மிண்ட் ஸ்ட்ரீட்
மதராஸின் மிக முக்கியமான, பழமையான பகுதிகளில் ஒன்று மின்ட் சாலை.அதில் தான் மின்ட் மருத்துவக் கல்லூரி உள்ளது.
இதுவே அக்கால மதராஸின் நீளமான சாலை என்பர்.பூவிருந்தவல்லி சாலையையும் பார்க் டெளனையும் இணைக்கிறது.மேலும் மிக முக்கியமான தொழில்கள் இச்சாலையில் காலம் காலமாக நிகழ்கின்றன.
கம்பெனியின் துணிகளை ப்ளீச் செய்ய, வெளுக்க, சாயமேற்றத் தேவையான தெலுங்கு வண்ணார்களையும், தெலுங்கு துபாஷிகளையும் அக்காலத்தில் இங்கு அதிகம் குடியேற்றியது கோட்டை.அதன்பின் கி.பி 1740 வாக்கில் குஜராத்தின் செளராஷ்டினரும் மார்வாடிகளும் இங்கு குடியேறினர்.துணி வியாபாரம், சில்லரை வியாபாரங்கள், கொடுத்து வாங்கல், வட்டித் தொழில் என்று இன்று வரை மின்ட் பகுதி சதா சுறுசுறுப்பாகவே உள்ளது.
கி.பி 1841 - 1842ல் மதராஸ் ஆங்கிலேய அரசு தன் நாணயங்களை அச்சிடும் தொழிற்சாலையை ஜார்ஜ் கோட்டையில் இருந்து இப்பகுதிக்கு மாற்றி ”மிண்ட் ஸ்ட்ரீட்” என்று பெயரிட்டது.
அதன்பின் அத்தொழிற்சாலை ஆங்கிலேயரின் அச்சுக்கூடமாக மாறி விட்டது.
மதராஸின் மிகத் தொன்மையான திரையரங்கம் ரகுபதி வேங்கடய்யா ஆரம்பித்த க்ரெளன் டாக்கீஸ். அதுவும் இச்சாலையில் தான் உள்ளது.
தமிழின் முதல் படமான காளிதாஸ் இங்கு தான் முதன்முதலில் டிக்கட் வாங்கப்பட்டு வெளியானதாம்.
மார்கழி இசை விழாவுக்குப் பெயர் போன மதராஸில் முதன்முதலில் கச்சேரிக்கு டிக்கட் விற்ற முதல் இடம் இச்சாலை தான்.தொண்டை மண்டலம் துருவ வேளாளர் பள்லியில் இசை மேதை மஹா வைத்யநாத ஐயரின் கச்சேரிக்குக் கி.பி 1880ல் டிக்கட் போட்டனராம்.
கி.பி 1889ல் த ஹிந்து ஹியலாஜிக்கல் பள்ளி இச்சாலையில் ஆரம்பிக்கப் பட்டு தேசப்பிதாவால் பார்வையிடப் பட்டது.
கி.பி 1905ல் மேடை மீது ஏறி திவ்யமான ஹரி கதை சொன்னார் ஸ்ரீமதி சரஸ்வதி பாய்.இவரே தேசத்தின் முதல் ஹரி கதைப் பெண் கலைஞர்.
வள்ளலார் பலகாலம் வாழ்ந்த வீடு, கதவு எண் கூட மாறாமல் இப்பகுதியில் தான் வீராசாமித் தெருவில் அமைந்துள்ளது.
சென்னையில் திருவையாறு என்று இப்போது ஏதோ தம்மால் ஆரம்பிக்கப் பட்டதாகச் சில அமைப்புகளின் கவனத்துக்கு....
தொண்டை மண்டலம் சபையில் கி.பி 1905ல் மிகச் சிறந்த முறையில் அப்போதே திருவையாறு த்யாகராஜரின் ஆராதனை மிக பக்தியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.