மதராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்

மதராஸின் அழகிய கட்டிடங்கள் ஒரு புறம்.
அதே வேளையில் பாரத தேசத்தின் கலைகளையும் ஆங்கிலேயர் அதிகம் ரசித்து மதித்தும் உள்ளனர்.

தன் தேசத்து ஓவியக் கலையை, வண்ணக்கலவைக் கலையை, சிற்பக் கலையை இந்தியனும், மதராஸ் வாழ் ஆங்கிலேயனும் கற்பதற்காகவே கி.பி 1850ஆம் ஆண்டு சர்ஜன் அலெக்ஸேண்டர் ஹன்ட்டர் மதராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற தரமான பள்ளியை ப்ராட்வேயில் ஆரம்பித்தார்.

ஆனால் கி.பி 1852ல் மதராஸ் அரசு இப்பள்ளியைக் கைக்கொண்டு மதராஸ் ஸ்கூல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ் என்று மறு பெயர் சூட்டிவிட்டது. அவ்வாண்டு தான் இன்றுள்ள கட்டிடத்துக்குப் பள்ளி மாற்றப்பட்டது.

இன்று சென்ட்ரல் - பூந்தமல்லி சாலையில் மிகத் தொன்மை மிக்க வளாகத்துள் தேசத்தின் பல ஓவியக் கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பெருமை Madras school of artsக்கு உண்டு!

ஆரம்ப காலத்தில் லண்டன் ராணியின் அரண்மனைக்குத் தேவையான அழகிய கைவைனைப் பொருட்கள், அறைக்கலன்கள் இங்கு தான் தயார் ஆயின.