தையும் கழற்றுதல்] - இதுவே மனித வாழ்வின் குறிக்கோள் - இதையே முக்தி-மோக்ஷம்-வீடுபேறு என்கிறோம்.
இறைவன் என்பது தண்டனை கொடுப்பதற்கு அல்ல.
த்யானம் என்பது உள்ளார்ந்து நம் மனதின் ஓட்டத்தைக் கண்கானிப்பதே ஆகும்.
ஒவ்வொரு பொருளையும் தூய்மையுடனும் கவனத்துடனும் மனிதன் கையாளும் போது அவனுள் சீரான எண்ணங்கள் வரும். [outer order brings the inner order]
ஒவ்வொரு செயலிலும் நாம் மகிழ்ச்சியையும் பூரணத்துவத்தையும் உணர வேண்டும்.
நாம் என்ன செய்கிறோம் என்பதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
உணவு, த்யானம், யோகா, மிகவும் தூய்மையுடன் உள்ள பொருள்கள் ஆகியன மனதை விழிப்புணர்வை நோக்கிச் செலுத்தும்.
தங்கம் புத்த மதத்தில் சூரியனைக் குறிக்கும்.அதாவது மிக உயர்ந்த விழிப்புணர்வுடன் இருக்கும் தன்மையைக் குறிக்கும்.அதனால் தான் புத்தர்
சிலைகளைப் பல இடங்களில் தங்கத்தால் மெழுகினர்.
”ஞானம் என்ற ஆச்சாரியனே உண்மையான ஆச்சரியன்.அந்த ஞானமே புத்தம்.அது அல்லாமல் வேறு எதுவும் ஒருவருக்கு ஆச்சாரியன் ஆக முடியாது”
ஒரு குரு மூலம் உனக்கு சொல்லப் பட்ட உண்மைகள் அவருக்குப் பின் உனக்கு அவரது ஸ்தானத்தைப் பூர்த்தி செய்யும்”
கூடிய வரை குருவின் முன்னிலையில் சந்தேஹங்களை நிவர்த்தி செய்து கொள்க!
நமக்குள்ளும், ஒருவருக்கு ஒருவருக்கும் இடையே ஆன விச்சாரணம் மிகவும் மிக்கியம், அது ஞானத்தையும் விழிப்புணர்வையும் பலப்படுத்தும்.
குருவின் முன்னிலையில் மனதில் எல்லாம் புரிந்தது போலவே இருக்கும்.அது உண்மையல்ல!
நமது முன்னேற்றத்துக்கும் ஆத்ம ஞானத்துக்கும் முக்திக்கும் நாம் தான் முயற்சிக்க வேண்டும்!
புத்தமதத்துக்கும் வேத மார்கத்துக்கும் ஒரே ஒரு பெரிய வேற்றுமை என்ன?
ப்ரபஞ்சத்தில் நிகழும் அனைத்து செயல்களுக்கும் மூல காரணமான பரம்பொருளாகிய ப்ரஹ்மம் இருப்பதை புத்தர் வெளிப்படையாக வாய்விட்டுச் சொல்லவில்லை.அதை மனிதன் தன் சுயமுயற்சியாலேயே உணர வேண்டும் என்று விட்டுவிடுகிறார்.ஆனால் அதை அவருக்குப் பின்னால் வந்த குருமார்கள் கண்மூடித்தனமாக இருந்து விட்டனர்.அந்த ப்ரஹ்ம சத்தியத்தை வெளிப்படையாக உணர்த்த பக்தி மார்க்கம் இந்து சமயத்தில் பக்தர்களால் கொண்டு வரப்பட்டது.அதையும் மக்கள் உணர்ந்ததால் தான் தமிழகத்தில் புத்தம் மாறியது.பரிபூர்ண ஞான மார்கத்தை புத்தர் போதித்தார்.அவர் தன்னுள் ப்ரஹ்மத்தை உணர்ந்தார்.அதனால் தான் அவரும் அவதார புருஷன் ஆனார்.
மக்கள் அனைவருக்கும் ப்ரஹ்ம சத்தியத்தினை அவருக்குப் புரியும் மொழியில் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுக.
எதையும் ஆழ்ந்த ரஹஸ்யமாக மறைத்து வைப்பதில் பயனில்லை.
பிறப்பால் உயர்ந்த நிலை வராது.வாழ்க்கையை உயர்ந்த நிலையில் இட்டுச் சென்று தன்னுள் ப்ரஹ்மத்தை உணர்வதாலேயே உயர்நிலையை ஒருவன் அடையமுடியும்.
ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தன்னுள் தொடர்புபடுத்தி விழிப்புணர்வு நிலையில் காணும் உள்ளார்ந்த பார்வையை வளர்த்துக் கொள்க.
அப்போது அனைத்தும் ஒன்றே என்ற ஏக ப்ரஹ்ம தத்துவம் விளங்கும்.அதன் மூலம் ”தான்” ”நான்” ”எனது” என்ற தன்னலம் ஒழிய அனைத்து ஜீவன்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் தூய அன்பும் உண்டாகும்.
அனைத்து ஜீவன்களிடத்தும் மேற்கூறிய வண்ணம் அன்பை லயம் - tune செய்யும் போது சாந்தியும் அஹிம்சையும் தானாக உலகில் உருவாகி நிலைக்கும்.
த்யானம் என்பது உடலையும் மனதையும் ஒருமுகம் செய்து தன்னுள் ப்ரஹ்மத்தைப் பார்த்தல் ஆகும்.
மூச்சுப் பயிற்சிகள் மூலம் மனதை ஒருமுகம் செய்து, அதன் போக்கை கவனிக்கும் பழக்கம் தன்னுள் தன்னைக் காண உதவும் ஒரு வழி ஆகும்.
”ஆசை” என்ற தன்மை நம்முள் நம்மால் உருவாக்கிக் கொள்வதே ஆகும்.
மனதிற்கு அடுத்த நிலை விழிப்புணர்வே நம்முள் நம்மை அறிய உதவுகிறது என்பதை அவருக்குப் பின் வந்தவர்கள் அறியாமையினால் மறுத்தனர்.
மந்த்ர ஸ்துதிகள் மூலம் உடலும் மனமும் ஒருங்கிணையும், விழிப்புணர்வை நோக்கிப் பயணிக்கும்.
கட்டுப்பாடு அற்ற தவறான புலன் இச்சை, சூது, கள்ளத் தொடர்புகள், போதை, திருடுதல், பொருள் சேர்த்துக் குவித்தல், கொல்லுதல், பொய்மை ஆகியன நம்முள் ஒழிய பயிற்சிகள் தேவை.
எப்போதும் நடந்து முடிந்த தேவையற்ற விஷயங்களைப் பற்றியே எண்ண வேண்டாம்.
எப்போதும் எதிர்காலக் கனவுலகில் வாழ வேண்டாம்.
இப்போது என்ன செய்கிறோம் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிகம் பேசுவதைத் தவிர்த்துக் குறைத்துப் பேசி அதையும் பயனுள்ளதாக ஆக்குக.
”மனதால் நீ என்னவாக உன்னை பாவித்து வாழ்கிறாயோ அப்படியே உன் வாழ்க்கையும் நிகழும்.”
சுயநலம் என்ற அழுக்கை அகற்ற பெருமுயற்சி செய்க.
ப்ரபஞ்சத்தின் கோடானுகோடி பொருள்களில் ”நமது” என்று எதையுமே தன்னலச் சொத்தாக இயற்கைக்கு மாறாகக் கொள்ளுதல் இயலாது.
நமது எண்ணமே நாம். நமது எண்ணங்களின் அடிப்படியில் நம் உலக வாழ்க்கை அமையும்.
ஒரு தீபம் ஆயிரம் தீபங்களை ஏற்ற வல்லது.அதனால் அத்தீபத்தின் சுடரின் ஒளியோ சக்தியோ குறைவதில்லை.எனவே மனமார சேவை செய்க.
உண்மை சத்தியத்தை மறைக்கவே முடியாது.அது சூரிய சந்திர பூமியை மூடிமறைப்பது போன்றதாகும்.
சந்தோஷமும் அமைதியும் நமக்குள் நம்மால் ஏற்படுத்திக் கொள்வதே ஆகும்.அதை வெளியில் யாரிடத்திலும் எப்பொருளிலும் தேடாதே!
வெறுமனே த்யானம் மூலம் ப்ரஹ்ம தத்துவத்தை உணர்தல் அனைவருக்கும் ஏற்றதல்ல, அன்றாட எதார்த்த வாழ்க்கையில் மனதின் போக்கை எப்படி பக்தி மூலம் கையாள்வது என்பதை ஆழ்வார்களும் நாயன்மார்களும் வேதமார்க்கம் மூலம் உணர்த்தினர்.
இறைவன் என்ற தனிப்பொருள் தனது இன்ப துன்பங்களுக்குக் காரணம் ஆகாது.
பொருள் மீது பற்று வைத்து எதார்த்த வாழ்க்கையை வாழ்பவருக்கு த்யானம் என்பது அதைச் செய்யும் வேளையில் மட்டுமே அமைதி தரும்.ஆனால் பொருள் மீதான வாழ்க்கையைக் கடந்தவர்களுக்கு மட்டுமே புத்தர் சொன்ன த்யான வழி முக்திக்குக் கைகூடும்.
By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/