மயிலாப்பூர் லஸ் சர்ச்
லஸ் கார்னர்
சென்னை வாசிகளுக்கு மயிலாப்பூர் பகுதியில் மிகவும் ப்ரபலமான போக்குவரத்து நெரிச்சல் மிக்க இடம்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி லஸ் சர்ச் அமைதியாகத் தன் பெருமையைத் தன்னடக்கத்துடன் உள் வைத்து நிற்கிறது.
தமிழகத்திலேயே இதையே மிக மூத்த ஐரோப்பிய கலைப்பாணி சர்ச் என்கிறார்கள்.
தரங்கம்பாடியில் கூட கி.பி பதினாறாம் நூற்றாண்டில் தான் டேனிஷ் சர்ச் வந்தது.
கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் கேரளா வந்து கிறிஸ்துவத்தைப் பரப்பிய போர்த்துகீஸ் தேசத்து லெஸ்பர்ன் நகரப் பாதிரிகள் எட்டு பேர் தாமஸின் ஜீவ சமாதியை தரிசிக்க மரக்கப்பலில் பயணம் செய்து மயிலைப் பகுதிக்கு வந்த போது புயலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
தெய்வாதீனமாகத் தாம் தப்பித்ததை எண்ணி அன்னை மேரிக்கு இங்குள்ள அடர்ந்த வனம் ஒன்றில் கூரைக் கொட்டகைக் கோயிலை எழுப்பினர்.அதுவே ”காட்டு மாதா கோயில்” என்று பல காலம் மதராஸ் மக்கள் அழைத்த லஸ் கார்னர் சர்ச்.
லஸ் என்றால் ”ஒளி”.
அன்னையின் அருளால் அறியாமை இருள் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதிரிகள் அன்னையை ”லஸ் மேரி” என்றே அழைத்தனர்.
இன்றுள்ள சர்ச் கி.பி 1516 ஆம் ஆண்டு பெத்ரோ டே அடங்கியா என்ற பாதிரியாரால் எழுப்பப் பட்டது.
___________________________________________________________