Sakthi Foundation
Feedback from Mr. Karunanithi (Chennai)
About Sendurai center – September 2015
- செந்துறை மையத்தை பார்வையிட்டது எனக்கு மிகவும் அருமையான ஒரு அனுபவமாக இருந்தது.
- நான் மையத்தின் உள்ளே நுழைந்தவுடன் குழந்தைகள் வாழ்த்து அட்டைகளுடன் என்னை வரவேற்ற விதம் மிக நன்றாக இருந்தது.
- என் மனதை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால் ஒரு மணி நேர பூஜை முடியும் வரை இந்த வயது குழந்தைகள் இவ்வளவு அமைதியாக அமர்ந்து கவனித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
- இந்த சிறு வயதில் குழந்தைகளிடம் காணப்பட்ட கட்டுப்பாடு என்னை மிகவும் கவர்ந்தது.
- குழந்தைகள் பூஜை பொருட்களை சரியாக பயன்படுத்திய விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
- இந்த மையத்தில் கொடுக்கப்படும் சுதந்தரம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல ஒரு எதிர்காலம் உண்டு.
- வெறும் கல்வி என்பது மட்டுமல்லாமல் கலாச்சாரத்தோடு கூடிய கல்வி என்பதன் அடித்தளம் இங்கு அமைக்கப்பட்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
- திரு. சாந்தி மற்றும் ஹேமா அவர்கள் செய்த ஐவகை நிலங்களைப் பற்றிய presentation மிக அருமையாக இருந்தது. ஐவகை நிலங்கள் பற்றி குழந்தைகளின் வயதுக்கேற்ற தகவல்களை life example – உடன் காண்பித்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகை நிலங்களையும் நாம் பராமரிக்காமல் விட்டால் அது பாலையாக மாறிவிடும் என்பதை குழந்தைகளுக்கு அருமையாக எடுத்துக்கூறியது மிக நன்றாக இருந்தது.